லடாக் எல்லையில் சீன ராணுவும் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் உயிரிழந்தவர்கள் குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
அணு ஆயுத பலம் கொண்ட இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லையில் போர் பதற்றம் அதிகரிதத்து வருகிறது. லடாக் எல்லையில் சீனா தனது போர் விமானங்களை குவித்து வருவதோடு அதிகப்படியான சீன விமானங்கள் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. இதையடுத்து இந்தியாவும் தனது எல்லையில் போர் விமானங்களை குவித்து வருகிறது.
இந்த நிலையில் தேசிய சைபர் பாதுகாப்பு அமைப்பு உள்துறை அமைச்சகத்துக்கு அறிவிப்பு ஒன்று வெளியிட்டது. அதில் சீன செயலிகளை நீக்குதல் அல்லது புறக்கணித்தல் வகையில் மக்களுக்கு அறிவுறுத்த வேண்டும் எனவும் சீன செயலிகள் மூலம் இந்தியர்களின் தகவல் திருடப்படலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
அதன்காரணமாக 130 கோடி இந்தியர்களின் தனியுரிமையைப் பாதுகாத்தல், இந்திய இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும், பாதுகாப்பும் அச்சுறுத்தலாக இருப்பதால் மத்திய அரசு 59 சீன செயலிகளை ரத்து செய்து அறிவித்தது. இந்தியாவின் இந்த செயல் கவலை அளிக்கும் விதமாக உள்ளது என சீன தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.
இது ஒருபுறம் இருக்க மறுபுறம் இந்திய தொலைக்காட்சிகள், ஊடகங்கள், செய்தித்தாள்கள், இணையதளங்களை சீன அரசு முடக்கியுள்ளது. சீனாவில் வெளிநாட்டு இணையதளங்களை பயன்படுத்த முன்னதாகவே தடை விதிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் விபஎன் பயன்படுத்தி பயன்படுத்தி வந்த நிலைியல் தற்போது இதற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இணைய கட்டுபாடுகளை தளர்க்கும் வகையில் விபிஎன் பயன்படுத்தி சில வெளிநாட்டு இணையதளங்களை சீனர்கள் பயன்படுத்தி வந்தனர், தற்போது அதிநவீன தொழில்நுட்பங்களை களமிறக்கி விபிஎன் பயன்படுத்திக் கூட திறக்க முடியாத நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.
அதேபோல் சீனா சமூகவலைதளத்தில் வெய்போ பிரதானமாக அதிகார்பூர்வமாகவும் திகழ்வது வழக்கம். அதில் அனைத்து தலைவர்களும் கணக்கு வைத்திருப்பார்கள், இதில் இந்திய பிரதமர் மோடி கணக்கை சீனா சுத்தமாக நீக்கியுள்ளது, தற்போது வெய்போ மோடி கணக்கு காலிகணக்காக எந்த பதிவும் இன்றி காட்டப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.