‘அவரை’ வைத்து பிளான்., தற்போதே துண்டு போட்ட பாஜக!
பழனி தொகுதியை நிச்சயம் பாஜகவிற்கு ஒதுக்க வேண்டும் என்று அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2021 சட்டப்பேரவை தேர்தலுக்கான ஆயத்த பணிகளை அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்டன. அதன்படி, ஆளும் அதிமுக, பாஜக இடையே கூட்டணியும் உறுதியாகிவிட்டது. இதை, அரசு நிகழ்ச்சியிலேயே உறுதி செய்ய வைத்து தனது சாணக்கிய தனத்தை மத்திய அமைச்சர் அமித் ஷா காட்டினார்.
தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை எல்லாம் நடைபெற்றுவிட்டதாக கூறப்படும் நிலையில், பழனி தொகுதியை பாஜகவிற்கு ஒதுக்க வேண்டும் என்று அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பொள்ளாச்சியில் நடைபெற்ற வேல் யாத்திரையில் பேசிய அவர்,” பழனி தொகுதியை நிச்சயம் பாஜகவிற்கு ஒதுக்க வேண்டும் என்பதே எங்களது வேண்டுகோள்’’ என்று கூறினார்.
இதற்கு முன்னதாக பேசிய பாஜக மாநில தலைவர் எல்.முருகன், “பழனியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்,” என்றார்.

தமிழகத்தில் கட்சியின் பலத்தை அதிகரிக்க, முருகனையும், வேல் யாத்திரையைும் பாஜக கையில் எடுத்துள்ளது. இந்த சூழலில், முருகன் என்றாலே நினைவிற்கு வரும் ஊரான பழனியை பாஜக குறிவைத்திருப்பது, குறிப்பிடத்தக்கது