பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து அனைவரும் அறிந்ததே. 100 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் கடைசி வரை யார் எலிமினேட் ஆகாமல் இருக்கிறாரோ அவரே வெற்றிப் பெற்றவராக அறிவிக்கப்படுவர். இந்த 100 நாட்களில் ஒவ்வொரு நிமிடமும் அவர் கண்காணிக்கப்படுவார். ஒரு தனிநபரின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என அறிந்துக் கொள்ளத் தூண்டும் நமது ஆர்வமே இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு காரணம்.
விஜய் டிவியில் கடந்த மூன்று ஆண்டுகளாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சி பெண்கள், ஆண்கள், இளைஞர்கள் என அனைவரையும் கவர்ந்து வெற்றிப் பெற்று வருகிறது என்றால் அது நமக்கு பிறரை குறித்து அறிந்துக் கொள்ள வேண்டும் என்ற க்யூரியாசிட்டியே காரணம் என்றால் அது மிகையல்ல. பிக்பாஸ் சீசன் 4 இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஒளிபரப்பாக வேண்டியது ஆனால் கொரோனா தொற்று காரணமாக தாமதமான இந்நிகழ்ச்சி அக்டோபர் மாதம் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. அதற்கான ப்ரோமோ ஒளிபரப்பு தொடங்கப்பட்டு விட்டது.
இந்த நிகழ்ச்சியான பல கலவைகளின் ஒருங்கிணைப்பாக இருக்கும். இதில் கதாநாயகர் போல் அனைவருக்கும் பொதுவான ஒருத்தர், வில்லத்தனம் நிறைந்த ஒருவர், வஞ்சகக் குணத்தோடு பிறரிடம் செயல்படும் ஒருவர், யாரையும் கண்டுக்கொள்ளாமல் செயல்படும் ஒருவர் இதையெல்லாம்தாண்டி கவர்ச்சித் தூக்கலாக இருக்க சில நடிகைகள் என பலர் இதில் பங்கேற்கச் செய்வார்கள்.
ஆனால் இந்த சீசன் நான்கில் சற்று கவர்ச்சி தூக்கலாகவே இருக்கும் என கருதப்படுகிறது. இதில் சமீபத்தில் கவர்ச்சிகரமான போட்டோ ஷூட் நடத்திய நடிகை ஷாலு ஷம்மு பங்கேற்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம், மிஸ்டர் லோக்கல் போன்ற பல படங்களில் நடித்தவர்.
அதேபோல் போட்டோ ஷூட் மூலம் தமிழகம் முழுவதும் பிரபலமான ரம்யா பாண்டியன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கப்போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் ஜெமினி, வின்னர் திரைப்படத்தில் தொடங்கி ஆம்பள திரைப்படம் வரை கவர்ச்சிக்கு பஞ்சமில்லாமல் நடித்திருக்கும் கிரண் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
கூடுதலாக இஸ்பேட் ராஜா இதய ராணி படத்தில் மாடர்ன் உடையில் கூலிங் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஹீரோயின் ஷில்பா மஞ்சுநாத் பங்கேற்கப் போவதாகவும் சினி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து இது பிக்பாஸ் ஷோவா அல்லது பேஷன் ஷோவா என சமூகவலைதளத்தில் நெட்டிசன்கள் கலாய்க்கத் தொடங்கியுள்ளனர்.