அமெரிக்காவில் வருகிற நவம்பர் 3 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து அமெரிக்காவில் பரப்புரை சூடுபிடித்து வருகிறது. குடியரசுக் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டிரம்ப்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பைடனும் போட்டியிடுகின்றனர்.
இரண்டு வேட்பாளர்களும் ஒவ்வொரு மாகாணமாக சென்று பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் வருகிற தேர்தலில் ஜோ பைடன் வெற்றிப் பெற்றால் அது சீனாவுக்கு கிடைத்த வெற்றியாக இருக்கும் என அதிபர் டிரம்ப் விமர்சனங்களை முன் வைத்தார்.
இதுகுறித்து பரப்புரையில் பேசிய டிரம்ப்., அமெரிக்கர்கள் நம் நாட்டை புதிய உயரங்களுக்கு உயர்த்துவதா அல்லது ஜோ பைடனிடம் ஆட்சியை ஒப்பிடைத்து பொருளாதாரத்தை மூழ்கடிப்பதா என நீங்களே தீர்மானியுங்கள். ஜோ பைடல் வெற்றிப் பெற்றால் அது சீனாவின் வெற்றியாகும், அமெரிக்காவை முதலிடத்தில் வைக்கும் ஜனாதிபதியை நீங்கள் தேர்வு செய்யுங்கள், நான் முதலிடத்தில் வைப்பேன். அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை சீனா உள்ளிட்ட பிற நாடுகளுக்கு தாரைவார்த்துக் கொடுத்தவர் ஜோ பைடன் என வரிசையாக குற்றச்சாட்டை முன்வைத்தார்.
மறுபுறம் ஜோ பைடன், துணை அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸை தேர்வு செய்திருக்கிறார். அதோடு இந்திய அமெரிக்கர்கள் சார்பில் நடத்தப்பட்ட நிதி திரட்டல் நிகழ்ச்சியல் பங்கேற்ற ஜோ பைடன், தான் தேர்தலில் வெற்றிப் பெற்று அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் ஹெச்-1பி விசாவில் இந்தியர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை தீர்க்கப்படும் எனவும் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்திய அமெரிக்கர்கள் ஆற்றிய பங்கு குறித்து போதிய அளவு யாரும் விவாதிப்பதில்லை என தெரிவித்துள்ளார். அதோடு தற்போதைய அதிபர் டிரம்ப் நிலைமையை மிக மோசமாக்கிவிட்டார் என தெரிவித்தார்.
இந்திய அமெரிக்கர்களின் வாக்குகள் சில மாகாணங்களில் கணிசமான எண்ணிக்கையில் இருக்கிறது. இதை கவருவதற்கு இரு கட்சிகளும் போட்டிப் போட்டுக் கொண்டு இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Attachments area