Home செய்திகள் அரசியல் தேமுதிக தலைமையில் 3வது அணி? - அதிமுக கூட்டணியில் தொடரும் சிக்கல்!

தேமுதிக தலைமையில் 3வது அணி? – அதிமுக கூட்டணியில் தொடரும் சிக்கல்!

வரும் சட்டமன்ற தேர்தலில் தேமுதிக நினைத்தால் மூன்றாவது கூட்டணியை அமைக்க முடியும் என விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் கூறியுள்ளார்.

2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை அனைத்து கட்சிகளுமே தொடங்கிவிட்டன. தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சர் நாற்காலியை அலங்கரிக்கும் தலைவர் தமிழகத்தின் அடுத்த ஆளுமையாக மாறக்கூடும் என்பதால், அரசியல் கட்சிகள் வியூகங்களை வகுத்து காய் நகர்த்தி வருகின்றன.

நாடாளுமன்ற தேர்தலுக்காக அமைக்கப்பட்ட திமுக கூட்டணி இன்றும் வலுவாக நீடிக்கிறது. ஆனால், ஹாட்ரிக் வெற்றியை குறிவைக்கும் அதிமுகவுக்கு கூட்டணிக்குள்ளேயே குடைச்சல் உருவாகியுள்ளது.

மக்களவை தேர்தலுக்காக கூட்டணி அமைத்த பிறகு, அதிமுக அரசை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக விமர்சிக்காத ராமதாஸ், தற்போது நேரடியாக தாக்கி உள்ளார். மேலும், சட்டமன்ற தேர்தலுக்கு கூட்டணி அமைக்க, துணை முதல்வர் பதவி, கூட்டணி ஆட்சி போன்ற கோரிக்கைகளை முன் வைத்து வருவதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் இதுவரை கூட்டணி ஆட்சி நடைபெறாத சூழலில், இந்தக் கோரிக்கைகள் எல்லாம் நிறைவேறுவது கேள்விக்குறியாக உள்ளது. இதேபோல், பாஜகவுடனும் பல கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன.

இந்த சூழலில், தற்போது தேமுதிகவும் மூன்றாவது அணி அமைப்பது தொடர்பாக பேசி வருகிறது. மதுரை காளவாசல் தனியார் திருமண மண்டபத்தில் தேமுதிக கட்சி நிர்வாகி இல்லத்திருமண விழாவில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஜய பிரபாகரன்,”கேப்டன் உடல்நிலை சீராக உள்ளது. கொரோனா பாதிப்பு தற்போது இல்லை. சட்டமன்றத் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டோம். செயற்குழு, பொதுக்குழு கூட்டி பணிகளை தீவிரப்படுத்துவோம்.

