முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி இயற்கை எய்தினார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தங்கியிருந்த வேதா நிலையம் நினைவு இல்லமாக மாற்ற முடிவெடுத்து 2017 ஆம் ஆண்டில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முடிவை ஆதரித்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவசரச் சட்டம் பிறப்பித்தார்.
ஜெயலலிதா தங்கியிருந்த சுமார் 24 ஆயிரத்து 300 சதுர அடி பரப்பளவு கொண்ட வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்ற கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஒன்று ஜெயலலிதாவின் அண்ணன் பிள்ளைகளான தீபாவும் தீபக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கின் நோக்கம் எந்த காரணம் கொண்டும் வேதா நிலையம் பொதுசொத்தாக மாறிவிடக்கூடாது என கருத்துகள் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
மறுபுறம் வேதா இல்லத்தை ஜெயலலிதா நினைவு இல்லமாக மாற்றும் நோக்கில் எடப்பாடி பழனிசாமி அரசு ரூ. 68.9 கோடியை சென்னை சிவில் நீதிமன்றத்தில் இழப்பீட்டுத் தொகையாக செலுத்தியது. இந்த தொகை ஜெயலலித்தா செலுத்தாமல் இருக்கும் வரித்தொகைக்கும் அவர்களின் சட்டப்பூர்வ வாரிச்சுக்கும் செலுத்தப்படும் இழப்பீடாக தெரிவிக்கப்பட்டது.
இதில், அனைவரும் அறியப்பட்ட ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு தலைவலியாக உள்ளது. ஏனென்றால் ஜெயலலிதா மீது திமுக சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்ந்த போது வேதா நிலையத்தில் ரைடு நடைபெற்றது. இதில் தங்கம் வெள்ளி என ஏராளமான பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
அப்போது வேதா நிலையம் உட்பட்ட பல பொருட்கள் நீதிமன்றத்தால் முடக்கப்ட்டன. அதை தற்போது வரை ஜெயலலிதா தரப்பினர் அனுபவிக்கலாமே தவிர யாரும் சொந்தம் கொண்டாட முடியாத நிலை நீட்டித்த வண்ணம் உள்ளது.
இன்னொரு பக்கம், உச்சநீதிமன்றம் சொத்து குவிப்பு வழக்கில் சிக்கிய ஜெயலலிதா சொத்துகளை அரசு எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. அப்படி இருக்கையில் அரசு எதற்கு இழப்பீடு செலுத்த வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதெல்லாம் ஒதுக்கிவைத்து பார்த்தால் ஜெயலலிதா உற்றத்தோழியான சசிகலா ஜெ.,வுடன் போயஸ்கார்டன் இல்லத்தில் தங்கியிருந்தார். அவரும் அந்த ஊழல் வழக்கில் சிக்கி பெங்களூர் சிறையில் சிறைவாசம் அனுபவித்து வருகிறார். சசிகலாவுக்கு சொந்தமான பல உடைமைகள் வேதா நிலையத்தில் உள்ளது என வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்ததோடு அதில் சசிகலாவுக்கு சொந்தமான உடைமைகள் உள்ளது எனவும் உறுதி செய்தனர்.
ஆளுங்கட்சி என்ற முறையில் தமிழக அரசு சென்னை சிவில் நீதிமன்றத்தில் டெபாசிட் செய்த தொகையை வைத்து வேதா இல்லம் அரசுடைமையாக மாற்றப்பட்டது. இதுகுறித்து அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதில் வேதா இல்லத்தில் 4 கிலோ தங்கம், 601 கிலோ வெள்ளி, 11 டிவிக்கள், 10 பிரிட்ஜ், 38 ஏசி உள்ளிட்ட 32 ஆயிரத்து 721 பொருட்கள் உள்ளது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அரசிதழ் வெளியீட்டின் மூலம், பல்வேறு சிக்கலுக்கு நடுவில் விரைவில் வேதா இல்லம் அரசுடைமையாக மாற்றப்பட்டு நினைவு இல்லமாக மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Pic courtesy: Social Media