Home செய்திகள் உலகம் சட்டம் ஒரு இருட்டறை: தவறான தீர்ப்புகளும் வாழ்க்கையை தொலைத்த நிரபராதிகளும்!

சட்டம் ஒரு இருட்டறை: தவறான தீர்ப்புகளும் வாழ்க்கையை தொலைத்த நிரபராதிகளும்!

சாலை விபத்தில் யாராவது ஒருவர் அடிப்பட்டு கிடந்தால் நமக்கு எதுக்கு வம்பு என பலர் ஒதுங்கிவிடுவார்கள். காரணம் கேட்டால், காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று சாட்சியாக நியமிப்பார்கள் பின்பு கோர்டு கேஸூ என்று அழையனும் என கூறுவார்கள். நமக்குள் இருக்கும் மனசாட்சி நீதி சாட்சிக்கு உட்பட்டு விடுமோ என்ற பயமே பிரதான காரணம். சாலை விபத்துக்கே இந்த கதி என்றால் கொலை சம்பவங்களுக்கு சொல்லவா வேண்டும்.

பல குற்றவாளிகள் தப்பிக்கலாம் ஆனால் ஒரு நிரபராதிக் கூட தண்டிக்கப்பட்டு விடக்கூடாது என சட்டம் கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமே வாய்தா மேல் வாய்தா வழக்கு இழுத்தடிப்பு போன்ற சம்பவங்கள். இதையும் மீறி நீதிமான்கள் தவறிழைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

தங்களது வாழ்நாளில் பல ஆண்டுகளை குற்றமே செய்யாமல் சிறையிலேயே கழித்தவர்களை குறித்துதான் நாம் பார்க்கப்போகிறோம். நாம் இழக்கும் எதை வேண்டுமானாலும் திரும்பப் பெறலாம் ஒன்றை தவிர அதுதான் காலம். நாம் பார்க்கப்போகும் அனைவரும் காலத்தை வீணாக அழித்தவர்கள் இல்லை. குற்றமே செய்யமால் தவறான நீதியால் தண்டனை அனுபவித்தவர்கள்.

பொதுவாக குடும்பத்தில் தம்பி செய்த தவறுக்கு தாயார் நம்மை ஒரு அடி அடித்தாலே நமக்கு கோவம் பீறிக்கொண்டு வரும். நாம் பார்க்கப்போகும் அனைவரும் குற்றமே செய்யாமல் நான்கு சுவருக்குள் பல ஆண்டுகளை போக்கியவர்கள்.

அந்த சூழலில் சிறைவாசம் அனுபவிக்கும் நபரின் மனநிலை என்னவாக இருக்கும். சிறைவாசம் அனுபவிக்கும் நபருக்கு வழங்கிய தீர்ப்பு தவறு என கண்டறியப்பட்டால் அந்த நிரபராதி இழந்த காலத்தை தீர்ப்பளித்த நீதிபதியால் திரும்பக் கொடுக்க முடியுமா அவருக்கு இழப்பீடு தான் என்ன என பல கேள்விகள் நமக்குள் வரலாம். முதலில் தவறே செய்யாமல் சிறைவாசம் அனுபவித்த நிரபராதிகள் குறித்தும் பார்க்கலாம்.

40 ஆண்டுகள் தவறு செய்யாமல் சிறைவாசம்:

அமெரிக்கா லூசியானா மாகாணத்தை சேர்ந்தவர் ஆர்ச்சி வில்லியம்ஸ், ஏழை குடும்பத்தில் பிறந்து தேவாலயங்களில் பாடல்கள் பாடி குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். 1983 ஆம் ஆண்டில் ஆர்ச்சிக்கு 22 வயது இருக்கும் போது பாலியல் வழக்கு ஒன்றில் லூசியானா போலீஸார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர். அங்கு ஆர்ச்சியை குற்றாவாளியென தீர்ப்பளித்து வாழ்நாள் சிறைதண்டனை வழங்கப்பட்டது.

