தமிழகம் சட்டப்பேரவை தேர்தலை எதிர்நோக்கும் பணிகளில் கட்சிகள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. இதில் தமிழகத்தில் மூன்றாவது அணி உருவாகிவிட்டது எனவும் நல்லவர்கள் மூன்றாவது அணிக்கு வர வேண்டும் எனவும் மக்கள் நீதி மய்யக் கட்சித் தலைவர் கமல்ஹாசன் அழைப்பு விடுத்துள்ளார்.
நேர்மை ஒன்றுதான் மக்கள் நீதி மய்யத்தின் அரசியல் வியூகம், நல்லவர்களுடன் நாங்கள் கூட்டணி அமைப்போம், யாருடன் கூட்டணி என்று தற்போது சொல்ல முடியாது என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
அதோடு அரசியல் குறித்து நானும் ரஜினியும் பேசிக் கொண்டே தான் இருக்கிறோம். ரஜினி நிலைப்பாடு முன்னதாகவே எனக்கு தெரியும் அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல்கள் முன்னதாகவே தனக்கு தெரியும் அவரது உடல்நலம் முக்கியம் அரசியல் கட்சி குறித்து அவர்தான் முடிவெடுக்க வேண்டும் என கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.
சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வு நடந்துக் கொண்டிருக்கிறது. இந்த முறை சட்டப்பேரவையில் மக்கள் நீதி மய்யக் குரல் ஒலிக்கும் என உறுதிப்பட கமல் கூறினார். அதோடு நான் போட்டியிடும் தொகுதி வேட்புமனு தாக்கலின்போது தெரியும் எனவும் முதல்வர் வேட்பாளர் நான்தான் எனவும் கமல் முன்மொழிந்தார்.