ஐரோப்பாவின் மிக பிரபல Der Spiegel என்ற செய்தி இதழ், ஆண்டின் தோல்வியாளர் என்ற பட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு வழங்கியுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். குடியரசு கட்சி வேட்பாளரான தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் தோல்வி அடைந்தார்.
ஆனால், தேர்தலில் முறைகேடு நடந்து இருப்பதாக கூறி, டிரம்ப் தனது தோல்வியை ஏற்க மறுத்து வந்தார். இதனைச் சட்டரீதியாக எதிர்கொள்ள இருப்பதாகவும் டிரம்ப் தொடர்ந்து தெரிவித்து வந்தார்.
இந்தநிலையில், ஐரோப்பாவின் மிக பிரபல Der Spiegel என்ற செய்தி இதழ், ஆண்டின் தோல்வியாளர் என்ற பட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு வழங்கியுள்ளது. இது தொடர்பாக, அந்த செய்தி இதழில் வெளியான கட்டுரையில்,”டிர்பம் பொது நன்மை குறித்து அக்கறை காட்டவில்லை.டிரம்பின் கீழ் எதுவும் சாதாரணமானது அல்ல.
தோல்வியை ஒப்புக்கொள்ள மறுக்கிறார். அதற்கு பதிலாக, அவர் தேர்தல் மோசடி பற்றி பேசுகிறார். ஆனால் அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. டிரம்பின் அதிபர் பதவி தொடங்கியவுடன் முடிவடைகிறது. கண்ணியம் இல்லாமல். “ என்று டிரம்ப்பை கடுமையாக சாடியுள்ளது.
இதனிடையே, அமெரிக்க அதிபர் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனும், கமலா ஹாரிஸும் இந்த ஆண்டின் சிறந்த நபராக டைம் இதழில் இடம்பெற்றுள்ளது, குறிப்பிடத்தக்கது.