தான் குற்றவாளி அல்ல என ஆர்ச்சிக்கு மட்டுமே தெரிந்த நிலையில் அவர் மீது அவதூறு விமர்சனங்கள் குவிக்கப்பட்டுள்ளது. எளிமையில் வாடிய ஆர்ச்சி மேல்முறையீடு செய்வதற்கு பணமில்லாமல் தவித்துள்ளார்.

இந்த நிலையில் 1995 ஆம் ஆண்டு ஏழைகளுக்கு சட்டப்போராட்டம் நடத்தும் தனியார் தொண்டு நிறுவனம் ஒன்றை பற்றி அறிந்த ஆர்ச்சி அந்த நிறுவனத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் தனது நிலை குறித்தும் தவறே செய்யாமல் தண்டனை அனுபவிப்பது குறித்தும் கடிதம் எழுதியுள்ளார்.

ஆர்ச்சியின் கடிதத்தை பார்த்த அந்த தொண்டு நிறுவனம் 10 ஆண்டுகள் சட்டப்போராட்டம் நடத்தி, பாலியல் வழக்கில் ஆர்ச்சியின் டிஎன்ஏ மற்றும் தடயவியல் ஆதாரங்கள் மூலம் அவர் நிரபராதி என நிரூபித்தது. நீதிமன்றம் அவரை குற்றமற்றவர் என உத்தரவிட சுமார் 40 ஆண்டுகள் குற்றமே செய்யாமல் சிறை தண்டனை அனுபத்து 2019 ஆம் ஆண்டு விடுதலையானார்.

27 ஆண்டு சிறைவாசத்துக்கு பின் குற்றவாளி அல்ல என தீர்ப்பு:

1983 ஆம் ஆண்டு கனடா வான்கூவர் மாகாணத்தில் வசித்து வந்த இவான் ஹென்றி என்பவர் மீது 8 பெண்களை பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டு, இந்த குற்றத்துக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தான் குற்றாவாளி அல்ல என இவான் ஹென்றி நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்து ஒத்திவைத்து ஒத்திவைத்து இறுதியாக 2010 ஆம் ஆண்டு இவான் ஹென்றியை பிரத்தானிய கொலம்பியா நீதிமன்ற நீதிபதிகள் குற்றவாளி அல்ல தீர்ப்பளித்தனர்.

நீதிபதி தீரப்பளித்த 2010 ஆம் ஆண்டும் அவருக்கு வழங்கப்பட்ட 27 ஆண்டுகள் (1983-2010) சிறைவாச காலமும் நிறைவு பெறுவதற்கும் சமமாக இருந்தது.

இந்தியா- நீதிமன்றமே செல்லாமல் குற்றவாளியாக சிறைக்கு அனுப்பப்பட்ட நபர்:

ஹூஸ்னா, ஹூசன் இதுதான் காரணமே, இந்தியாவில் தார் மாவட்டத்தில் நடந்த ஒரு கொலை வழக்கில் ஹூஸ்னா என்ற நபருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இவர் தனது குடும்பத்தாரை பார்க்க பரோலில் சென்று செப்டம்பர் 2016 ஆம் ஆண்டு இறந்துவிட்டார்.

ஆயுள் தண்டனை கைதி பரோல் முடிந்து எப்படி சிறைக்கு வராமல் இருக்கிறார் என அவருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஹூஸ்னா என்பவருக்கு பதிலாக காவல்துறையினர் ஹூசனை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஹூசன் தான் குற்றவாளி அல்ல என பலமுறை கெஞ்சியுள்ளார்.

குற்றவாளிக்கு பதிலாக வேறு ஒரு நபர் சிறையில் இருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து சுமார் நான்கு மாதங்கள் சிறை தண்டனைக்கு ஹூசன் குற்றவாளி என தீர்ப்பளித்து விடுவித்தது. நீதிமன்றமே செல்லாமல் சிறைக்கு சென்ற நபர் இவர்.

