மதுரை விமான நிலையத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்,
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், கொரோனா வைரஸ் தடுப்பதற்கு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, படிப்படியாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.
கட்சி நிலைப்பாட்டு எதிராக கருத்து விவசாய சட்டத்திருத்த மசோதா குறித்து கருத்து தெரிவித்த மக்களவை அதிமுக எம்பி பாலசுப்பிரமணியனிடம் விளக்கம் கேட்கப்படும். திமுக தலைவர் ஸ்டாலின் வேளாண்மை மசோதா சட்டம் குறித்து தெரியாமல் பேசுகிறார். மத்திய அரசின் இந்த சட்டத்தினால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. விவசாயிகளுக்கு நன்மைதரக் கூடிய எந்த விஷயத்தையும் அதிமுக ஆதரிக்கும். விவசாயிகள் குறித்து திமுக தலைவர் ஸ்டாலினுக்கு என்ன தெரியும்.
எதிர்கட்சி தலைவர் ஆறுமாதத்தில் திமுக ஆட்சிக்கு வரும் என்று கூறினாரே என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் ஜோசியம் பார்க்கிறார் என்று நினைக்கிறேன் நான் ஜோசியம் பார்க்கவில்லை மக்களை பார்க்கிறேன் என கூறினார். ஆட்சிக்கு யார் வரவேண்டும் என்பது மக்களின் முடிவு.
அதிமுக அரசு பல்வேறு திட்டங்களை மக்களுக்கு செய்து கொடுத்திருக்கிறோம் எனவே துணிச்சலாக மக்களை சந்திப்போம். இதை பொறுக்க முடியாத திமுக பூதக்கண்ணாடி வைத்து தவறுகளை தேடிக்கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் இரண்டாவது தலை நகரமாக மதுரையே அறிவிக்க வேண்டும் என்பது குறித்த கேள்விக்கு ஒவ்வொரு மாவட்ட மக்களும் எங்களது மாவட்டத்தை தலைநகரம் ஆக்குங்கள் என்று கோரிக்கை வைக்கிறார்கள் அதற்காக அனைத்து மாவட்டங்களிலும் தலைநகரமாக முடியுமா என்று தெரிவித்தார்.
திமுக தலைவர் பில்டப் கொடுக்கிறார் நாங்கள் மக்களை நேரில் சந்தித்து வருகிறோம். ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின் உறுப்பினர் சேர்க்கை என்று கூறி காணொளி காட்சியை ஒரே அறையில் உட்கார்ந்து நடத்தி வருகிறார்.