கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர கடந்த மார்ச் மாதத்தில் இருந்து இந்தியாவில் ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனா பரவலை குறைப்பதற்காக போடப்பட்ட ஊரடங்கு, பொருளாதாரத்தை முடக்கி விட்டது. இதனால், தொழில்துறையினரின் கோரிக்கையை ஏற்று, பொதுமுடக்கத்தில் பல்வேறு தளர்வுகள் மத்திய, மாநில அரசுகளால் வழங்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, அலுவலகங்கள், தொழிற்சாலைகள், உற்பத்தி நிறுவனங்களில் பணியை தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், கொரோனா பரவல் கணிசமாக குறைவதற்கு முன்பே பொதுமுடக்கத்தில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதால், அலுவலகங்களில் தொற்று பரவல் தொடங்கியுள்ளது.
இந்தநிலையில், அலுவலகங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து ஐசிஎம்ஆர் விஞ்ஞானி பிரதீப் கவுர் டுவிட்டரில் செய்தி பதிவிட்டுள்ளார்.
அதில், “கடந்த மாதம் முதல் பணியிடங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதனால், பணியிடங்களில் தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
1.அனைவரும் 100% கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்
2.சமூக இடைவெளியுடன் பணியிடங்களை சீரமைக்க வேண்டும்
3.பல இடங்களில் சானிடைசர்களை வைக்க வேண்டும்.
4.ஒரே நேரத்தில் கேண்டீனில் அதிக நபர்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும்.
5. அலுவலகங்களில் கொரோனா கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும்.
6. அறிகுறி உள்ளவர்களை ஆரம்பத்திலேயே கண்டறிய வேண்டும். மேலும், அறிகுறி உள்ளவர்கள் பணியிடத்திற்கு வராமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
7. அறிகுறிகள் உள்ளவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கட்டாயமாக பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.
8. சம்பள குறைப்பு இல்லாமல் வீட்டு தனிமைப்படுத்தலை அனுமதிக்க வேண்டும்.
9. உள் அரங்க கூட்டங்களை அனுமதிக்கக் கூடாது.
10. இடைவேளை மற்றும் மதிய உணவு வேளைகளில் குழுக்களாக அமர அனுமதிக்கக் கூடாது.” என பதிவிட்டுள்ளார்.
Past month has seen many workplace clusters, there is a lot we can do to make workplaces safer 1. Implement 💯 % mask policy 2. Enable social distancing by reorganising workspaces 3. Provide hand sanitisers in multiple places 4.Limit the number of people using cafeteria at a time
— Prabhdeep Kaur (@kprabhdeep) August 25, 2020