புயலுக்கு பின்னே அமைதி என்ற பொன்மொழி போல் ஒவ்வொரு பெரிய நிகழ்வுக்கும் பிறகுதான் அதற்கான நிரந்தர தீர்வும் விதிமுறைகளும் விதிக்கப்பட்டு வருகிறது. அதன்வரிசையில் சாத்தன்குளம் இருவரின் மரணம் சேர்ந்திருக்கிறது.
சாத்தான்குளம் தந்தை மகன் இறந்த சம்பவம் தமிழகத்தில் பேசு பொருளாக மாறி வரும் நிலையில், அந்த சம்பவத்தில் தெரிவிக்கப்படும் காரணம் குறித்தும் காவல்துறை மேற்கொண்ட ஒழுங்குநடவடிக்கை குறித்தும் பார்க்கலாம்.
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதை கட்டுப்படுத்துவதில் பிரதான நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் அத்தியாவசிய பொருட்களின் விற்பனைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தூத்துக்குடி சாத்தான்குளம் அரசரடி விநாயகர் கோயில் தெருவில் வசித்து வரும் ஜெய்ராஜ்(55) மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ்(31) ஆகியோர் செல்போன் கடை நடத்தி வந்துள்ளனர். ஊரடங்கை மீறி இவர்கள் கடை திறந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இவர்களை போலீஸார் கைது செய்யமுற்பட்டதாகவும் அப்போது இருதரப்பினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டதையடுத்து காவல்துறையினர் பணியை அவர்கள் தடுத்ததாக கூறி இருவர் மீதம் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அதன்பின் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் திடீரென பென்னிக்ஸூக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். முறையான காரணம் தெரியாமல் மருத்துவமனையிலேயே அவர் உயிரிழந்தார், அதேகாரணம் கூறி ஜெயராஜூம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பலியானார்.
பென்னிக்ஸ், ஜெயராஜ் உடல் பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது, அதை வாங்க மறுத்த உறவினர்கள் இருவரின் இறப்புக்கான காரணம் குறித்தும் போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இந்த சம்பவத்தையடுத்து பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டது, கண்டன குரல்கள் விவாதநிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டது.
இதுதொடர்பான விசாரணை தொடங்கப்பட்டதோடு உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருவரின் உடல்களும் ஒப்படைக்கப்பட்டது. அவர்களது உடல் செல்போன் கடையில் வைக்கப்பட்டது பின் அவர்களது வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த சம்பவத்தையடுத்து பல்வேறு தரப்பினரும் கண்டன குரல்கள் எழுப்பிவரும் இந்த நேரத்தில் புயலுக்கு பின்னே அமைது என்பது போல் ஒரு பெரிய அசம்பாவிதம் நடந்தபிறகே அதுதொடர்பான விதிமுறைகள் முறைப்படுத்தப்படும் என்ற வகையில் காவல்நிலையங்களுக்கு டிஜிபி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், கைது செய்யப்படுவர்களை காவல்நிலையத்துக்கு அழைத்து வராமல் தனியாக வைக்கும் வகையில் காலியான கட்டிடங்களை தேர்வு செய்து வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். காலியான கட்டிடங்கள் கிடைக்காதபட்சத்தில் உதவி ஆணையர் /டிஎஸ்பி அலுவலகங்களை பயன்படுத்தும்பபடியும் அப்படி பயன்படுத்தும்போது உதவி ஆணையர்/டிஎஸ்பி அருகில் உள்ள காவல்நிலையங்களில் பணியாற்றும்படி உத்தரவிட்டுள்ளார்.
ஜாமீனில் செல்லக்கூடிய குற்றவாளிக்கு உடனடியாக ஜாமீன் வழங்கும்படியும் குற்றவாளிகளிடம் நேரடியாக எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு தற்போதைய நடைமுறைப்படி குற்றவாளிகளுக்கு மருத்துவபரிசோதனை எடுக்கப்படுவதோடு கொரோனா பரிசோதனை செய்யவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.