Home செய்திகள் இந்தியா கொரோனா தடுப்பூசி போடும் போதும் ஒரு அரசியல்: மோடி உடனிருந்த நாலு பேர்?

கொரோனா தடுப்பூசி போடும் போதும் ஒரு அரசியல்: மோடி உடனிருந்த நாலு பேர்?

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள, கொரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், இந்தியாவில், சீரம் இன்ஸ்டிடியூட்டின் கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

முதற்கட்டமாக, இந்த தடுப்பூசிகள் கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் முன் களப்பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து, 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், இணை நோய்களை கொண்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்தநிலையில், 60 வயதுக்கு மேற்பட்டவர் என்ற அடிப்படையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் நரேந்திர மோடி கோவாக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்டார். 4 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேச சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், புதுச்சேரியைச் சேர்ந்த நிவேதா, அசாமின் பாரம்பரிய துண்டு அணிந்திருந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தினார். அப்போது, கேரளாவைச் சேர்ந்த ரோசம்மா அனில் உடனிருந்தார். இது, சட்டப்பேரவை தேர்தலுக்கான செய்தியாக பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து, இதுதொடர்பாக ட்விட்டரில் செய்தி பதிவிட்டுள்ள பிரதமர் மோடி,” எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துக் கொண்டேன். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்த எங்கள் மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் குறைந்த நேரத்தில் பணியாற்றியுள்ளனர்.

தகுதியுள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டுகோள் விடுக்கின்றேன். அனைவரும் ஒன்றிணைந்து, இந்தியாவை கொரோனா இல்லாத நாடாக மாற்றுவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here