அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக்கட்சி இடையே கடும் போட்டி நிலவியது. தற்போதைய நிலவரப்படி ஜனநாயகக்கட்சியை சேர்ந்த ஜோ பைடன் அதிக வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. இருப்பினும் ஆளும் குடியரசுக் கட்சியை சேர்ந்த டொனால்ட் டிரம்ப் குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலேயே பின்தங்கி இருக்கிறார்.
Sarah McBride First Transgender Win’s First Election in US. Read More World News in Tamil
அமெரிக்க தேர்தலில் முதன்முறையாக திருநங்கை சாரா மெக் பிரைட் வெற்றி பெற்றுள்ளார். 31 வயதான இவர், ஜோபிடனின் ஜனநாயகக் கட்சியை சேர்ந்தவர். இவர் டெலாவேரில் போட்டிப் போட்டு வெற்றிப் பெற்றுள்ளார். வழக்கறிஞராக உள்ள திருநங்கை சாரா மெக் பிரைட் ஓரின சேர்க்கை விவகாரத்தில் கடுமையாக போராடி தனது ஆதரவை வெளிப்படுத்தியவர்.
இந்த வெற்றி குறித்து சாரா தெரிவிக்கையில், வாக்களித்த அனைவருக்கும் நன்றி, நாம் செய்து முடித்து விட்டோம் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டோம் என குறிப்பிட்டார்.
மறுபுறம் டொனால்ட் டிரம்ப், நாம் மாபெரும் வெற்றியை எதிர்நோக்கியிருக்கிறோம். ஆனால் அவர்கள் தேர்தலில் சதி செய்ய முயற்சிக்கின்றனர் என சர்ச்சைக்குரிய வகையில் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.