கமல்ஹாசன் சொல்லும் ஒரே நல்லவர்கள் அதிமுகவினர்தான் என்று, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற அனைத்து கட்சிகளும் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. வெற்றிக்கான அடித்தளத்தை போட்டு வரும் அதே நேரத்தில், தோல்விக்கான வாய்ப்புகளையும் அரசியல் கட்சிகள் குறைத்து வருகின்றன.
2016 சட்டமன்ற தேர்தலில் 1.03% வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றதால், இரு கழகங்களும் நுணுக்கமான உக்திகளை வகுத்து வருகின்றன. இந்த சூழலில், மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அமமுக போன்றவை முக்கியத்துவம் பெறுகின்றன. கடந்த 2019ம் ஆண்டில் சந்தித்த முதல் தேர்தலிலேயே மக்கள் நீதி மய்யம் 3.77% வாக்குகளை பெற்றது.
இதனால், கமல்ஹாசனை கூட்டணிக்குள் இழுக்க காங்கிரஸ் வெளிப்படையாகவும், பல கட்சிகள் மறைமுகமாகவும் முயற்சித்து வருகின்றன. இதனிடையே, கழகங்களுடன் கூட்டணி இல்லை என்றும், நல்லவர்களுடன் தான் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்கும் எனவும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறினார்.
இந்தநிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், .பாஜகவுடன் கூட்டணியில் ஒற்றுமையாக உள்ளோம், அதில் எந்த மாறுபாடும் இல்லை. கமல்ஹாசன் சொல்லும் ஒரே நல்லவர்கள் அதிமுகவினர்தான்.” என்று கூறினார். சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் கூட தேர்தலில் தோல்வியை தழுவ கூடும் என்பதால், மக்கள் நீதி மய்யம் கட்சியை கூட்டணிக்குள் இழுக்க அதிமுக திட்டமிட்டுள்ளதோ என கேள்வி எழுத்துள்ளது.