Home செய்திகள் கந்தசஷ்டி கவசம்: முற்றும் திறந்து சரணடைந்த சுரேந்திரன்., தவறாக சித்தரித்த கருத்துகள்!

கந்தசஷ்டி கவசம்: முற்றும் திறந்து சரணடைந்த சுரேந்திரன்., தவறாக சித்தரித்த கருத்துகள்!

தமிழ் கடவுள் முருகனுக்கான கந்த சஷ்டி கவசத்தின் நோக்கத்தை முறையாக புரிந்துக் கொள்ளாமல், தவறாக சித்தரித்தோடு ஆபாச கருத்துகளை முன்னிருத்தி கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் சித்தரித்து வீடியோ வெளியிட்டது.

இந்த விவகாரம் பூதாகரமாக வெடிக்கத் தொடங்கியுள்ளது. பொதுவாக ஆபாச என்பது பார்ப்பவரின் கண்ணில் தான் உள்ளது. ஒரு பெண்ணின் மார்பகம் என்பது அவரின் கர்பப்பைக்கு இணையான ஒன்று. அதை ஆபாசமாக பார்ப்பதே தவறு அதிலும் ஒரு மதத்தின் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்கும் புத்தகத்தில் கூறாத கருத்தை தான் தவறாக புரிந்துக் கொண்டதோடு அதை சமூகவலைதளங்களில் வீடியோவாக சித்தரித்து கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் வீடியோ வெளியிட்டுள்ளது.

கந்த சஷ்டி கவசத்தில் வரும் பாடல் வரிகள் ஒவ்வொன்றும் மனித உறுப்புகள் அனைத்தையும் காக்க வேண்டும் என தனித்தனியாக குறிப்பிடப்பட்டிருக்கும். அதை தவறாக புரிந்துக் கொண்டதோடு, அதில் குறிப்பிடப்படாத பெண், மனைவி போன்ற வார்த்தைகள் இருப்பதாக கூறி கறுப்பர் கூட்டம் வீடியோ வெளியிட்டது.

தமிழகத்தை பொருத்தவரை அழுது கொண்டே இருக்கும் குழந்தைகளுக்கு பள்ளிவாசலுக்கு சென்று மந்திருப்பதும், அம்மை நோய் காலங்களில் வீட்டு வாசலில் வேப்பிலை கட்டி வைப்பதும், மாதா கோவிலில் மெழுகுவர்த்தி ஏற்றுவதும் என அனைத்து மதத்தினரும் பிற மதங்களோடு தொடர்பு படுத்தி ஒற்றுமையாகவே வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள் என பல்வேறு தரப்பினரும் கருத்துகளை முன் வைத்து வரும் நேரத்தில் மத மோதலை உருவாக்கும் வகையில் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் வீடியோ வெளியிட்டது.

நாத்திகம் என்பது கடவுள் மறுப்பு கொள்கையே. ஆனால் தமிழகத்தில் பலரின் நோக்கம் கடவுள் மறுப்பு அல்ல இந்துக் கடவுளை குறித்து மட்டும் அவதூறு பரப்புவதே. அவர்களின் நோக்கம்தான் என்ன என்பது யாருக்கும் புலன்படாது. சிறுபான்மையினர் பாதுகாப்பு என்பது பெருபான்மையினரை அசிங்கப்படுத்துவது தான் என்பதே அவர்களின் நோக்கங்களில் ஒன்று இந்து தரப்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகிறது.

