Home செய்திகள் தமிழகம் சீமானிசம்னு ஒன்னு இல்லவே இல்ல:கல்யாணசுந்தரம்., நாம் தமிழர் கட்சியில் என்னதான் பிரச்சனை?

சீமானிசம்னு ஒன்னு இல்லவே இல்ல:கல்யாணசுந்தரம்., நாம் தமிழர் கட்சியில் என்னதான் பிரச்சனை?

நாம் தமிழர் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களில் ஒருவரான கல்யாணசுந்தரத்தை கட்சியில் இருந்து விலக்க சதி திட்டம் தீட்டப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் தேசியத்தை முன் எடுக்கும் நாம் தமிழர் கட்சியில் அண்மை காலமாகவே சலசலப்பு நிலவி வருகிறது. கட்சியின் ஒரே தலைவர் பிரபாகரன் தான் என முழக்கமிடும் நாம் தமிழர் கட்சியில் மார்க்சியம், கம்யூனிசம் போல சீமானிசம் என்ற கொள்கை பிடிப்பு தலைதூக்க தொடங்கி உள்ளது. இதனால், சீமானின் ரசிகர் மன்றமாக கட்சி மாறிவிட்டதோ என்ற அச்சம் கட்சியின் பெரும்புள்ளிகள் முதல், கடைக்கோடி தம்பிகள் வரை எழுந்துள்ளது. இதை தட்டிக்கேட்க நினைக்கும் தம்பிகளும் ஒதுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின்றன.

இதனிடையே, கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளரும், கட்சி பேதமின்றி செல்வாக்கு உடையவருமான கல்யாணசுந்தரத்தை கட்சியில் இருந்து விலக்க சதி திட்டம் நடைபெறுவதாக தகவல்கள் கசிய தொடங்கின. 2021 சட்டமன்ற தேர்தலில் கல்யாணசுந்தரத்தை நாம் தமிழர் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக முன் நிறுத்த வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சுந்தரவள்ளி கூறியதே இதற்கு காரணம் என்று பேசப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, இடதுசாரி கொள்கை உடைய அகில இந்திய மாணவர் கூட்டமைப்பு உறுப்பினராக இருந்து பின்னாளில் நாம் தமிழர் கட்சியில் சேர்ந்த கல்யாணசுந்தரம், கட்சியில் பெருமளவு ஒதுக்கப்படுவதாக கூறப்பட்டது. இதனால், கல்யாணசுந்தரத்தை கட்சியில் இருந்து விலக சதி திட்டம் தீட்டப்படுவதாகவும், கட்சியில் தாமாக விலக அவர் வற்புறுத்தப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்தநிலையில், எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல, ஜூனியர் விகடனில் அனுப்புநரின் பெயரின்றி கடிதம் ஒன்று வெளியிடப்பட்டது. கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எழுதப்பட்ட அந்த கடிதத்தில்,” நாம் தமிழர் எனும் கட்சியை சீமான் பிரைவேட் லிமிடெடாக மாற்றியதைத் தவிர இந்தப் பத்து ஆண்டுகளில் நீங்கள் நிகழ்த்திய சாதனைதான் என்ன? ஈழ உணர்வை மைய இழையாக வைத்துக் கட்டப்பட்ட கட்சியை உங்கள் ரசிகர் மன்றமாக மாற்றினீர்கள்.

தமிழ்த் தேசியம் வேண்டாம் இனி சீமானிசம் போதும் என்ற முடிவுக்கு வந்தீர்கள். அரசியல் தலைவர்களின் பிம்ப அரசியலை, குடும்ப அரசியலைப் பற்றி மேடைதோறும் தொண்டை கிழியப் பேசிய நீங்கள், உங்கள் பிறந்தநாளைக் கறி விருந்தோடு கட்சியினர் கொண்டாட அனுமதித்தீர்கள்”, என பல கேள்விகளும், குற்றச்சாட்டுகளும் முன் வைக்கப்பட்டுள்ளன.

இந்த கடிதத்தை எழுதியதே அதிருப்தியில் உள்ள கல்யாணசுந்தரம் தான் என சமூக வலைதளங்களில் குற்றம்சாட்டப்பட்டது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தமிழ் கேள்வி என்ற யூடியூப் சேனலுக்கு கல்யாணசுந்தரம் பேட்டி கொடுத்துள்ளார். அதில், “கடிதத்தை நான் எழுதவில்லை. ஆனால் கடிதத்தில் உள்ள கருத்துகளை ஆமோதிக்கிறேன். ஏன் சீமானே கடிதத்தில் உள்ள சில கருத்துகளை ஆதரிப்பார். சீமானிசம் என்று ஒரு கொள்கையே இல்லை. என்னை கட்சியில் இருந்து விலக்க சதி நடப்பதாக தோன்றுகிறது.

கடந்த 5 மாதங்களாக சீமானை சந்தித்த முயற்சித்து வருகிறேன். தற்போதும் முயற்சிக்கிறேன். அவரை சந்திக்க எனக்கு அனுமதி அளிக்க வேண்டும். நான் இன்றும், என்றும் நாம் தமிழர் கட்சியிலேயே இருக்க விரும்புகிறேன். நான் மிகுந்த மன உளைச்சலில் உள்ளேன். கட்சியில் நிலவும் சலசலப்புகளுக்கு சீமான் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.” என்று கூறியுள்ளார்.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

அவுங்க மேட்டரில்ல., ஒரே எதிரி இவுங்கதான்., பொறுத்திருந்த பாருங்கள்: டிடிவி அதிரடி

அமமுக ஆட்டம் ஆரம்பம் என்றே கூறலாம். தமிழகம் கர்நாடகா எல்லையில் தொடங்கி சென்னைவரை சசிகலா வந்துகொண்டிருந்த வழியெல்லாம் அவருக்கு கோலகல வரவேற்பு அளிக்கப்பட்டது. அமைதியாக செய்தி பேட்டியில் மட்டும் பார்த்து வந்த அமமுக...

சென்னையில் 10ல் 4 பேருக்கு கொரோனா: ஆய்வில் தகவல்!

சென்னையில் 10ல் 4 பேருக்கு கடந்த காலத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக, ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் கோரத்தாண்டவம் ஆடி வந்த கொரோனா தொற்று பாதிப்பு, தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. மகாராஷ்டிரா மற்றும் கேரளாவை...

லைசென்ஸ்ச புதுப்பிக்கனுமா? இனி ஆர்டிஓ அலுவலகம் செல்ல வேண்டியதில்லை!

வட்டார போக்குவரத்து அலுவலகம் செல்லாமலேயே, 18 சேவைகளை பெற ஆன்லைன் மூலம் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மக்கள் எளிதில் சேவைகளை பெற அனைத்து துறைகளும் டிஜிட்டல் மயமாகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வட்டார போக்குவரத்து...

தீதி Vs மோடிஜீ: மேற்கு வங்கம் யாருக்கு?

மேற்கு வங்கத்தில் வரும் மார்ச் 27ம் தேதி முதல் 8 கட்டங்களாக 294 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மே மாதம் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு...

Related News

வாக்காளர்கள் இப்படி வந்தால்தான் வாக்களிக்க முடியும்: தேர்தல் ஆணையம் உத்தரவு!

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டு. அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மறுபுறம் அரசியல் கட்சிகள் தேர்தல் வேலைகளை தொடங்கிவிட்டன. தேர்தலில் வெற்றிப்பெற்று ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என அதிமுகவும், ஆட்சியை கைப்பற்ற...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here