வரும் சட்டமன்ற தேர்தலில் தேமுதிக நினைத்தால் மூன்றாவது கூட்டணியை அமைக்க முடியும் என விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் கூறியுள்ளார். 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை அனைத்து கட்சிகளுமே தொடங்கிவிட்டன. தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சர் நாற்காலியை அலங்கரிக்கும் தலைவர் தமிழகத்தின் அடுத்த ஆளுமையாக மாறக்கூடும் என்பதால், அரசியல் கட்சிகள் வியூகங்களை வகுத்து காய் நகர்த்தி வருகின்றன. நாடாளுமன்ற தேர்தலுக்காக அமைக்கப்பட்ட திமுக கூட்டணி இன்றும் வலுவாக நீடிக்கிறது. ஆனால், ஹாட்ரிக் வெற்றியை குறிவைக்கும் அதிமுகவுக்கு கூட்டணிக்குள்ளேயே குடைச்சல் உருவாகியுள்ளது. மக்களவை தேர்தலுக்காக கூட்டணி அமைத்த பிறகு, அதிமுக அரசை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக விமர்சிக்காத ராமதாஸ், தற்போது நேரடியாக தாக்கி உள்ளார். மேலும், சட்டமன்ற தேர்தலுக்கு கூட்டணி அமைக்க, துணை முதல்வர் பதவி, கூட்டணி ஆட்சி போன்ற கோரிக்கைகளை முன் வைத்து வருவதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் இதுவரை கூட்டணி ஆட்சி நடைபெறாத சூழலில், இந்தக் கோரிக்கைகள் எல்லாம் நிறைவேறுவது கேள்விக்குறியாக உள்ளது. இதேபோல், பாஜகவுடனும் பல கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன. இந்த சூழலில், தற்போது தேமுதிகவும் மூன்றாவது அணி அமைப்பது தொடர்பாக பேசி வருகிறது. மதுரை காளவாசல் தனியார் திருமண மண்டபத்தில் தேமுதிக கட்சி நிர்வாகி இல்லத்திருமண விழாவில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஜய பிரபாகரன்,"கேப்டன் உடல்நிலை சீராக உள்ளது. கொரோனா பாதிப்பு தற்போது இல்லை. சட்டமன்றத் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டோம். செயற்குழு, பொதுக்குழு கூட்டி பணிகளை தீவிரப்படுத்துவோம். தேமுதிக ஆரம்ப காலத்திலலேயே தனித்து களம் இறங்கியுள்ளது. தனித்து நிற்க தேமுதிகவுக்கு எந்த அச்சமும் இல்லை. தனித்து நின்று தேர்தலை சந்தித்து உள்ளோம். வியூகங்கள் மாறும். கட்சிக்கு எது பலமோ அதன்படி செயல்படுவோம். அரசியலில் நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை. கண்டிப்பாக அரசியல் களம் மாறும். திமுக அதிமுகவுக்கு மாற்று தேமுதிக மட்டுமே என்பதை நிரூபித்து காட்டியுள்ளோம். தேமுதிக தவிர்த்து மூன்றாவது அணி என எந்த கட்சியும் சொல்ல முடியாது. தேமுதிக நினைத்தால் மூன்றாவது அணி அமைக்க முடியும். வரும் தேர்தலில் பெரியவர் சிறியவர் என்ற பேச்சுக்கே இடமில்லை. எல்லா தொகுதிகளிலும் கேப்டன் பிரச்சாரம் செய்வார். மக்களை பார்க்க வேண்டும் என்பதே அவரின் விருப்பம். கலைஞர், ஜெயலலிதா இல்லாத இச்சமயத்தில் தனித்த தனித்துவமான தலைவர் இல்லை. அதனால் இது முதல் தேர்தல் போல தான் எடுத்து கொள்ள வேண்டும்." என்றார். இதனால் அதிமுக கூட்டணியில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

தேமுதிக ஆரம்ப காலத்திலலேயே தனித்து களம் இறங்கியுள்ளது. தனித்து நிற்க தேமுதிகவுக்கு எந்த அச்சமும் இல்லை. தனித்து நின்று தேர்தலை சந்தித்து உள்ளோம். வியூகங்கள் மாறும். கட்சிக்கு எது பலமோ அதன்படி செயல்படுவோம்.

அரசியலில் நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை. கண்டிப்பாக அரசியல் களம் மாறும். திமுக அதிமுகவுக்கு மாற்று தேமுதிக மட்டுமே என்பதை நிரூபித்து காட்டியுள்ளோம். தேமுதிக தவிர்த்து மூன்றாவது அணி என எந்த கட்சியும் சொல்ல முடியாது.

தேமுதிக நினைத்தால் மூன்றாவது அணி அமைக்க முடியும். வரும் தேர்தலில் பெரியவர் சிறியவர் என்ற பேச்சுக்கே இடமில்லை. எல்லா தொகுதிகளிலும் கேப்டன் பிரச்சாரம் செய்வார். மக்களை பார்க்க வேண்டும் என்பதே அவரின் விருப்பம்.

