சுத்தி சுத்தி ஆட்சியமைக்கும் பாஜக: இடைத்தேர்தலில் அமோக வெற்றி- மபி.,யில் தொடரும் பாஜக
மத்தியபிரதேசத்தில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் பாஜக அதிக தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை தக்கவைத்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் 28 சட்டப்பேரவைக்கான இடைத்தேர்தல் கடந்த நவம்பர் 3 ஆம் தேதி நடைபெற்றது. மத்திய பிரதேசத்தில் மொத்தம் 230 தொகுதிகள் உள்ளது. 107 தொகுதிகளை தன்வசம் வைத்திருந்த பாஜக ஆட்சியை கைப்பற்ற 9 தொகுதிகளில் தேவை என்ற நிலை இருந்தது. அதேபோல் 88 தொகுதிகளை தன் வசம் வைத்திருந்த காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் வெல்ல வேண்டிய தேவை ஏற்பட்டது.
காங்கிரஸ் கட்சிக்கு கூட்டணி பலமும் இருந்தது எனவே 21 தொகுதிகளை வெற்றிப் பெற்றால் கூட பகுஜன் சமாஜ்வாதி மற்றும் சுயேட்சை கட்சிகளோடு கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றிவிடலாம் என்ற நிலை இருந்தது.
இந்த நிலையில் இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகின. வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டதில் இருந்து பாஜக முன்னிலை வகித்தே வந்தது. அதேபோல் 28 தொகுதிகளில் 19 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது. காங்கிரஸ் முட்டிமோதி 9 தொகுதிகளை கைப்பற்றியது.
Checkout for BJP News in Tamil
இந்த இடைத்தேர்தல் வெற்றியின் மூலம் பாஜக மத்தியபிரதேசத்தில் நிலையான ஆட்சி அமைத்துள்ளது. இதில் நீர்வளத்துறை அமைச்சரும் பாஜக வேட்பாளருமான பிரேம்சந்த் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரைவிட 53264 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று சாதனை படைத்துள்ளார். இந்த வெற்றியை பாஜகவினர் உற்சாகத்தோடு கொண்டாடி வருகின்றனர்.