கடலூர் என்னும் பெயர் ஏற்பட்டதற்கு காரணம் : இவ்வூர்க் கடலில் உப்பனாறு, பரவனாறு முதலியவை கூடும் இடங்கள் 4 இடங்களில் உள்ளது. ஆகவே கூடலூர் என்ற பெயரே கடலூர் என ஆகியிருக்கலாம்.
வரலாறு
கடலூர் மாவட்டம் தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் அமைந்துள்ளது. இது பண்டைய, வரலாற்று மாவட்டங்களில் ஒன்றாகும். தற்போது கடலூர் மாவட்டம் தென் ஆற்காடு மாவட்டத்திலிருந்து 1993 செப்டெம்பர் 30 அன்று பிரிக்கப்பட்டது. கடலூர் நகரம் , மாவட்டத்தின் தலைநகரமாக இருக்கிற்து. இந்த மாவட்டத்திற்கு இன்நகரத்தின் பெயரினையே பெயரிடப்பட்டுள்ளது. புராணத்தில் இந்த மாவட்டம் ஸ்ரீராமபகுதியாக விவரிக்க குறிப்பிடபட்டுள்ளது. 1801 ஆம் ஆண்டில், கேப்டன் கிரஹாம், பாலார் மற்றும் போர்டோநோவோ ஆறுகளுக்கு இடையில் உள்ள மாவட்டத்தின் பொறுப்பாளராகவும், முதல் கலெக்டர் தென் ஆற்காடு மாவட்டத்திற்காகவும் பொறுப்பேற்றர். வரலாற்று சான்றாக 1962 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட மதராஸ் மாவட்ட வர்த்தமானியர்களான அரசு இதழில், தென்னாற்கடு பெயர் காரணம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆறு முனிவர்கள் வாழ்ந்த ஆற்று பகுதியாகவும், தென்னாற் காட்டிலிருந்து கிடைத்த வரலாற்று சான்றுக ளிள் இருந்தும் பெறப்பட்டுள் ளன.
எல்லைகள்
தெற்கே திருச்சிராபள்ளி மாவட்டமும்; தென்கிழக்கே தஞ்சாவூர் மாவட்டமும்; கிழக்கே வங்காள விரிகுடாவும்; மேற்கே விழுப்புரம் மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன.
சட்டசபை தொகுதிகள்
கடலூர்
சிதம்பரம்
புவனகிரி
காட்டுமன்னார்குடி (தனி)
குறிஞ்சிப்பாடி
விருத்தாசலம்
பண்ருட்டி
நெல்லிக்குப்பம்
மங்களூர் (தனி)
நீர்வளம்
இம்மாவட்டத்தில் வந்து கலக்கும் ஆறுகளும், பாசனத்துக்கு உதவும் ஆறுகளும் வருமாறு : கெடிலநதி, பெண்ணையாறு, பரவனாறு, கொள்ளிடம், மணிமுத்தாறு.
வழிப்பாட்டு தலங்கள்
சிதம்பரம் தில்லைநாதர்
திருவயிந்திரபுரம் பெருமாள்
சுற்றுலா தளங்கள்
பிச்சாவரம் காடு, கெடிலத்தின் கழிமுகம், கடலூர் தீவு
புகழ்பெற்ற பெருமக்கள்
அப்பர்
சுந்தரர்
சந்தான குரவர்கள் நால்வர்
அருணந்தி சிவாச்சாரியார்
மனவாசகம் கடந்தார்
வேதாந்த தேசிகர்
அருட்பெரும் ஜோதி இராமலிங்கர்
திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள்.
கடலூர் சுப்பராயலுரெட்டியார்
தெய்வநாயகம் அய்யா
கனகசபை பிள்ளை
தங்கராஜ் முதலியார்
வழக்கறிஞர் இளம் வழுதி
கல்வி வள்ளல் ஏ.ஆர். தாமோர முதலியார்
பண்ணுருட்டி இராமச்சந்திரன்
நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி
கடலூர்-விடுதலை கி.வீரமணி
ரெவரண்டு ஞானப்பிரகாசம்
ரெவரெண்டு மரியதாஸ்
விருத்தாசலம் பூவராகன்
தி.கி.நாராயணசாமி நாயுடு