Home செய்திகள் இந்தியா தொடரும் விவசாயிகள் போராட்டம்: இழுபறியில் பேச்சு வார்த்தை...!

தொடரும் விவசாயிகள் போராட்டம்: இழுபறியில் பேச்சு வார்த்தை…!

தொடரும் விவசாயிகள் போராட்டம்: இழுபறியில் பேச்சு வார்த்தை…!

வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிராகப் போராடி வரும் பஞ்சாப், ஹரியானா விவசாயிகளிடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், விவசாய சங்கப் பிரதிநிதிகள் இடையே நாளை (டிச.03) 4ஆம் கட்டமாக மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அத்தியாவசியப்பொருட்கள் திருத்தச் சட்டம் 2020 ((Essential Commodities (Amendment) Act 2020)); விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக ( மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் ((Farming Produce Trade and Commerce (Promotion and Facilitation) Act 2020)); விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) (( The Farmers (Empowerment and Protection) agreement on Price Assurance)) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020 ஆகிய மூன்று வேளாண் திருத்தச் சட்டங்கள் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டது.

இந்த மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களை பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாக எதிர்த்தனர். இதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் செப்.27 ஆம் தேதி மாலை இந்த மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தார்.

இந்நிலையில் இந்த 3 புதிய வேளாண் திருத்தச் சட்டங்களுக்கும் விவசாயிகளுக்கு எதிராகவும், கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாகவும் இருப்பதாக குற்றம்சாட்டி, பஞ்சாப், ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் பல மாதங்களாக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அதன் தொடர் நீட்சியாக, ‘டெல்லிக்குச் செல்’ என்னும் பொருளில் அமைந்த ‘டெல்லி சலோ’ போராட்டத்தை விவசாயக் குழுக்கள் அறிவித்தன.

இதனைத் தொடர்ந்து டெல்லியை நோக்கி பஞ்சாப், ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் புறப்பட்டனர். அவர்களை டெல்லிக்குள் அனுமதிக்க எதிர்ப்புத் தெரிவித்து ஹரியானா அரசும் டெல்லி அரசும் பல்வேறு தடுப்புகளை அமைத்தனர். கண்ணீர்ப் புகை குண்டுகளையும் வீசியெறிந்தனர். அந்த தடையெல்லாம் மீறி, விவசாயிகள் டெல்லியை நோக்கி புறப்பட்டனர். இதனால் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, டெல்லியின் புறநகர்ப்பகுதியான புராரியில் அமைந்துள்ள நிரங்கரி மைதானத்தில் அமைதியாக விவசாயிகள் போராடிக்கொள்ள அனுமதியளிக்கப்பட்டது.

இதனையடுத்து போராட்டத்தின் ஆறாவது நாளான நேற்று(டிச.01) பிற்பகல் 3 மணிக்கு வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங்குடன் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் பஞ்சாபில் உள்ள 32 சங்கங்களின் பிரதிநிதிகள், ஹரியானாவில் உள்ள விவசாய சங்கம், அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்பு கமிட்டி, ராஷ்டிரிய கிஷான் மஸ்தூர் சங்கதன் என மொத்தம் 35 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் வேளாண் திருத்தச் சட்டங்களில் இருக்கும் பிரச்னைகள் குறித்து விவாதிக்கவும் தீர்வு அமைக்கவும் புதிதாக 5 பேர் கொண்ட குழுவை அமைக்கலாம் என்றும்; அதில் இடம்பெறும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளை முன்மொழியுமாறும் மத்திய அரசின் சார்பில் பரிந்துரைக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த காலங்களில் இவ்வாறு அமைக்கப்பட்ட குழுக்கள் மூலம் உரிய தீர்வு எட்டப்படாததைக் காரணம் காட்டி, விவசாயிகள் இந்தக் குழுவை அமைக்கவேண்டாம் என மறுப்புத்தெரிவித்தனர்.

நேற்று(டிச.01) பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கிய இந்தப் பேச்சுவார்த்தையானது, மாலை 6:45 மணி வரை நடந்தது. அப்போது உடன்பாடு எட்டப்படாத நிலையில், அங்கு வழங்கப்பட்ட தேநீரைகூட அருந்தாமல் விவசாய சங்கப் பிரதிநிதிகள் வெளியேறினர்.

இதையடுத்து மீண்டும் பேச்சுவார்த்தை நாளை (டிச.03) நடத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

பஞ்சமே இல்லாமல் “ரத்தம், கத்திக்குத்து, ஆபாசம், கெட்டவார்த்தை”: குருதிக்களம் எப்படி இருக்கு?

வட சென்னை என்றாலே கொலை, ரத்தம், பகை என தொடர்ந்து வன்மத்தை பார்வையாளர்கள் மனதில் பதிய வைக்கும் பழக்கம் தமிழ் திரையுலகில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதில் குருதிக்களம் என்ற தொடர் ஒருபடி...

பழைய வாகனங்கள் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு: புதிய வரி கொண்டு வரும் மத்திய அரசு!

சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் உள்ள பழைய வாகனங்கள் மீது பசுமை வரி விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு நகரங்களில் பெரும் பிரச்சனையாக நிலவி வருகிறது. புதிய...

மாண்புமிகு விஜய்சேதுபதி அவர்களே: கையில் மைக் வைத்திருப்பவர்கள் எல்லாம் உங்கள் எதிரியா?

வளர்ச்சிக்கு தேவைப்படும் பத்திரிகையாளர்கள் உங்களை சுற்றி வலம் வரும் கேள்விகளை கேமராவின் முன்பு கேட்கும்போது எதிரிகளா? தென்மேற்கு பருவக் காற்றில் தொடங்கி மாஸ்டர் வரை விஜய்சேதுபதி தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும் மெய்சிலிர்க்க வைக்கும் விதமாகவே...

இந்தியாவை உலுக்கியா அர்னாப் கோஸ்வாமி வாட்ஸ்அப் சாட்டிங்: அரசின் மௌனம் எதற்கு- காங்கிரஸ் கேள்வி?

ரிபப்ளிக் தொலைக்காட்சி சேனலின் தலைமை செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மற்றும் பார்க் அமைப்பின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி பார்த் தாஸ்குப்தா ஆகியோரின் மீது டிஆர்பி மோசடி வழக்கில் மும்பை காவல்துறை...

Related News

இது எங்க எல்லை: அருணாசலப் பிரதேசத்தில் சீனா உருவாக்கிய கிராமம்!

அருணாசலப் பிரதேச மாநிலத்தில் உருவாக்கப்பட்டுள்ள கிராமம், தங்கள் நாட்டின் எல்லைக்குள் இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. சீன அரசு, வறுமை ஒழிப்பு கிராமங்கள் என்ற பெயரில் அந்நாடு முழுவதும் கிராமங்களை உருவாக்கி வருகிறது. இதன்படி, சுமார்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here