Home செய்திகள் இந்தியா படிப்படியாக முன்னேறிய பிரணாப்: 13-வது இந்திய குடியரசுத் தலைவரின் வாழ்க்கை!

படிப்படியாக முன்னேறிய பிரணாப்: 13-வது இந்திய குடியரசுத் தலைவரின் வாழ்க்கை!

இந்தியாவில் 13 குடியரசு தலைவராக 2012 முதல் 2017 வரை பதவி வகித்தவர் பிரணாப் முகர்ஜி. இவர் கடந்த 9 ஆம் தேதி டெல்லியில் உள்ள தனது வீட்டு குளியல் அறையில் தவறி விழுந்து தலையில் லேசாக அடிப்பட்டு உள்ளது. இதில் தலை சுற்று ஏற்பட்டு இடது கை உணர்ச்சியற்ற நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 82 வயதான பிரணாப் முகர்ஜியை சோதனை செய்த மருத்துவர்கள், அவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதை உறுதி செய்தனர். அதோடு மூளையில் ரத்தம் கட்டியிருப்பதை கண்டறிந்து அதை நீக்குவதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒருபுறம் மூளையில் கட்டி மறுபுறம் கொரோனா பாதிப்பு என சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

கொரோனா பாதிப்பா காரணமாக உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாமல் செயற்கை சுவாசக் கருவி பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று மாலை பிரணாப் முகர்ஜி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவுக்கு ஏராளமானோர் தங்களது இரங்கலை பதிவு செய்து வருகின்றனர்.

ஆரம்பக்கட்டத்தில் பிரணாப் முகர்ஜி மேற்கு வங்கத்தில் இடைத்தேர்தலில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளரின் தேர்தல் பிரச்சார உதவிகளை மேற்கொண்டார். இவரது பணிகள் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை ஈர்க்கவே 199 ஆம் காங்கிரஸ் கட்சியில் சேர்க்கப்பட்டார்.

அதுமட்டுமின்றி 1969 ஆம் ஆண்டே பிரணாப் முகர்ஜி மாநிலங்களை உறுப்பினராக தேரந்தெடுக்கப்பட்டார். பிரணாப்பின் தந்தை கமடா கின்ஹர் முகர்ஜி, 1952 ஆம் ஆண்டு மற்றும் 1964 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி சார்பில் மேற்கு வங்காள தொகுதி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

பிரணாப் முகர்ஜி மாநிலங்களை உறுப்பினர் செயல்பட்டு வரும் முறை இந்திராகாந்திக்கு பிடிக்கவே அவரை 1973 ஆம் ஆண்டு மத்திய தொழில்துறை அமைசகத்தின் துணை அமைச்சராக பணியமர்த்தப்பட்டார். பிரணாப் முகர்ஜி சிறப்பாக செயல்பட்டு வந்த நிலையில் 1982 ஆம் ஆண்டு இந்திரா காந்தி பிரதமராக பதவி வகித்த காலத்தில் பிரணாப்பிற்கு மத்திய நிதியமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது.

மத்திய நிதியமைச்சராக பிரணாப் முகர்ஜி பொறுப்பு வகித்த காலத்தில்தான் பிரதமராக இருந்த இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். பின் பிரதமர் பதவி பிரணாப்பிற்கு வழங்கப்படும் என செய்திகள் பரவிய நேரத்தில் அவரது மகன் ராஜீவ்காந்தி பிரதமர் பொறுப்பை ஏற்றார்.

பின் கொஞ்சம் கொஞ்சமாக காங்கிரஸ்-ல் இருந்து ஓரங்கட்டப்பட்ட பிரணாப் முகர்ஜி காங்கிரஸ் இருந்து விலக ராஷ்டிரய சமாஜ்வாதி காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கினார். பின் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு தனது கட்சியை காங்கிரஸ் உடன் இணைத்தார்.

Gradually progressing Pranab: Life of the 13th President of India !

1991 ஆம் பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி தமிழகத்தில் கொல்லப்பட்டார். பின் விபி.நரசிம்மராவ் தலைமையில் ஆட்சி நடைபெற்ற போது மத்திய திட்டக்குழு துணைத்தலைவர் போன்ற பதவி வகித்தார். அதேபோல் 1995-ல் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.