இந்தியா- மரணதண்டனை விதித்து தூக்குக்கயிறு வரை சென்ற நிரபராதிகள்:

2003 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா நாசிக்கில் பழத்தோட்டத்தில் கொய்யா பழம் பறிக்கும் குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆறு பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் 17 வயதுக்கு உட்பட்டவர் மீதமுள்ள ஐந்து பேருக்கும் மரணதண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மரண தண்டனை கைதிகளாக அறிவிக்கப்பட்ட ஐந்து பேரும் நீதி போராட்டம் நடத்தியுள்ளனர். சுமார் 13 ஆண்டு காலமாக மூன்று நீதிமன்றங்களும், ஏழு நீதிபதிகளும் இவர்கள் ஐந்து பேரும் குற்றவாளி என தீர்ப்பளித்துள்ளனர்.

சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு உச்சநீதிமன்றம்., முழுக்க முழுக்க சந்தேகம், அனைத்து ஆதாரங்களும் சந்தேகிக்கும் வகையிலான குறைபாடுகள் எனவும் இவர்கள் ஐந்து பேரும் பொய்யாக குற்றச்சாட்டில் சேர்க்கப்பட்டுள்ளார் எனவும் கூறி இவர்கள் ஐந்து பேரையும் உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு விடுவிக்கப்பட்டவர்கள் ஷிண்டே சமூகத்தை சேர்ந்தவர்கள் இவர்கள் இந்தியாவின் மிகவும் ஏழ்மையானவர்கள், மலைவாழ் பழங்குடியினர், குப்பை அள்ளுவது, கால்வாய்களை சுத்தம் செய்வதை தொழிலாக செய்பவர்கள். இந்திய வரலாற்றில் முதன்முறையாக இந்திய உச்சநீதிமன்றம் வழங்கிய மரண தண்டனையை ரத்து செய்து குற்றவாளிகளை விடுதலை செய்தது.

10 ஆண்டுகள் இவர்கள் சிறையில் ஜன்னல் கூட இல்லாத அறையில் மரண தண்டனை கைதிகள் தங்கவைக்கும் அறையில் காலத்தை கழித்துள்ள நிரபராதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

39 ஆண்டுகால சிறைவாசம்:

அமெரிக்கா கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த கிரேக் கோலே தனது தோழியையும் 4 வயது மகனையும் கொலை செய்ததாக 1978 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு மறு ஆய்வு செய்யும் போது கிரேக் கோலே டிஎன்ஏ பரிசோதனையில் இவருக்கும் குற்ற சம்பவத்துக்கும் தொடர்பு இல்லை என தெரிய வருகிறது.

சுமார் 39 ஆண்டுகால சிறை வாசத்துக்கு பிறகு 2017 ஆம் ஆண்டு 79 வயது நிரம்பிய முதியவராக இவர் சிறையில் இருந்து வெளியே வந்தார்.

குற்றத்தை ஒப்புக்கொள்ள சித்ரவதை செய்த போலீஸார்:

சீனாவில் 1993 ஆம் ஆண்டு 2 சிறுவர்கள் கொலை செய்த வழக்கில் ஜாங் யுகுவான் என்பவர் கைது செய்யப்பட்டார். இவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.

இவர் போலீஸார் சித்ரவதை செய்து 2 சிறுவர்களை கொலை செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் வாங்கியதாக குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்த நடைபெற்ற விசாரணையில் இவர் கொலை செய்ததற்கான ஆதாரம் இல்லை என 27 ஆண்டு சிறை தண்டனை பெற்ற பிறகு நிரபராதியாக விடுவிக்கப்பட்டுள்ளார்.

இன்னும் பல நிகழ்வு இந்த பட்டியலை இழுத்துக் கொண்டே போகலாம்.

