Home செய்திகள் இந்தியை விரட்டியடிக்கும் தமிழக கட்சிகள்: மும்மொழி கொள்கையின் வரலாறு என்ன?

இந்தியை விரட்டியடிக்கும் தமிழக கட்சிகள்: மும்மொழி கொள்கையின் வரலாறு என்ன?

சாதி, மதம், மொழியை மையமாக கொண்டு தான் இந்திய அரசியல் கட்சிகள் செயல்பட்டு வருகிறது எனவும் இதற்கு பெரியார், அண்ணா வழி நடக்கும் திராவிட கட்சிகளும் விதிவிலக்கில்லை எனவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது.

பெயரளவில் சாதி இல்லையடி பாப்பா என பாடினாலும், சாதியின் அடிப்படையிலேயே ஆட்சி அதிகாரங்கள், கட்சி பொறுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது என்பதை நிரூபிக்கும் வகையில் செய்திகள் அவ்வப்போது உலா வருகிறது. மதம், மொழி விவகாரங்களும் கூட தமிழகத்தில் லேசுப்பட்டது இல்லை. குறிப்பாக, காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கை ஒரு மொழி புரட்டி போட்டது என்றால், அது தமிழ் மொழி தான். இந்த வரலாற்று சிறப்பம்சமிக்க நிகழ்வு நடந்தது தமிழகத்தில் தான்.

உணர்ச்சி பொங்கும் மொழி விவகாரம்:

1937ம் ஆண்டிலேயே இந்தி மொழி தமிழகத்தின் மீது திணிக்கப்பட்டது. பிரிட்டிஷ் பேரரசின் கீழ், ராஜாஜி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி அப்போது தமிழகத்தில் நடைபெற்று வந்தது. அந்த காலக்கட்டத்தில், 6ம் முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இந்தி மொழி கட்டாயமாக்கப்பட்டது.

இதற்கு பெரியார் தலைமையில் கடும் எதிர்ப்பு கிளம்பிய போதிலும், காங்கிரஸ் ஆட்சி முடியும் வரை இந்த திட்டம் தொடர்ந்தது. 1939ம் ஆண்டில் தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி வந்த பிறகே, இந்தி மொழி விருப்ப பாடமாக மாற்றப்பட்டது.

சுதந்திரத்திற்கு பிறகு, 1950ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி இந்தியாவில் அரசியலமைப்பு சட்டம் அமலானது. அரசியலமைப்பு சட்டத்தில் இந்தி ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டது. மேலும், அடுத்த 15 ஆண்டுகளுக்கு ஆங்கிலம் ஆட்சி மொழியாக தொடரும் என்றும், இதை நீட்டிக்க நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதன்படி, 1965ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதியுடன் அரசு அலுவலகங்களில் ஆங்கிலம் மொழி பயன்பாடு முடிவடைய வேண்டும்.

இந்த மாற்றத்திற்கான வாய்ப்பு தமிழ்நாடு, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், கர்நாடகா, ஆந்திரா, பஞ்சாப் உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களில் தீவிர போராட்டங்களுக்கு வழி வகுத்தன. இதில் சில போராட்டங்கள் வன்முறையாகவும் மாறின. நிலைமையை கட்டுப்படுத்த முடியாமல் திக்குமுக்காடிய ஜவஹர்லால் நேரு தலைமையிலான மத்திய அரசு நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற முடிவு செய்தது.

1963ம் ஆண்டில் அலுவல் மொழிகள் சட்டம் இயற்றப்பட்டது. இதன்படி, இந்தியளவில் அலுவல் பணிகளுக்கு இந்தியும், ஆங்கிலமும் பயன்படுத்தப்படும் என்றும், மாநிலங்கள் தங்களுடைய அலுவல் மொழியை தாங்களே தேர்வு செய்து கொள்ளலாம் எனவும் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், 1964ம் ஆண்டில் ஆங்கில பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வர மீண்டும் முயற்சி நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்கள் கடும் கண்டனம் தெரிவித்தன.

தமிழகத்தின் பல பகுதிகளில் மாணவர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. வன்முறையை கட்டுப்படுத்த துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். காணும் இடமெல்லாம் வன்முறை, துப்பாக்கிச் சூடு, தடியடி என தமிழகம் ஸ்தம்பித்தது. நிலைமையை சரி செய்ய ஆங்கில பயன்பாடு தொடரும் என அப்போதைய காங்கிரஸ் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி உறுதி அளித்தார்.