கலைஞர், ஜெயலலிதா இல்லாத இச்சமயத்தில் தனித்த தனித்துவமான தலைவர் இல்லை. அதனால் இது முதல் தேர்தல் போல தான் எடுத்து கொள்ள வேண்டும்.” என்றார். இதனால் அதிமுக கூட்டணியில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

அவுங்க மேட்டரில்ல., ஒரே எதிரி இவுங்கதான்., பொறுத்திருந்த பாருங்கள்: டிடிவி அதிரடி

அமமுக ஆட்டம் ஆரம்பம் என்றே கூறலாம். தமிழகம் கர்நாடகா எல்லையில் தொடங்கி சென்னைவரை சசிகலா வந்துகொண்டிருந்த வழியெல்லாம் அவருக்கு கோலகல வரவேற்பு அளிக்கப்பட்டது. அமைதியாக செய்தி பேட்டியில் மட்டும் பார்த்து வந்த அமமுக...

சென்னையில் 10ல் 4 பேருக்கு கொரோனா: ஆய்வில் தகவல்!

சென்னையில் 10ல் 4 பேருக்கு கடந்த காலத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக, ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் கோரத்தாண்டவம் ஆடி வந்த கொரோனா தொற்று பாதிப்பு, தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. மகாராஷ்டிரா மற்றும் கேரளாவை...

லைசென்ஸ்ச புதுப்பிக்கனுமா? இனி ஆர்டிஓ அலுவலகம் செல்ல வேண்டியதில்லை!

வட்டார போக்குவரத்து அலுவலகம் செல்லாமலேயே, 18 சேவைகளை பெற ஆன்லைன் மூலம் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மக்கள் எளிதில் சேவைகளை பெற அனைத்து துறைகளும் டிஜிட்டல் மயமாகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வட்டார போக்குவரத்து...

தீதி Vs மோடிஜீ: மேற்கு வங்கம் யாருக்கு?

மேற்கு வங்கத்தில் வரும் மார்ச் 27ம் தேதி முதல் 8 கட்டங்களாக 294 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மே மாதம் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு...

Related News

அவுங்க மேட்டரில்ல., ஒரே எதிரி இவுங்கதான்., பொறுத்திருந்த பாருங்கள்: டிடிவி அதிரடி

அமமுக ஆட்டம் ஆரம்பம் என்றே கூறலாம். தமிழகம் கர்நாடகா எல்லையில் தொடங்கி சென்னைவரை சசிகலா வந்துகொண்டிருந்த வழியெல்லாம் அவருக்கு கோலகல வரவேற்பு அளிக்கப்பட்டது. அமைதியாக செய்தி பேட்டியில் மட்டும் பார்த்து வந்த அமமுக...

சென்னையில் 10ல் 4 பேருக்கு கொரோனா: ஆய்வில் தகவல்!

சென்னையில் 10ல் 4 பேருக்கு கடந்த காலத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக, ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் கோரத்தாண்டவம் ஆடி வந்த கொரோனா தொற்று பாதிப்பு, தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. மகாராஷ்டிரா மற்றும் கேரளாவை...

லைசென்ஸ்ச புதுப்பிக்கனுமா? இனி ஆர்டிஓ அலுவலகம் செல்ல வேண்டியதில்லை!

வட்டார போக்குவரத்து அலுவலகம் செல்லாமலேயே, 18 சேவைகளை பெற ஆன்லைன் மூலம் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மக்கள் எளிதில் சேவைகளை பெற அனைத்து துறைகளும் டிஜிட்டல் மயமாகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வட்டார போக்குவரத்து...

தீதி Vs மோடிஜீ: மேற்கு வங்கம் யாருக்கு?

மேற்கு வங்கத்தில் வரும் மார்ச் 27ம் தேதி முதல் 8 கட்டங்களாக 294 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மே மாதம் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு...

வாக்காளர்கள் இப்படி வந்தால்தான் வாக்களிக்க முடியும்: தேர்தல் ஆணையம் உத்தரவு!

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டு. அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மறுபுறம் அரசியல் கட்சிகள் தேர்தல் வேலைகளை தொடங்கிவிட்டன. தேர்தலில் வெற்றிப்பெற்று ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என அதிமுகவும், ஆட்சியை கைப்பற்ற...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here