உடற்பயிற்சி பெறுவதற்கு ஊக்குவிக்கும் பிட் இந்தியா திட்டம் தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்றதையடுத்து, நாடு முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்கள், உடற்பயிற்சியில் சிறந்து விளங்குபவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி காணொலி காட்சி மூலம் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார்.
அதில் விராட்கோலியிடம் மோடி, கிரிக்கெட் வீரர்களுக்கு யோ-யோ பயிற்சி அளிக்கப்படுவது குறித்து அறிந்தேன். அந்த பயிற்சி எப்படி அளிக்கப்படுகிறது? கேப்டனும் இந்த பயிற்சியில் தேர்ச்சி பெற வேண்டுமா என கேள்வி கேட்டார்.
அதற்கு பதிலளித்த கோலி, வீரர்களின் உடல் தகுதிக்கு இந்த தேர்வு மிக அவசியம். உலக தரத்திலான பயிற்சி ஒப்பிடும்போது நமது அணிக்கு உடற்பயிற்சி குறைவுதான். அதை யோயோ பயிற்சி மூலம் ஊக்குவிக்கிறோம் என கூறினார்.
மேலும் சில பயிற்சிகள் குறித்து மோடிக்கு கோலி விவரித்தார். அதேபோல் இதுபோன்ற பயிற்சிகளில் தோல்வியுற்றால் என்னால்கூட இந்திய அணியில் இடம்பெற முடியாது என கூறினார். இந்த யோயோ பயிற்சி அனைவரையும் அனைத்து விதத்திலும் உடலை வலுவாக வைக்க ஊக்குவிக்கிறது என குறிப்பிட்டார்.