தமிழ் கடவுள் முருகனுக்கான கந்த சஷ்டி கவசத்தின் மீதான விமர்சனத்துக்கு நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்கள் தங்களது கண்டனத்தை பதிவிட்டு வருகின்றனர். அதோடு இந்து அமைப்பினரும் கறுப்பர் கூட்டம் பதிவிட்ட வீடியோவுக்கு எதிராக போராட்டத்தை முன்னிருத்துவதோடு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து கந்த சஷ்டி கவசம் குறித்து நாங்கள் வெளியிட்ட வீடியோ எங்களை நேசிக்கும் பலரின் உணர்வுகளைக் காயப்படுத்துவதாக அமைந்துள்ளது என்பதை நாங்கள் இப்போது அறிந்தோம். ஆதலால், எங்கள் யூடியூப் பக்கம் உள்பட பேஸ்புக் பக்கத்திலிருந்தும் அந்த வீடியோவை நீக்கிவிட்டோம். காயப்படுத்தியிருந்தால் எங்களை மன்னிக்கவும்” என கறுப்பர் கூட்டம் தனது பேஸ்புக் பக்கத்தில் மன்னிப்பு கோரி கருத்து ஒன்றைப் பதிவிட்டுள்ளது.

இதுகுறித்து சிவசேனா கட்சியின் மாநில செயலாளர் சுந்தர வடிவேலன் நாகப்பட்டினம் எஸ்பிக்கு ஆன்லைனில் புகார் அளித்து இருந்தார். அதில், தமிழகத்தில் மத மோதல்களை உருவாக்கும் உள்நோக்கத்துடன் கறுப்பர் கூட்டம் சேனலில் இந்து கடவுள்கள் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டிருப்பதால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார். இதையடுத்து 5பிரிவுகளில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து இன்று சுரேந்திரன் புதுச்சேரி அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். தமிழகத்துக்கு அழைத்து வர தமிழக போலீசார் புதுச்சேரி விரைந்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

மறுபுறம் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலை தடை செய்யவேண்டும். இதுதொடர்பானவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் போன்ற கோஷங்கள் முன்னிருத்தப்பட்டு வருகிறது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

குலை நடுங்குகிறது: வெங்கட்பிரபுவின் “லைவ் டெலிகாஸ்ட்” எப்படி இருக்கு?

வெங்கட்பிரபு இயக்குனராக அறிமுகமாக நினைத்ததும் அவரது முதல் கதை லைவ் டெலிகாஸ்ட் கதைதானாம். இந்த சீரிஸ் ராகவா லாரன்ஸ் நடித்த காஞ்சனா-2-வின் தழுவலாக இருக்கிறது. லைவ் டெலிகாஸ்ட்டில் பேய்யை நேரடியாக மக்களுக்கு காட்ட...

கொரோனா தடுப்பூசி போடும் போதும் ஒரு அரசியல்: மோடி உடனிருந்த நாலு பேர்?

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள, கொரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், இந்தியாவில், சீரம்...

சர்கார் வியூகம் அமைக்கும் கமல்ஹாசன்: வேறலெவலில் இருக்கப்போகும் தமிழக சட்டப்பேரவை தேர்தல்!

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்படத் தொடங்கியுள்ளன. ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் ஐபேக் பிரசாந்த் கிஷோர் ஆலோசனையில் திமுக செயல்பட்டு வருகிறது. ஆட்சியை தக்கவைக்கும் நோக்கில்...

அன்றே தொடங்கிய பனிப்போர்: ஊசலாடும் புதுச்சேரி காங்கிரஸ் அரசு!

புதுச்சேரியில் அடுத்தடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து வருவதால், முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசுக்கு பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணி தலைமையிலான அட்சி கடந்த 2016ம் ஆண்டில் இருந்து நடைபெற்று...

Related News

இவரை CSK ஏலம் எடுத்ததும் அரங்கமே கைதட்டல் குவிந்தது: அட அர்ஜுன் டெண்டுல்கரும் லிஸ்ட்ல இருக்காரு!

ஐபிஎல் 2021-க்கான ஏலம் விறுவிறுப்பாக சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் டெஸ்ட் போட்டியில் ஆதிக்கம் செலுத்தும் புஜாரா ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்கு ஆர்வம் காட்டினார். ஆனால் அவரை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை....

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here