Home விளையாட்டு கிரிக்கெட் டெல்லியிடம் மெர்சல் காட்டிய மும்பை இந்தியன்ஸ்!

டெல்லியிடம் மெர்சல் காட்டிய மும்பை இந்தியன்ஸ்!

ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தியது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 13ஆவது ஐபிஎல் தொடர் பல எதிர்பாராத திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், அபு தாபியில் நடைபெற்ற 27ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதியது.

இப்போட்டியில் டாஸ் போன்ற டெல்லி அணி முதல் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. காயம் காரணமாக ரிஷப் பண்ட் அணியில் இருந்து விலகியதால் அவருக்கு பதிலாக ரஹானே இடம்பிடித்தார். அதேபோல் ஹெட்மயருக்கு பதிலாக அலெக்ஸ் கேரி தேர்வு செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி ஷிகர் தவானின்‌ அரைசதத்தால் 20 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்களை எடுத்தது.

தவான் 52 பந்துகளில் ஆறு பவுண்டரி, ஒரு சிக்சர் என 69 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் க்ருனால் பாண்டியா இரண்டு விக்கெட்களும், போல்ட் ஒரு விக்கெட்டையும் எடுத்தார்.

இதைத்தொடர்ந்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் கேப்டன் ரோகித் ஷர்மா ஐந்து ரன்களில் அக்ஷர் படேல் பவுலிங்கில் வீழ்ந்தார். இருப்பினும் டி காக் – சூர்யகுமார் யாதவ் இருவரது அரைசதத்தால் மும்பை இந்தியன்ஸ் அணி 19.4 ஓவர்களில் ஐந்து விக்கெட்கள் இழப்புக்கு 166 ரன்களை எட்டி ஐந்து விக்கெட்கள்‌‌ வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அபாரமாக ஆடிய டி காக் 36 பந்துகளில் 53 ரன்களில் ஆட்டமிழந்தார். அதில் நான்கு பவுண்டரி, மூன்று சிக்சர் அடங்கும். அதேபோல் அபாரமாக ஆடிய சூர்யகுமார் யாதவ் 32 பந்துகளில் ஆறு பவுண்டரி, ஒரு சிக்சர் என 53 ரன்கள் எடுத்து அவுட்டாகினார். டெல்லி அணியில் ரபாடா இரண்டு விக்கெட்டுகளை எடுத்தார். அஸ்வின், அக்ஷர் படேல், ஸ்டாய்னிஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி ஆடிய ஏழு போட்டிகளில் ஐந்து வெற்றி, இரண்டு தோல்வி என 10 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. டெல்லி அணியும் ஆடிய ஏழு போட்டிகளில் ஐந்து வெற்றி, இரண்டு தோல்வி என 10 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

ஸ்ரீரெட்டிக்கு அடித்த ஜாக்பாட்: அந்த நடிகையின் வாழ்க்கை வரலாறு படத்துக்கு இவுங்கதான் சரி!

தெலுங்கு திரையுலகில் நடிக்க வாய்ப்புக்காக நடிகைகளை பலாத்காரம் செய்யும் பழக்கம் இருக்கிறது என்ற புகார்களோடு தமிழகத்துக்குள் நுழைந்த ஸ்ரீரெட்டி தமிழ் திரையுலகில் விஷால், ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தொடர்ந்து...

ஏன் 120/80 இருந்தால் நார்மல் ரத்த அழுத்தம்., இது ஒவ்வொருவருக்கும் வேறுபடுமா?

முன்பெல்லாம் 50 வயதுக்கு மேற்பட்ட சில நபர்களுக்கு மட்டுமே ரத்த அழுத்தம் இருப்பதாக கேள்விப்பட்டிருப்போம். தற்போது, 30 வயதுடையவர்கள் கூட பி.பி. இருப்பதாக சர்வ சாதாரணமாக கூறிவிட்டு செல்கின்றனர். இதனால், ரத்த அழுத்தம்...

சசிகலா விஷயத்தில் மௌனம்: தனி ரூட்டில் பயணிக்கும் ஓபிஎஸ்!

பெங்களூரு சிறையிலிருந்து விடுதலையான சசிகலா குறித்து இதுவரை எவ்வித கருத்தும் தெரிவிக்காமல், துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளரும் ஓ.பன்னீர்செல்வம் மௌனம் காத்து வருகிறார். சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த...

பொதுநலன் கருதி “தூது”- தேர்தல் நேரத்தில் இதெல்லாம் சந்திக்கனும்- உஷார் மக்களே!

தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவித்த நாளில் இருந்தே தேர்தல் நடத்தை விதிகள் அமல் படுத்தப்பட்டது. தங்களது பகுதிகளில் திடீரென சாலைகள் முளைக்கும். முளைக்கும் சாலைகள் பாதியோடு அறுபட்ட நிலையில் இருக்கலாம் காரணம்...

Related News

குலை நடுங்குகிறது: வெங்கட்பிரபுவின் “லைவ் டெலிகாஸ்ட்” எப்படி இருக்கு?

வெங்கட்பிரபு இயக்குனராக அறிமுகமாக நினைத்ததும் அவரது முதல் கதை லைவ் டெலிகாஸ்ட் கதைதானாம். இந்த சீரிஸ் ராகவா லாரன்ஸ் நடித்த காஞ்சனா-2-வின் தழுவலாக இருக்கிறது. லைவ் டெலிகாஸ்ட்டில் பேய்யை நேரடியாக மக்களுக்கு காட்ட...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here