அமெரிக்காவின் 44-வது அதிபராக இருந்தவர் பராக் ஒபாமா. அமெரிக்க வரலாற்றில் ஆப்பிரிக்க அமெரிக்க இனத்தை சேர்ந்த முதலாவது குடியரசுத் தலைவராக ஒபாமா திகழ்ந்தார்.
இந்நிலையில் ராமாயணம் மற்றும் மகாபாரதக் கதை கேட்டு தனது குழந்தை பருவம் அமைந்ததாகவும் அதன்காரணமாக இந்தியா தனது மனதில் எப்போதும் சிறப்பு இடத்தை பிடித்துள்ளதாகவும் அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஏ பிராமிஸ்ட் லேண்டு எனும் பேரில் அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா எழுதிய புத்தகத்தில், 2010 ஆம் ஆண்டு அதிபராகுவதற்கு முன்னர் ஒருபோதும் இந்தியா வந்ததில்லை. இந்தோனேஷியாவில் தனது குழந்தை பருவத்தில் ராமாயணம் மற்றும் மகாபாரதக் கதைகளை படித்து வளர்ந்தேன். அதற்குகாரணம் கிழக்கு மதங்களின் மீதான ஆர்வம் அல்லது பாகிஸ்தான் மற்றும் இந்திய கல்லூரி நண்பர்களோ காரணமாக இருந்திருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பருப்பு மற்றும் கீமாவை சமைக்க எனக்கு இந்த ஆர்வம் கற்றுக்கொடுத்தது. இந்தியா எனது கற்பனையில் ஒரு சிறப்பான இடத்தை பிடித்திருக்கிறது. மகாத்மா காந்தியால்தான் இந்தியா மீது தனக்கு கூடுதல் ஈர்ப்பு வந்தது. பிரிட்டிஸ் ஆட்சிக்கு எதிராக அகிம்சையாக போராடி மகாத்மா காந்த கையாண்ட விதம் அவர் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கலங்கரை விளக்கமாக இருந்திருந்தார் என ஒபாமா குறிப்பிட்டுள்ளார்