இந்திய பெருங்கடல், அரபிக்கடல், வங்ககடல் என முக்கடல் சங்கமிக்கும் இடம் கன்னியாகுமரி. திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபம் என பல சிறப்புகள் கன்னியாகுமரி கடலில் உள்ளது. இந்தியாவின் எல்லை ஆகக்கண்டோமானால் குமரி முதல் காஷ்மீர் வரை என்றே கூறப்படுகிறது.
குழந்தையாய் துள்ளிக் குதிக்கும் அலைகள் கரையை தழுவி மீண்டும் கடலுக்குள் ஓடும் அழகு என ஏணைய அற்புதங்கள் உள்ளே புதைந்துக் இருக்கிறது. மனிதர்களின் சௌகரியத்திற்கு நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு என ஐம்பூதங்களையும் துன்பப்படுத்தி துயரப்படுத்தி சித்தரவதைக்கு ஆளாக்கும் காலமாக மாறிவருகிறது. இதனால் பருவநிலை மாற்றம் காலம்தவறி ஏற்பட்டு வருகிறது.
2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி மறக்கமுடியா நிகழ்வாக இருக்கும். லட்சக்கணக்கான உயிர்களை காவுவாங்கியது. புலி பின்வாங்கி பாய்ந்தது போல் கடல் உள்வாங்கி பல மீட்டர் உயரம்வரை உயர்ந்து கரை தாண்டி ஊருக்குள் புகுந்தது.
அதேபோல் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி கன்னியாகுமரி கடலின் தன்மை மாற்றம் அடைந்தது. அக்., 1 ஆம் தேதி மாலை 6 மணி அளவில் கடல் உள்வாங்கியாது இரவு முழுவதும் உள்வாங்கிய நிலையில் இருந்த கடல் விடிந்த பிறகு இயல்பு நிலைக்கு வந்தது.
நேற்று பகல் கடல் இயல்பு நிலையிலேயே இருந்த நிலையில் சரியாக மாலை 6 மணிக்கு இரண்டாவது நாளாக கடல் மீண்டும் உள்வாங்கியது. கொஞ்சம் கொஞ்சமாக உள்வாங்கிய கடல் சுமார் 50 அடி தூரம் உள் சென்றது. இதனால் விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை என அனைத்தும் வெற்றுஇடத்தில் அமைந்திருப்பது போல் காட்சி அளித்தது.
கடல் உள்வாங்கியதும் ராட்சத பாறை, மணல் திட்டுகள் என அனைத்தும் வெட்டவெளியாக தெரியத் தொடங்கியது. இதனால் அப்பகுதியில் பீதி அடையத் தொடங்கினார். கடலோர மக்கள் இரவு முழுவதும் தூங்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. மீனவர்கள் அச்சத்தில் இருந்தனர். இதுகுறித்து தெரிவித்த மீனவர்கள், பகல்நேரத்தில் எப்போதாவது கடல் உள்வாங்கும் ஆனால் இரவு நேரங்களில் கடல் உள்வாங்கியது இதுவே முதன்முறை எனவும் 2 நாட்களாக இரவு நேரங்களில் கடல் உள்வாங்கி இருப்பது வியப்படையும் விதமாக இருக்கிறது எனவும் கூறுகின்றனர்