90-ஸ் கிட்ஸ்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போதும் தட்டி எழுப்பி இப்பிசம்மோ என்று கூறினால் தி ராக் என பதில் கூறுவார்கள். டபிள்யூ டபிள்யூ-இ., 90-ஸ் கிட்ஸ்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த நிகழ்ச்சிகளில் ஒன்று.
அன்டர்டேக்கருக்கு ஏழு உயிர், கேன் முகத்தில் ஆசிட் ஊத்திட்டாங்க, கேன்னுக்கும் லீட்டாவுக்கும் கல்யாணம் ஆச்சு, ரிக்ப்ளயர் மகன் ட்ரிபிள் ஹெச் என ஒவ்வொருவரும் பாரபட்சமின்றி கட்டுகதைகளை கிழப்புவார்கள். டபிள்யூ டபிள்யூ இ விளையாட்டில் பிரபலமடைந்தவர் டுவைன் ஜான்சன் எனும் ராக்.
டபிள்யூ டபிள்யூ இ விளையாட்டில் இருந்து ஓய்வுப் பெற்ற ராக்., ஸ்கார்பியன் கிங், தி மம்மி, ஜூமான்ஜி போன்ற ஹாலிவுடன் திரைப்படங்களில் நடித்து வந்தார். அதோடு ஃபாஸ்ட் அன்ட் பியூரியஸ் திரைப்படத்தில் களமிறங்கிய ராக், மறைந்த நடிகர் பவுல்வால்கர் இடத்தை நிரப்பி புகழ் பெற்றார்.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களுக்கு ஹாலிவுட் நடிகர் டுவைன் ஜான்சன் அதிகாரப்பூர்வமாக ஆதரவு அளித்துள்ளார். காணொலிக் காட்சி மூலம் ஜோ பிடென் மற்றும் கமலா ஹாரிஸ் உடன் உரையாடியதுடன் தனது ஆதரவை வெளிப்படையாக தெரிவித்தார். அந்த வீடியோ காட்சிகளை டுவைன் ஜான்சன் எனப்படும் ராக் தனது அதிகாரப்பூரவ் வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
டுவைன் ஜான்சன் இந்த பதிவு 372.3K லைக்களும், 175.5கே ரீடுவிட்களும் பெற்றுள்ளது. அமெரிக்க தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்து வரும் நிலையில், டுவைன் ஜான்சன் ஜனநாயகக் கட்சிக்கு தனது ஆதரவு தெரிவித்ததற்கு வரவேற்புகளும் எதிர்ப்புகளும் குவிந்து வருகிறது.