Home செய்திகள் அரசியல் எங்க போனாலும் ப்ளூ சட்டை போடும் அண்ணாமலை: காரணம் என்ன தெரியுமா?

எங்க போனாலும் ப்ளூ சட்டை போடும் அண்ணாமலை: காரணம் என்ன தெரியுமா?

பாஜக மாநில துணைத் தலைவரும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான அண்ணாமலை அதிகளவில் நீல சட்டைகளை பயன்படுத்தி வருகிறார்.

தமிழக ஆண் அரசியல்வாதிகள் என்றால், அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது வெள்ளை வேட்டி, சட்டைதான். இந்த டிரஸ் கோடை வெகு சிலரே உடைக்கின்றனர். அதில், ஒருவராக உலா வருபவர் பாஜகவின் மாநில துணைத் தலைவர் அண்ணாமலை. இவர், பெரும்பாலும் நீல நிற சட்டையை அணிந்து வருகிறார்.

தற்போது நாட்டில் பல பிரச்சனைகள் உள்ள நிலையில், யார் எந்த நிறத்தில் உடை அணிந்தால் என்ன? அதில் என்ன முக்கியதுவம் இருக்கிறது? என்ற கேள்வி எழலாம். ஆனால், அண்ணாமலை சாதாரணமான ஆளும் இல்லை. அவரது கட்சி லேசு பட்டதும் இல்லை.

வட மாநிலங்களை ஆட்டி படைக்கும் பாஜக, தமிழகத்தில் காலூன்ற முடியாமல் திணறி வருகிறது. 2021 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் எப்படியாவது தடம் பதிக்க வேண்டும் என்பதற்காக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கட்சிக்குள் இணைக்கப்பட்டவர் தான் அண்ணாமலை. சேர்ந்தவுடன் அவருக்கு கட்சியின் மாநில துணைத் தலைவர் பதவியும் கிடைத்தது.

இந்த சூழலில், தமிழக பாஜகவின் முக்கிய நபரான அண்ணாமலை, ஒரு நிறத்தை தூக்கி பிடிக்கிறார் என்றால், அதை வெறும் விருப்ப நிறம் என்ற அடிப்படையில் கடந்துவிட முடியாது. அப்படி அவர் அதிகம் பயன்படுத்தும் நிறம் நீலம். நீலம் என்பது, தேசிய மற்றும் சர்வதேச அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிறம்.

எங்க போனாலும் ப்ளூ சட்டை போடும் அண்ணாமலை: காரணம் என்ன தெரியுமா?

தேசிய அளவில், நீலம் தலித்துகளின் எழுச்சி நிறமாக பார்க்கப்படுகிறது. நீலம் எப்படி தலித்துகளின் நிறமாக மாறியது என்பதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. நீலம் என்பது வானத்தின் நிறம். பரந்த வானத்தின் கீழ் அனைவரும் சமமே. பாகுபாடு இல்லாத வானத்தை பிரதிபலிப்பதால், தலித்துகள் நீல நிறத்தை பயன்படுத்துவதாக சொல்லப்படுகிறது. மற்றொரு காரணம், அம்பேத்கர் கட்சி கொடியும், அவர் பெரும்பாலும் அணிந்திருந்த கோட்டின் நிறமும் நீலமே.

சரி, இதற்கும், அண்ணாமலைக்கும் என்ன தொடர்பு? பொதுவாக உயர்சாதியினர் மட்டுமே பாஜகவின் வாக்கு வங்கியாக பார்க்கப்பட்டனர். இதை வட மாநிலங்களில் பாஜக மாற்றி எழுதி வருகிறது. ஒரு தலித் தலைவரை நாட்டின் குடியரசு தலைவராக அமர வைத்தது முதல், அம்பேத்கரை கொண்டாடுவது வரை பல நடவடிக்கைகளை பாஜக எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, திராவிட கட்சிகளே தயங்கும் ஒரு விஷயத்தை பாஜக செய்தது. தலித்தான எல்.முருகனை தமிழக பாஜக தலைவராக அறிவித்தது. இந்தநிலையில், தலித் மற்றும் அம்பேத்கரியவாதிகளை குறிவைக்கும் வகையில், அண்ணாமலை நீல நிற சட்டையை அணிகிறாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அண்ணாமலை பிஜேபி
அண்ணாமலை பிஜேபி

சர்வதேச அரங்கில் நீலம் என்பது நீல காலர் வேலைகளை செய்யும் உழைக்கும் வர்க்கத்தை குறிக்கிறது. உழைக்கும் வர்க்கத்தின் மற்றொரு நிறமான சிவப்பை பாஜகவால் கையில் எடுக்க முடியாது. ஏன்னென்றால் அது பாஜகவின் நேர் எதிர் சித்தாந்தமான கம்யூனிசத்தின் நிறம். இதன் காரணமாக, நீலத்தை அண்ணாமலை அரவணைத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

பெரியாரின் கருப்பு சட்டை மூதல் கம்யூனிஸ்டுகளின் சிவப்பு சட்டை வரை அனைத்தையும் தமிழகம் பார்த்திருகிறது, ஆதரித்திருக்கிறது. இந்த சூழலில், அண்ணாமலைக்கு நீல சட்டை கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

லைசென்ஸ்ச புதுப்பிக்கனுமா? இனி ஆர்டிஓ அலுவலகம் செல்ல வேண்டியதில்லை!

வட்டார போக்குவரத்து அலுவலகம் செல்லாமலேயே, 18 சேவைகளை பெற ஆன்லைன் மூலம் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மக்கள் எளிதில் சேவைகளை பெற அனைத்து துறைகளும் டிஜிட்டல் மயமாகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வட்டார போக்குவரத்து...

தீதி Vs மோடிஜீ: மேற்கு வங்கம் யாருக்கு?

மேற்கு வங்கத்தில் வரும் மார்ச் 27ம் தேதி முதல் 8 கட்டங்களாக 294 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மே மாதம் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு...

வாக்காளர்கள் இப்படி வந்தால்தான் வாக்களிக்க முடியும்: தேர்தல் ஆணையம் உத்தரவு!

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டு. அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மறுபுறம் அரசியல் கட்சிகள் தேர்தல் வேலைகளை தொடங்கிவிட்டன. தேர்தலில் வெற்றிப்பெற்று ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என அதிமுகவும், ஆட்சியை கைப்பற்ற...

ஸ்ரீரெட்டிக்கு அடித்த ஜாக்பாட்: அந்த நடிகையின் வாழ்க்கை வரலாறு படத்துக்கு இவுங்கதான் சரி!

தெலுங்கு திரையுலகில் நடிக்க வாய்ப்புக்காக நடிகைகளை பலாத்காரம் செய்யும் பழக்கம் இருக்கிறது என்ற புகார்களோடு தமிழகத்துக்குள் நுழைந்த ஸ்ரீரெட்டி தமிழ் திரையுலகில் விஷால், ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தொடர்ந்து...

Related News

ஏன் 120/80 இருந்தால் நார்மல் ரத்த அழுத்தம்., இது ஒவ்வொருவருக்கும் வேறுபடுமா?

முன்பெல்லாம் 50 வயதுக்கு மேற்பட்ட சில நபர்களுக்கு மட்டுமே ரத்த அழுத்தம் இருப்பதாக கேள்விப்பட்டிருப்போம். தற்போது, 30 வயதுடையவர்கள் கூட பி.பி. இருப்பதாக சர்வ சாதாரணமாக கூறிவிட்டு செல்கின்றனர். இதனால், ரத்த அழுத்தம்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here