Home செய்திகள் இந்தியா முழுமுதற் கடவுள் விநாயகனின் வேரைத் தேடி...! எதனால் இத்தனை ஆரவாரம்...!

முழுமுதற் கடவுள் விநாயகனின் வேரைத் தேடி…! எதனால் இத்தனை ஆரவாரம்…!

இந்துக்களால் மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடப்படும் பண்டிகைகளில் முக்கியமானது விநாயகர் சதுர்த்தி விழா. முழுமுதற் கடவுளும், ஈசனின் மகனுமான விநாயகர் அவதரித்த தினமான விநாயகர் சதுர்த்தி விழாவானது ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி  நாளன்று கொண்டாடப்படுகிறது.
அதன்படி, இந்த வருடம் ஆகஸ்ட் 22 ஞாயற்றுக்கிழமையன்று விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

விநாயகர் சதுர்த்தி விழாவின் வேர் என்ன?

சிவபெருமானின் பக்தனாக அறியப்பட்ட கஜமுகாசுரன் என்பவன் மனிதர்களா லோ, விலங்குகளாலோ, ஆயுதங்களாலோ, யாரும் கொல்ல முடியாதபடி வரம் பெற்று இருந்தான். அந்த மமதையில் தேவர்களை அவன் துன்புறுத்தியதால், அவனைப்பற்றி சிவபெருமானிடம் தேவர்கள் முறையிட்டனர்.
இதனால் ஆவணி மாத சதுர்த்தி அன்று கஜமுகாசுரனை அழிக்க யானை முகமும் மனித உடலும் (மனிதனும் அல்லாமல் விலங்கும் அல்லாமல்) கொண்ட விநாயகரை சிவபெருமான் படைத்தார்.

பின்னர் கஜமுகாசுரன் உடன் நடந்த கடும் போரின் முடிவில், தனது கொம்புகளில் (வழக்கமான ஆயுதம் இல்லாமல்) ஒன்றை ஒடித்து அவனை விநாயகர் சம்ஹாரம் செய்தார். இதன் காரணமாக அனைவரும் சுபிட்சம் பெற்றதால் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதச் சதுர்த்தி விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்பட்டுவருகிறது.
அன்றைய தினத்தில் விநாயகரை வழிபட்டால் தீராத வினைகள் தீரும். சகல சௌபாக்கியங்கள் கிட்டும் என்பது நம்பிக்கை.

இந்தியாவில் எப்படி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது?
மன்னர் சத்ரபதி சிவாஜியின் காலத்திலேயே விநாயகர் சதுர்த்தி விழா பிரபலமாகிவிட்டது. இருந்தாலும், இன்று நாம் பார்க்கும் விநாயகர் விழா கொண்டாட்டங்கள் மற்றும்  ஊர்வலங்களுக்கு பிள்ளையார் சுழி போட்டவர் இந்திய விடுதலை இயக்கத்தின் முதல் தலைவரான பாலகங்காதர திலகர் தான். 1893ஆம் ஆண்டு “சர்வஜன கனேஷ் உத்சவ்” என்ற பெயரில் இவர் ஆரம்பித்துவைத்த விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களே இன்றுவரை மக்கள் மிகப்பெரிய விழாவாக கொண்டாடிவருகின்றனர்.

இந்தியாவில் மும்பை, கோவா, தெலங்கானா, ஆந்திரா, உபியில் இந்த விழா மற்ற மாநிலங்களை காட்டிலும் சிறப்பாக கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

ஸ்ரீரெட்டிக்கு அடித்த ஜாக்பாட்: அந்த நடிகையின் வாழ்க்கை வரலாறு படத்துக்கு இவுங்கதான் சரி!

தெலுங்கு திரையுலகில் நடிக்க வாய்ப்புக்காக நடிகைகளை பலாத்காரம் செய்யும் பழக்கம் இருக்கிறது என்ற புகார்களோடு தமிழகத்துக்குள் நுழைந்த ஸ்ரீரெட்டி தமிழ் திரையுலகில் விஷால், ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தொடர்ந்து...

ஏன் 120/80 இருந்தால் நார்மல் ரத்த அழுத்தம்., இது ஒவ்வொருவருக்கும் வேறுபடுமா?

முன்பெல்லாம் 50 வயதுக்கு மேற்பட்ட சில நபர்களுக்கு மட்டுமே ரத்த அழுத்தம் இருப்பதாக கேள்விப்பட்டிருப்போம். தற்போது, 30 வயதுடையவர்கள் கூட பி.பி. இருப்பதாக சர்வ சாதாரணமாக கூறிவிட்டு செல்கின்றனர். இதனால், ரத்த அழுத்தம்...

சசிகலா விஷயத்தில் மௌனம்: தனி ரூட்டில் பயணிக்கும் ஓபிஎஸ்!

பெங்களூரு சிறையிலிருந்து விடுதலையான சசிகலா குறித்து இதுவரை எவ்வித கருத்தும் தெரிவிக்காமல், துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளரும் ஓ.பன்னீர்செல்வம் மௌனம் காத்து வருகிறார். சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த...

பொதுநலன் கருதி “தூது”- தேர்தல் நேரத்தில் இதெல்லாம் சந்திக்கனும்- உஷார் மக்களே!

தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவித்த நாளில் இருந்தே தேர்தல் நடத்தை விதிகள் அமல் படுத்தப்பட்டது. தங்களது பகுதிகளில் திடீரென சாலைகள் முளைக்கும். முளைக்கும் சாலைகள் பாதியோடு அறுபட்ட நிலையில் இருக்கலாம் காரணம்...

Related News

குலை நடுங்குகிறது: வெங்கட்பிரபுவின் “லைவ் டெலிகாஸ்ட்” எப்படி இருக்கு?

வெங்கட்பிரபு இயக்குனராக அறிமுகமாக நினைத்ததும் அவரது முதல் கதை லைவ் டெலிகாஸ்ட் கதைதானாம். இந்த சீரிஸ் ராகவா லாரன்ஸ் நடித்த காஞ்சனா-2-வின் தழுவலாக இருக்கிறது. லைவ் டெலிகாஸ்ட்டில் பேய்யை நேரடியாக மக்களுக்கு காட்ட...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here