Home செய்திகள் அரசியல் அன்றே தொடங்கிய பனிப்போர்: ஊசலாடும் புதுச்சேரி காங்கிரஸ் அரசு!

அன்றே தொடங்கிய பனிப்போர்: ஊசலாடும் புதுச்சேரி காங்கிரஸ் அரசு!

புதுச்சேரியில் அடுத்தடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து வருவதால், முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசுக்கு பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணி தலைமையிலான அட்சி கடந்த 2016ம் ஆண்டில் இருந்து நடைபெற்று வருகிறது. புதுச்சேரியில் சட்டப்பேரவை தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ளது.

இந்தநிலையில், கடந்த சில வாரங்களாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து வருகின்றனர். ஏற்கனவே, நமச்சிவாயம், தீப்பாய்ந்தான், மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த நிலையில், நேற்று ஜான்குமார் ராஜினாமா கடிதம் அளித்திருக்கிறார். இதில், நமச்சிவாயம் மற்றும் தீப்பாய்ந்ததான் பாஜகவில் இணைந்தனர்.

In Puducherry, successive Congress MLAs have resigned

புதுச்சேரி சட்டப்பேரவையில் 3 நியமன பாஜக எம்.எல்.ஏ.க்களுடன் மொத்தம் 33 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இதில், காங்கிரஸ் எம்.எல்.ஏ. தனவேலு ஏற்கனவே தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால், புதுச்சேரி சட்டப்பேரவையில் காங்கிரஸ் கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளின் பலம் சரி சமமாக உள்ளது. காங்கிரஸ் கூட்டணிக்கு 14 எம்.எல்.ஏ.க்களும், அதிமுக, என்.ஆர்.காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகளுக்கு 14 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். இதன் காரணமாக, முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசுக்கு பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரியில் தற்போது நிலவும் அரசியல் நெருக்குடிக்கான ஆணிவேர் இன்று நேற்று முளைத்தது அல்ல. 2016ம் ஆண்டிலேயே தொடங்கிவிட்டது. 2016 புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலின்போது காங்கிரஸ் முதலமைச்சர் வேட்பாளராக முன் நிறுத்தப்பட்டவர், தற்போதைய முதலமைச்சர் நாராயணசாமி இல்லை. இத்தனைக்கும், நாராயணசாமி தேர்தலில் கூட போட்டியிடவில்லை.

காங்கிரஸின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் நமச்சிவாயம். ஆனால், தேர்தல் வெற்றிக்கு பிறகு, நாராயணசாமிக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதனால், அதிருப்தியில் இருந்த நமச்சிவாயத்தை சமாதானப்படுத்தும் வகையில், அவருக்கு பல முக்கிய இலாக்காக்கள் வழங்கப்பட்டன. மேலும், கடந்த ஆண்டு நமச்சிவாயத்திடமிருந்து மாநிலத் தலைவர் பதவி பறிக்கப்பட்டது. இந்தநிலையில்தான், அவர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பாஜகவில் இணைந்தார்.

இதனிடையே, புதுச்சேரியில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலிலுக்கு மத்தியில், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி திடீரென நீக்கப்பட்டுள்ளார். தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் ஒவ்வொருவராக ராஜினாமா செய்து வரும் சூழலில், துணை நிலை ஆளுநர் கிரண்பேடி நீக்கப்பட்டுள்ளதால், புதுச்சேரி அரசியலில் அடுத்தடுத்த மாற்றங்கள் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here