ஆனால், இந்த மொழி விவகாரம் தமிழகத்தில் காங்கிரஸின் தலையெழுத்தை மாற்றி அமைத்தது. 1967 சட்டசபை தேர்திலில் காங்கிரஸ் தோல்வியை தழுவியது. அன்றில் இருந்து இன்று வரை தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முடியாமல் காங்கிரஸ் தவித்து வருகிறது.

லால் பகதூர் சாஸ்திரி உறுதியை தொடர்ந்து, 1967ஆம் ஆண்டில் அலுவல் மொழிகள் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. இதன்படி, இந்தியை அலுவல் மொழியாக ஏற்காத மாநிலங்களில் ஆங்கில பயன்பாடு தொடரும் என தெரிவிக்கப்பட்டது.
மாநில சட்டப்பேரவைகள் மற்றும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தீர்மானம் நிறைவேற்றினால் மட்டுமே ஆங்கில மொழி பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வர முடியும் எனவும் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, மும்மொழி கொள்கை குறித்த மக்களின் கவலைகளை நீக்குவதற்காக, 1968ம் ஆண்டில் தமிழக சட்டப்பேரவையில் அப்போதைய முதலமைச்சர் அண்ணா தலைமையிலான திமுக அரசு தீர்மானம் நிறைவேற்றியது. தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் மும்மொழி திட்டத்தை அகற்றிவிட்டு தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளுக்கு இடமளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என அனைவரும் மும்மொழி கொள்கை, இந்தி திணிப்புக்கு எதிராக குரல் கொடுத்தனர்.

இந்த நிலைப்பாட்டையே தேர்தல் வரும் தருவாயில் தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் பின்பற்றி உள்ளார். எஜமானர்களை எதிர்த்து, தமிழர்களின் உணர்விற்கு ஊக்கமளித்துள்ள எடப்பாடியாரின் வியூகம் வரும் தேர்தலில் வெல்லுமா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

அவுங்க மேட்டரில்ல., ஒரே எதிரி இவுங்கதான்., பொறுத்திருந்த பாருங்கள்: டிடிவி அதிரடி

அமமுக ஆட்டம் ஆரம்பம் என்றே கூறலாம். தமிழகம் கர்நாடகா எல்லையில் தொடங்கி சென்னைவரை சசிகலா வந்துகொண்டிருந்த வழியெல்லாம் அவருக்கு கோலகல வரவேற்பு அளிக்கப்பட்டது. அமைதியாக செய்தி பேட்டியில் மட்டும் பார்த்து வந்த அமமுக...

சென்னையில் 10ல் 4 பேருக்கு கொரோனா: ஆய்வில் தகவல்!

சென்னையில் 10ல் 4 பேருக்கு கடந்த காலத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக, ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் கோரத்தாண்டவம் ஆடி வந்த கொரோனா தொற்று பாதிப்பு, தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. மகாராஷ்டிரா மற்றும் கேரளாவை...

லைசென்ஸ்ச புதுப்பிக்கனுமா? இனி ஆர்டிஓ அலுவலகம் செல்ல வேண்டியதில்லை!

வட்டார போக்குவரத்து அலுவலகம் செல்லாமலேயே, 18 சேவைகளை பெற ஆன்லைன் மூலம் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மக்கள் எளிதில் சேவைகளை பெற அனைத்து துறைகளும் டிஜிட்டல் மயமாகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வட்டார போக்குவரத்து...

தீதி Vs மோடிஜீ: மேற்கு வங்கம் யாருக்கு?

மேற்கு வங்கத்தில் வரும் மார்ச் 27ம் தேதி முதல் 8 கட்டங்களாக 294 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மே மாதம் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு...

Related News

வாக்காளர்கள் இப்படி வந்தால்தான் வாக்களிக்க முடியும்: தேர்தல் ஆணையம் உத்தரவு!

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டு. அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மறுபுறம் அரசியல் கட்சிகள் தேர்தல் வேலைகளை தொடங்கிவிட்டன. தேர்தலில் வெற்றிப்பெற்று ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என அதிமுகவும், ஆட்சியை கைப்பற்ற...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here