பின் சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸ் செயல்பட தொடங்கியது. அப்போது காங்கிரஸ் பொதுச் செயலாளர் பதவி பிரணாப் முகர்ஜி செயல்பட்டார். 2004 ஆம் ஆண்டு மேற்கு வங்க தொகுதியில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அப்போது சோனியா காந்தியின் குடியுரிமை காரணமாக அவருக்கு பிரதமர் பதவி வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்ட நேரத்தில் பிரணாப் முகர்ஜி பிரதமராக வாயப்பிருந்ததாக செய்திகள் வெளியாகின. ஆனால் மன்மோகன்சிங் பிரதமராக காங்கிரஸால் தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும் அந்த காலக்கட்டத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் பதவி பிரணாப் முகர்ஜிக்கு வழங்கப்பட்டது.

2009 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக மக்களை தேர்தலில் வெற்றிப் பெற்ற பிரணாப்பிற்கு நிதியமைச்சர் பதவி வழங்கப்பட்டது. 2012 ஆம் ஆண்டு இந்திய குடியரசுத் தலைவர் வேட்பாளராக காங்கிரஸ் கட்சி சார்பில் பிரணாப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இதையடுத்து இந்தியாவின் 13 ஆவது குடியரசுத் தலைவராக பிரணாப் முகர்ஜி தேர்ந்தெடுக்கப்பட்டார். 2012 ஆம் ஆண்டு ஜூலை 25 பிரணாப் முகர்ஜிக்கு குடியரசுத் தலைவராக பதவி பிரமானம் செய்து வைக்கப்பட்டது. 2017 ஆம் குடியரசு தலைவர் பதவி நிறைவு பெற்றதையடுத்து உடல்நலத்தை கருத்தில் கொண்டு அரசியலில் இருந்து விலகி கொள்வதாக அறிவித்தார்.

பிரணாப் முகர்ஜி இந்தியாவுக்கு ஆற்றிய சேவை ஈடு இணையற்றது என அரசியல் தலைவர்கள் தங்களை இரங்கலை அவரது மறைவுக்கு பதிவிட்டு வருகின்றனர் என்றால் அதுமிகையல்ல.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

சர்கார் வியூகம் அமைக்கும் கமல்ஹாசன்: வேறலெவலில் இருக்கப்போகும் தமிழக சட்டப்பேரவை தேர்தல்!

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்படத் தொடங்கியுள்ளன. ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் ஐபேக் பிரசாந்த் கிஷோர் ஆலோசனையில் திமுக செயல்பட்டு வருகிறது. ஆட்சியை தக்கவைக்கும் நோக்கில்...

அன்றே தொடங்கிய பனிப்போர்: ஊசலாடும் புதுச்சேரி காங்கிரஸ் அரசு!

புதுச்சேரியில் அடுத்தடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து வருவதால், முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசுக்கு பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணி தலைமையிலான அட்சி கடந்த 2016ம் ஆண்டில் இருந்து நடைபெற்று...

இவரை CSK ஏலம் எடுத்ததும் அரங்கமே கைதட்டல் குவிந்தது: அட அர்ஜுன் டெண்டுல்கரும் லிஸ்ட்ல இருக்காரு!

ஐபிஎல் 2021-க்கான ஏலம் விறுவிறுப்பாக சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் டெஸ்ட் போட்டியில் ஆதிக்கம் செலுத்தும் புஜாரா ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்கு ஆர்வம் காட்டினார். ஆனால் அவரை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை....

சிங்க பெண்ணே எழுந்து வா மொமெண்ட்: சவுதியில் பெண்கள் ராணுவத்தில் சேர அனுமதி!

சவுதி அரேபியாவில் பெண்கள் ராணுவத்தில் சேர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், அந்நாட்டில் தொடர்ச்சியாக பல அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். முகமது பின் சல்மானின் முயற்சியால்,...

Related News

நடுக்கடலில் குதித்த ராகுல்காந்தி: அதிர்ந்து போன பாதுகாப்பு அதிகாரிகள்!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வயநாடு தொகுதி மக்களவை உறுப்பினராவர். இவர் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக கேரளா சென்றிருந்தார். கேரளா சென்ற ராகுல்காந்தி அங்குள்ள மீனவர்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். ராகுல்காந்தி மீனவர்களுடன்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here