நயன்தாராவால் உதயநிதி ஸ்டாலினுக்கு பிரச்சனை வரப் போகிறது என்று சர்ச்சைகளுக்கு பெயர்போன அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
2021 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர் , பூத் கமிட்டியில் எல்லாரும் சேர்ந்து வேலை பார்க்க வேண்டும். புதிய வாக்காளர்களை சேர்க்க வேண்டும்.0 இரட்டை இலை படம், அம்மா படம், எம்ஜிஆர் படம், இபிஎஸ் படம், ஓபிஸ் படம் போட்ட அடையாள அட்டையை குத்திக்கிட்டுதான் எல்லாரும் ஓட்டு கேட்க வேண்டும்.
அதிமுக விருதுநகர் மாவட்டத்தில் 7 தொகுதிகளிலும் வெற்றி பெறுவது உறுதி. அதிமுக புலி வேட்டைக்கு போய்க்கொண்டிருக்கிறோம். திமுக எலி வேட்டைக்கு வருகிறார்கள். நாம் அம்பை எடுத்து தொடுத்து வெற்றி பெற போகிறோம்.
ஸ்டாலின் என்னவோ முதலமைச்சர் மாதிரியே நடந்துக்கிறார். மருத்துவ கல்லூரியில் படிக்க அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு பெற்றுத்தந்தது முதலமைச்சரும், துணை முதலமைச்சரும்தான். ஆனால், அதை ஸ்டாலின், தான் வாங்கி தந்த மாதிரி பேசுகிறார். யாரோ பெற்ற பிள்ளைக்கு நான் தான் அப்பன் என்று ஸ்டாலின் சொல்வது அசிங்கமாக உள்ளது
இப்போ ஸ்டாலினுக்கு புது பிரச்சனை ஒன்று உள்ளது. அவரை பழிவாங்க அவரது அண்ணன் அழகிரி கிளம்பிவிட்டார். ஸ்டாலின் சொத்தில் பங்கு கொடுக்கவில்லை என்று, அழகிரி காவல்துறையில் புகார் கொடுத்தால், அரசு உடனே நடவடிக்கை எடுக்கும்.
உதயநிதி ஸ்டாலினுக்கும் ஒரு பெரிய பிரச்சனை வருகிறது அவர் மீது நயன்தாரா புகார் கொடுக்க போகிறார். உதயநிதி ஸ்டாலின் போக்சோ சட்டத்தில் உள்ளே போகப் போகிறார்,” என்று கூறினார்.
சர்ச்சைகளுக்கு பெயர்போன, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவ்வப்போது உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா குறித்து கருத்து தெரிவிப்பது வழக்கம். அந்த வகையில், ஏற்கனவே, நயன்தாராவை கட்டிப்பிடித்ததால் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக இளைஞரணி பதவி வழங்கப்பட்டதா என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேள்வி ஒன்றை எழுப்பியது குறிப்பிடத்தக்கது.