Home செய்திகள் தமிழகம் இ.பி.எஸ் Vs ஓ.பி.எஸ் யார் சிறந்த முதல்வர்? ஒற்றை தலைமையின் கீழ் செல்கிறதா அதிமுக?

இ.பி.எஸ் Vs ஓ.பி.எஸ் யார் சிறந்த முதல்வர்? ஒற்றை தலைமையின் கீழ் செல்கிறதா அதிமுக?

அதிமுக செயற்குழு கூட்டத்தில் நடைபெற்ற நிகழ்வுகளுக்கு பிறகு கட்சி ஒற்றை தலைமையின் கீழ் செல்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செயற்குழு கூட்டம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யார் முதல்வர் வேட்பாளர் என்பதில் தொடங்கி, யார் யாரை முதல்வராக்கினார் என்பது வரை பல விவகாரங்கள் குறித்து கூட்டத்தில் காரசார விவாதங்கள் நடைபெற்றன. இந்த சலசலப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், முதல்வர் வேட்பாளர் குறித்து வரும் 7ம் தேதி அறிவிக்கப்படும் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்திருக்கிறார்.

இந்தநிலையில், எடப்பாடியின் கடந்த 3 ஆண்டு கால ஆட்சியும், அதிமுக செயற்குழுவில் நடைபெற்ற நிகழ்வுகளும் முக்கியதுவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, நேற்று நடைபெற்ற செயற்குழுவில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், ஐந்து தீர்மானங்கள் முதல்வரை பாராட்டி இடம்பெற்றுள்ளன. இது கட்சியிலும், ஆட்சியிலும் எடப்பாடி பழனிசாமி, தனது அதிகாரத்தை நிலைநாட்டி இருப்பதையே காட்டுவதாக சொல்லப்படுகிறது.

யார் சிறந்த முதல்வர்?

ஆட்சி கவிழும், கட்சி காணாமல் போகும் என தொடர்ந்து விமர்சிக்கப்பட்ட நிலையில், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கட்சியையும், ஆட்சியையும் நிலைநிறுத்தியதே எடப்பாடி பழனிசாமியின் பெரும் வெற்றியாக பார்க்கப்படுகிறது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, எட்டு வழிச்சாலை திட்டம், ஊழல் குற்றச்சாட்டுகள் ,வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு போன்ற விவகாரங்கள் கரும்புள்ளிகளாக கருதப்பட்டாலும், பிளாஸ்டிக் தடை, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்பு போன்றவை எடப்பாடியின் இமேஜை கூட்டுகின்றன.

EPS Vs OBS Who is the best CM

மற்றொரு புறம், தர்மயுத்த போராளியான ஓ.பி.எஸ், இருமுறை முதல்வராக இருந்தபோது, அவரது அனைத்து நடவடிக்கைகளும் ஜெயலிலதாவின் உத்தரவின் பேரிலேயே அமைந்தன. மூன்றாவது முறை அரியணையை அலங்கரித்த காலத்தில், ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வாங்கியது அவரது சாதனையாக சொல்லப்படுகிறது.

2019 தேர்தலில், சொந்த மகனை வெற்றி பெற செய்வதிலேயே ஓ.பன்னீர்செல்வம் ஆர்வம் காட்டினார். அதேசமயம், எடப்பாடியோ தமிழகம் முழுவதும் பம்பரமாக சுழன்று சட்டமன்ற இடைத்தேர்தலில் கணிசமான தொகுதிகளை கைப்பற்றி தனது ஆட்சியை தக்கவைத்துக் கொண்டார். மேலும், அரசு நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்பது, அடிக்கடி செய்தியாளர்களை சந்திப்பது என தன்னை ஒரு எளிமையான முதல்வராக எடப்பாடி பழனிசாமி கடந்த மூன்றரை ஆண்டுகளில் கட்டமைத்துக் கொண்டார்.

கட்சியிலும், ஆட்சியிலும் புறக்கணிக்கப்படும் ஓ.பன்னீர்செல்வமோ தனது இமேஜை செதுக்கிக் கொள்ள பெரிதாக எதுவுமே செய்யவில்லை. இதனால், அதிகாரமற்ற ரப்பர் ஸ்டாம்ப் தலைமையாகவே அவர் மாறி இருக்கிறார். இதுமட்டுமின்றி, எடப்பாடியை மாற்றி வேறொருவரை முதல்வர் வேட்பாளராக அறிவித்தால், அது எதிர்க்கட்சியினருக்கு தீனியாக அமைந்துவிடும் என்றும், அதிமுக அரசு மீது கூடுதல் விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் வைக்கப்படும் எனவும் அதிமுக மூத்த தலைவர்கள் கருதுகின்றனர். இந்த சூழலில் வரும் 7ம் தேதி வெளியாகும் அறிவிப்பு எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக அமையும் என்றே கூறப்படுகிறது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

வாக்காளர்கள் இப்படி வந்தால்தான் வாக்களிக்க முடியும்: தேர்தல் ஆணையம் உத்தரவு!

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டு. அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மறுபுறம் அரசியல் கட்சிகள் தேர்தல் வேலைகளை தொடங்கிவிட்டன. தேர்தலில் வெற்றிப்பெற்று ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என அதிமுகவும், ஆட்சியை கைப்பற்ற...

ஸ்ரீரெட்டிக்கு அடித்த ஜாக்பாட்: அந்த நடிகையின் வாழ்க்கை வரலாறு படத்துக்கு இவுங்கதான் சரி!

தெலுங்கு திரையுலகில் நடிக்க வாய்ப்புக்காக நடிகைகளை பலாத்காரம் செய்யும் பழக்கம் இருக்கிறது என்ற புகார்களோடு தமிழகத்துக்குள் நுழைந்த ஸ்ரீரெட்டி தமிழ் திரையுலகில் விஷால், ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தொடர்ந்து...

ஏன் 120/80 இருந்தால் நார்மல் ரத்த அழுத்தம்., இது ஒவ்வொருவருக்கும் வேறுபடுமா?

முன்பெல்லாம் 50 வயதுக்கு மேற்பட்ட சில நபர்களுக்கு மட்டுமே ரத்த அழுத்தம் இருப்பதாக கேள்விப்பட்டிருப்போம். தற்போது, 30 வயதுடையவர்கள் கூட பி.பி. இருப்பதாக சர்வ சாதாரணமாக கூறிவிட்டு செல்கின்றனர். இதனால், ரத்த அழுத்தம்...

சசிகலா விஷயத்தில் மௌனம்: தனி ரூட்டில் பயணிக்கும் ஓபிஎஸ்!

பெங்களூரு சிறையிலிருந்து விடுதலையான சசிகலா குறித்து இதுவரை எவ்வித கருத்தும் தெரிவிக்காமல், துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளரும் ஓ.பன்னீர்செல்வம் மௌனம் காத்து வருகிறார். சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த...

Related News

பொதுநலன் கருதி “தூது”- தேர்தல் நேரத்தில் இதெல்லாம் சந்திக்கனும்- உஷார் மக்களே!

தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவித்த நாளில் இருந்தே தேர்தல் நடத்தை விதிகள் அமல் படுத்தப்பட்டது. தங்களது பகுதிகளில் திடீரென சாலைகள் முளைக்கும். முளைக்கும் சாலைகள் பாதியோடு அறுபட்ட நிலையில் இருக்கலாம் காரணம்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here