தவறே செய்யாத நீதிபதி இதுவரை பிறந்திருக்கவில்லை என பிரபல பிரிட்டிஷ் நீதிபதி லார்டு டென்னிங் கூறியிருக்கிறார். நீதிபதிகள் கடவுளாக மதிக்கப்படுவதற்கு முக்கிய காரணம் குற்றவாளி கூண்டில் ஏறும் ஒரு நபரின் வாழ்க்கை அவர்கள் கையில் உள்ளது என்பதற்காகதான்.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

அவுங்க மேட்டரில்ல., ஒரே எதிரி இவுங்கதான்., பொறுத்திருந்த பாருங்கள்: டிடிவி அதிரடி

அமமுக ஆட்டம் ஆரம்பம் என்றே கூறலாம். தமிழகம் கர்நாடகா எல்லையில் தொடங்கி சென்னைவரை சசிகலா வந்துகொண்டிருந்த வழியெல்லாம் அவருக்கு கோலகல வரவேற்பு அளிக்கப்பட்டது. அமைதியாக செய்தி பேட்டியில் மட்டும் பார்த்து வந்த அமமுக...

சென்னையில் 10ல் 4 பேருக்கு கொரோனா: ஆய்வில் தகவல்!

சென்னையில் 10ல் 4 பேருக்கு கடந்த காலத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக, ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் கோரத்தாண்டவம் ஆடி வந்த கொரோனா தொற்று பாதிப்பு, தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. மகாராஷ்டிரா மற்றும் கேரளாவை...

லைசென்ஸ்ச புதுப்பிக்கனுமா? இனி ஆர்டிஓ அலுவலகம் செல்ல வேண்டியதில்லை!

வட்டார போக்குவரத்து அலுவலகம் செல்லாமலேயே, 18 சேவைகளை பெற ஆன்லைன் மூலம் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மக்கள் எளிதில் சேவைகளை பெற அனைத்து துறைகளும் டிஜிட்டல் மயமாகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வட்டார போக்குவரத்து...

தீதி Vs மோடிஜீ: மேற்கு வங்கம் யாருக்கு?

மேற்கு வங்கத்தில் வரும் மார்ச் 27ம் தேதி முதல் 8 கட்டங்களாக 294 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மே மாதம் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு...

Related News

அவுங்க மேட்டரில்ல., ஒரே எதிரி இவுங்கதான்., பொறுத்திருந்த பாருங்கள்: டிடிவி அதிரடி

அமமுக ஆட்டம் ஆரம்பம் என்றே கூறலாம். தமிழகம் கர்நாடகா எல்லையில் தொடங்கி சென்னைவரை சசிகலா வந்துகொண்டிருந்த வழியெல்லாம் அவருக்கு கோலகல வரவேற்பு அளிக்கப்பட்டது. அமைதியாக செய்தி பேட்டியில் மட்டும் பார்த்து வந்த அமமுக...

சென்னையில் 10ல் 4 பேருக்கு கொரோனா: ஆய்வில் தகவல்!

சென்னையில் 10ல் 4 பேருக்கு கடந்த காலத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக, ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் கோரத்தாண்டவம் ஆடி வந்த கொரோனா தொற்று பாதிப்பு, தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. மகாராஷ்டிரா மற்றும் கேரளாவை...

லைசென்ஸ்ச புதுப்பிக்கனுமா? இனி ஆர்டிஓ அலுவலகம் செல்ல வேண்டியதில்லை!

வட்டார போக்குவரத்து அலுவலகம் செல்லாமலேயே, 18 சேவைகளை பெற ஆன்லைன் மூலம் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மக்கள் எளிதில் சேவைகளை பெற அனைத்து துறைகளும் டிஜிட்டல் மயமாகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வட்டார போக்குவரத்து...

தீதி Vs மோடிஜீ: மேற்கு வங்கம் யாருக்கு?

மேற்கு வங்கத்தில் வரும் மார்ச் 27ம் தேதி முதல் 8 கட்டங்களாக 294 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மே மாதம் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு...

வாக்காளர்கள் இப்படி வந்தால்தான் வாக்களிக்க முடியும்: தேர்தல் ஆணையம் உத்தரவு!

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டு. அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மறுபுறம் அரசியல் கட்சிகள் தேர்தல் வேலைகளை தொடங்கிவிட்டன. தேர்தலில் வெற்றிப்பெற்று ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என அதிமுகவும், ஆட்சியை கைப்பற்ற...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here