தனி சின்னத்தில் போட்டியிடப்போவதாக விசிக, மதிமுக ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளதால், திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி, அனைத்து கட்சிகளும் ஆயத்த பணிகளை தொடங்கிவிட்டன. மாபெரும் தலைவர்களின்றி களம்காணும் அதிமுகவும், திமுவும் பல சர்ச்சைகளில் தொடர்ந்து சிக்கி வருகின்றன. அந்த வகையில், அதிமுகவில் பூதாகரமாக வெடித்த முதல்வர் வேட்பாளர் சர்ச்சை முடிவுக்கு வந்துள்ள சூழலில், தற்போது திமுக அணியில் பிரச்சனை தொடங்கியிருக்கிறது.
திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகமும் தனி சின்னத்தில் போட்டியிட விரும்புவதாக அறிவித்துள்ளன. இந்த விவகாரம் திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், கூட்டணிக்குள் வெளிப்படையான விரிசல் ஏற்படாவிட்டாலும், கருத்து வேறுபாடுகள் உண்டாகும் என சொல்லப்படுகிறது.
இந்தநிலையில், கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, திமுக கூட்டணி விரைவில் சிதறும். அங்கு ஒருமித்த கருத்துடைய கட்சிகள் இல்லை.
கூட்டணி தர்மத்தை மதித்து கடைபிடிக்கும் ஒரே கட்சி அதிமுகதான். அதனால் தான் பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸுக்கும், தமாகா தலைவர் ஜி.கே.வாசனுக்கும் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை அதிமுக வழங்கியது.
திமுக கூட்டணியில் இருக்கும் பல கட்சிகள் விரைவில் அதிமுக கூட்டணிக்கு வரும் முன்பு அதிமுகவுடன் பிற கட்சிகள் கூட்டணி அமைக்கும்போது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாதான் முதலமைச்சர் வேட்பாளர்களாக முன்னிறுத்தப்பட்டனர். அதே போன்றுதான் தற்போதும் எடப்பாடி பழனிசாமி முன்னிறுத்தப்பட்டுள்ளார்.” என்று கூறினார்.