அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக தமிழ் வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். அதேபோல் எதிர்கட்சியான ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடன் போட்டியிடுகிறார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறும் அதே தினத்தில்தான் துணை அதிபரும் தேர்வு செய்யப்படுவது வழக்கம். அதேபோல் அமெரிக்காவை பொறுத்தவரை துணை அதிபர் தேர்தலில் போட்டியிடுபவர்கள் அடுத்ததாக அதிபர் தேர்தலில் போட்டியிடுவார்கள். தற்போது எதிர்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் ஜோ பிடன், ஒபாமா ஆட்சியில் துணை அதிபராக இருந்தவர்.
இந்த நிலையில் துணை அதிபர் பதவிக்கு கலிபோர்னியா செனட் உறுப்பினர் கமலா ஹாரிஸ் போட்டியிடுவார் என ஜோ பிடன் அறிவித்தார்.
கமலா ஹாரிஸ், 55 வயதான இவர் தமிழகத்தை சேர்ந்தவர் இவரது தந்தை ஜமைக்காவை சேர்ந்தவர். இவருக்கு பல புகழ் உண்டு இவரை பெண் ஒபாமா என ஆதரவாளர்கள் அழைப்பார்கள், அதோடு அரசு தலைமை வழக்கறிஞராக இருந்த முதல் கருப்பின பெண் இவராவர்.
துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து இவருக்கு தமிழ் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிலைியல் இவர் பிரச்சாரத்தின்போது, தமிழ் வார்த்தையை பயன்படுத்திய தமிழ் சொல்லை உலக அரசியலில் பேசு பொருளாக மாற்றியதோடு அந்த சொல் இணையத்தில் வைரலாக ஆரம்பித்தது.
இதுகுறித்து பேசிய அவர் தனது தாய் ஷ்யாமளா தங்களை மிக தைரியமான பெண்ணாக வளர்த்துள்ளார். தானும் தன் சகோதரியும் கருப்பின பெண்கள் என்பதில் பெருமை கொள்கிறோம் என கூறினார். இந்திய பாரம்பரியத்தை நினைத்து பெருமை கொள்ளும்படி தங்களை தாய் ஷ்யாமளா வளர்த்துள்ளார். அதோடு தனது அன்கிள்கள், ஆண்டிகள், சித்திகள் தான் தனது குடும்பம் என குறிப்பிட்டார்.
இதில் சித்தி என்ற வார்த்தை தமிழில் பயன்படுத்தினார். இவர் பயன்படுத்திய சித்தி என்ற வார்த்தையே ஆங்கில செய்தித்தளங்களில் தலைப்பாக மாறி வருகிறது. சித்தி என்றால் என்ன என அமெரிக்கர்கள் பலரும் கூகுளை நாடியுள்ளனர் என்பதும் இங்கே கவனிக்கத்தக்க வேண்டிய ஒன்று.