கொரோனா தொற்றால் சிலருக்கு காது கேளாமல் போகலாம் என இங்கிலாந்து நாட்டை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
மனித குலத்தை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் குறித்து, உலகம் முழுவதும் பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றன. இந்த ஆய்வுகளில் பல புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், கொரோனா தொற்றால் நுரையீரல், சிறுநீரகம், இதயம் உள்ளிட்ட உறுப்புகள் பாதிக்கப்படும் என கண்டுபிடித்துள்ளனர்.
இந்தநிலையில், கொரோனா தொற்று பாதித்த சிலருக்கு நிரந்தரமாக காது கேளாமல் போகலாம் என இங்கிலாந்து விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். லண்டன் பல்லைக்கழக கல்லூரி நடத்திய ஆய்வில், கொரோனா தொற்றால் காது கேட்கும் திறன் பாதிக்கப்படுவது தெரியவந்துள்ளது.
“லண்டனில் 45 வயதான ஆஸ்துமா நோயாளி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தீவிர சிகிச்சை பிரிவில் தொடர் சிகிச்சைக்கு பின்னர் அவர் குணமடைந்தார். ஆனால், குணமடைந்த பிறகு, அவருக்கு காது கேளாமல் போனது.
இது குறித்து ஆய்வு செய்த மருத்துவர்கள், கொரோனா தொற்று காரணமாகே அவருக்கு காது கேளாமல் போனது என உறுதி செய்தனர். இதேபோல், உலகம் முழுவதும் சில கொரோனா நோயாளிகள் செவி திறனை இழந்துள்ளனர்”, என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.