Home செய்திகள் உலகம் எச்-1பி விசா தடையில் தளர்வுகள் அறிவிப்பு! அமெரிக்கா செல்ல விரும்பும் இந்தியர்களுக்கு நற்செய்தி

எச்-1பி விசா தடையில் தளர்வுகள் அறிவிப்பு! அமெரிக்கா செல்ல விரும்பும் இந்தியர்களுக்கு நற்செய்தி

எச்-1பி மற்றும் எச்-4 விசாக்களுக்கான தடையில் சில தளர்வுகளை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்க கனவில் வாழும் இந்தியர்கள்

இந்தியாவில் பல சவுகரியங்கள் உள்ள போதிலும், வெளிநாடுகளில் குடியேற வேண்டும் என்பதே சிலரின் வாழ்க்கை லட்சியமாக உள்ளது. காலனித்துவ ஆட்சியில் பிரிட்டனுக்கு படையெடுத்த இந்தியர்கள், சுதந்திரத்திற்கு பிறகு அமெரிக்கா பக்கம் சாய்ந்துவிட்டனர். இந்தியர்களின் இந்த கனவுக்கு ஐடி துறை ஏற்றம் வலு சேர்த்துள்ளது. அந்த வகையில், அமெரிக்காவில் தற்காலிகமாக தங்கி வேலை செய்ய எச்-1பி விசா வாங்க வேண்டும். இந்த ஊழியர்களுடன் வரும் குடும்பத்தினர் எச்-4 விசா பெற வேண்டும். இந்த விசாக்கள் மூலம் இந்தியர்களும், சீனர்களும் தான் அதிகம் பயன்பெற்று வருகின்றனர். இந்தியா உற்பத்தி செய்யும் மென்பொருள் இன்ஜினியர்கள் பலர் இந்த விசாக்கள் மூலம் அமெரிக்காவில் பணியாற்றி வருகின்றனர்.

குடியேற்றத்திற்கு எதிரான டிரம்ப்பின் கொள்கை

கொரோனா கோரப்பிடியில் சிக்கி உள்ள அமெரிக்கா, கடும் பொருளாதார சரிவு எதிர்கொண்டுள்ளது. இதனால், அமெரிக்கர்கள் பலருக்கு வேலையில்லை. இந்த சூழலில், அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்புகளை உறுதி செய்ய, பிற நாட்டினர் அமெரிக்காவில் பணிபுரிவதற்காக வழங்கப்படும் விசா நடைமுறையில் மாற்றம் கொண்டு வர அதிபர் டொனால்டு டிரம்ப் திட்டமிட்டார். இதன்படி, நடப்பாண்டின் இறுதி வரை எச்-1பி மற்றும் எச்-4 விசாக்களை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக கடந்த ஜூன் 22ம் தேதி அறிவித்தார். இது அமெரிக்கா செல்ல விரும்பிய பல இந்தியர்களுக்கு முட்டுக்கட்டையாக அமைந்தது.

கமலா ஹாரிஸ் என்ட்ரி

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினத்திலேயே துணை அதிபரும் தேர்வு செய்யப்பட உள்ளார். கருப்பின போராட்டம், குடியேற்றத்திற்கு எதிரான கொள்கை உள்ளிட்ட விவகாரங்களுக்கு இடையே ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரில் அறிவிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தை சேர்ந்த தாய், ஜமைக்காவை சேர்ந்த தந்தைக்கு பிறந்த கமலா ஹாரிஸ், ஆசிய அமெரிக்கர்கள், கருப்பின மக்களின் வாக்குகளை அள்ளுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் கணக்கு – தடையில் தளர்வு

இந்தநிலையில், எச்-1B விசா மற்றும் எச்-4 விசா வழங்குவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சில தளர்வுகளை அறிவித்துள்ளார். அதன்படி, அமெரிக்காவில் வேலை செய்துவிட்டு சொந்த நாட்டிற்கு திரும்பியவர்கள், மீண்டும் அதே நிறுவனத்தில் அதே பணிக்கு திரும்பினால் எச்-1பி விசா வழங்கப்படும். இந்த ஊழியர்களுடன் வரும் குடும்பத்தினருக்கும் எச்-4 விசா வழங்கப்படும். மேலும், தகவல் தொடர்பு, அவசர சேவைகள், நிதி சேவைகள், உணவு, விவசாயம் மற்றும் சுகாதாரம் போன்ற முக்கிய துறைகளில் பணியாற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள், மூத்த நிலை மேலாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் ஆகியோருக்கும் விசா வழங்கப்படும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

‘ஈகோ’ என்று கமல் கூறியது இதுதானா? ரஜினியுடன் கூட்டணி சாத்தியமா?

ஈகோ பார்க்காமல் ரஜினியின் சேர்ந்து பணியாற்றுவேன் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்துக் கட்சிகளும் பரப்புரையில் ஈடுபடத் தொடங்கி விட்டன. அதன்படி,...

குடியரசு தின விழா: போரிஸ் ஜான்சன் சிறப்பு விருந்தினராக பங்கேற்பு!

பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். நாட்டின் 72வது குடியரசு தின விழா, வரும் ஜனவரி மாதம்...

மக்கள் சேவை கட்சி., ஆட்டோ சின்னம்: ரஜினி கட்சியின் பெயர், சின்னம்?

தேர்தல் ஆணையத்தில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட பழைய கட்சியை, நடிகர் ரஜினிகாந்த் பயன்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. “ஜனவரியில் கட்சித் துவக்கம். டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு” என நடிகர் ரஜினிகாந்த் தனது...

ஜோ பைடன் வெற்றி– உறுதி செய்த பிரதிநிதிகள் குழு!

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றதை பிரதிநிதிகள் குழு உறுதிப்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கடந்த நவம்பர் 3ம் தேதி அதிபர் தேர்தல் நடந்து முடிந்தது. தேர்தலில் ஜனநாயக கட்சி...

Related News

மீண்டும் ஊரடங்கு அறிவித்த நாடு: இந்த முறை ரொம்ப கடுமையாக இருக்கும்!

சீனாவின் வுகான் மாகாணத்தில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளையே ஒரு உலுக்கு உலுக்கியது என்றே கூறலாம். கொரோனா வைரஸ் எப்போது முடிவுக்கும் வரும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்ப்பு இருக்கிறது....

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here