Home செய்திகள் தமிழகம் அன்புமணிக்கு அமைச்சர் பதவியா? – பாமக போராட்டத்தின் பின்னணி!

அன்புமணிக்கு அமைச்சர் பதவியா? – பாமக போராட்டத்தின் பின்னணி!

வன்னியர்களுக்கு 20% தனி இடஒதுக்கீடு கோரி டிசம்பர் 1ம் தேதி முதல் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பாமகவினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கான ஆயத்த பணிகளை அனைத்து கட்சிகளும் தொடங்கி விட்டன. திமுகவை பொறுத்தவரை அதே கூட்டணி தொடரும் என்று கூறப்படுகிறது. மற்றொரு பக்கம், அதிமுக – பாஜக இடையே கூட்டணி உறுதியாகிவிட்டது. அதேசமயம், தேமுதிக மற்றும் பாமக தரப்பில் இன்னும் கூட்டணி குறித்து குழப்பம் நீடித்து வருகிறது.

demanding a separate reservation of 20% for the Vanni

கடந்த மக்களவை தேர்தலில், அதிமுக கூட்டணியில் பாமக இரண்டாவது இடத்தில் இருந்தது. சட்டப்பேரவை தேர்தலிலும் அதே அந்தஸ்தில், கூடுதல் தொகுதி, ஆட்சியில் பங்கு போன்ற கோரிக்கைகளை பாமக முன் வைப்பதாக சொல்லப்படுகிறது. பாமகவுக்கு இணையாக, பாஜகவும் அதிக தொகுதிகளுக்கு ஆசைப்படுவதால், அதிமுக செய்வதறியாமல் திகைத்து உள்ளது.

இந்த சூழலில், கூட்டணி மாறுவதற்கு பெயர்போன ராமதாஸ் தரப்பு, திமுகவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால், இந்த பேச்சுவார்த்தைக்கு மூடு விழா போட ஏதுவாக, திமுகவிற்கு வேறு இடத்தில் இருந்து ஆதரவு கிடைத்தது.

காடுவெட்டி குரு மகன் கனலரசன், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை அண்மையில் சந்தித்து, திமுகவிற்கு தனது ஆதரவை தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, திமுகவிற்கு ஆதரவாக வன்னியர் இளைஞர்களை திரட்டும் பணியில் கனலரசன் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக வட மாவட்டங்களில் உள்ள திமுக மாவட்டச் செயலாளர்கள் கனலரசனுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இதனிடையே, வன்னியர்கள் மத்தியில் செல்வாக்கு குறைந்து வரும் நிலையில், கல்வி,வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கூறி பாமக சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதிமுக கூட்டணியில் கூடுதல் தொகுதி, பதவி போன்ற லாபங்களுக்காக, இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டதாக பல தரப்பில் இருந்து விமர்சிக்கப்படுகிறது.

தனது சாதி வாக்கு வங்கியை நிரூபிக்க இத்தகைய போராட்டங்களை ராமதாஸ் நடத்தி வன்னியர்களை இரையாக்குவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. ஒவ்வோரு முறையும் தேர்தல் நேரத்தில் இதுபோன்ற போராட்டங்களை ராமதாஸ் முன்னெடுப்பது வழக்கம் என்றாலும், இம்முறை வேறு சில காரணங்களும் இருப்பதாக சொல்லப்படுகிறது.

குறிப்பாக, விரைவில் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும், இதில், தமிழகத்தில் இருந்து 3 பேருக்கு அமைச்சர் பதவி கிடைக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், சட்டப்பேரவை தேர்தல் மட்டுமின்றி, மத்திய அமைச்சர் பதவியையும் குறிவைத்து போராட்டம் நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

பஞ்சமே இல்லாமல் “ரத்தம், கத்திக்குத்து, ஆபாசம், கெட்டவார்த்தை”: குருதிக்களம் எப்படி இருக்கு?

வட சென்னை என்றாலே கொலை, ரத்தம், பகை என தொடர்ந்து வன்மத்தை பார்வையாளர்கள் மனதில் பதிய வைக்கும் பழக்கம் தமிழ் திரையுலகில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதில் குருதிக்களம் என்ற தொடர் ஒருபடி...

பழைய வாகனங்கள் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு: புதிய வரி கொண்டு வரும் மத்திய அரசு!

சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் உள்ள பழைய வாகனங்கள் மீது பசுமை வரி விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு நகரங்களில் பெரும் பிரச்சனையாக நிலவி வருகிறது. புதிய...

மாண்புமிகு விஜய்சேதுபதி அவர்களே: கையில் மைக் வைத்திருப்பவர்கள் எல்லாம் உங்கள் எதிரியா?

வளர்ச்சிக்கு தேவைப்படும் பத்திரிகையாளர்கள் உங்களை சுற்றி வலம் வரும் கேள்விகளை கேமராவின் முன்பு கேட்கும்போது எதிரிகளா? தென்மேற்கு பருவக் காற்றில் தொடங்கி மாஸ்டர் வரை விஜய்சேதுபதி தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும் மெய்சிலிர்க்க வைக்கும் விதமாகவே...

இந்தியாவை உலுக்கியா அர்னாப் கோஸ்வாமி வாட்ஸ்அப் சாட்டிங்: அரசின் மௌனம் எதற்கு- காங்கிரஸ் கேள்வி?

ரிபப்ளிக் தொலைக்காட்சி சேனலின் தலைமை செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மற்றும் பார்க் அமைப்பின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி பார்த் தாஸ்குப்தா ஆகியோரின் மீது டிஆர்பி மோசடி வழக்கில் மும்பை காவல்துறை...

Related News

இது எங்க எல்லை: அருணாசலப் பிரதேசத்தில் சீனா உருவாக்கிய கிராமம்!

அருணாசலப் பிரதேச மாநிலத்தில் உருவாக்கப்பட்டுள்ள கிராமம், தங்கள் நாட்டின் எல்லைக்குள் இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. சீன அரசு, வறுமை ஒழிப்பு கிராமங்கள் என்ற பெயரில் அந்நாடு முழுவதும் கிராமங்களை உருவாக்கி வருகிறது. இதன்படி, சுமார்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here