துபாயில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 19 ஆவது லீக் போட்டியில் டெல்லி அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூருவை வீழ்த்தி முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது.
நடப்பு ஐபிஎல் சீசனில் தலா ஆறு புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்த டெல்லி கேப்பிட்டல்ஸூம், மூன்றாவது இடத்தில் இருந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. துபாயில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு சேவிங் செய்ய முடிவு செய்தது.
இதைத்தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணிக்கு பிரித்வி ஷாவின் அதிரடியான தொடக்கத்தை தந்தார். 23 பந்துகளில் ஐந்து பவுண்டரி, இரண்டு சிக்சர் என 42 ரன்கள் எடுத்து அவுட்டாகினார். அவரைத் தொடர்ந்து ஷிகர் தவான் 32 ரன்களுடனும், ஸ்ரேயாஸ் ஐயர் 11 ரன்களுடனும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் டெல்லி 11.3 ஓவர்களில் 90 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்தது.
இந்த சூழலில் ரிஷப் பண்ட் உடன் ஜோடி சேர்ந்த மார்க்க ஸ்டாய்னிஸ் அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இந்த ஜோடி 89 ரன்களை சேர்த்த நிலையில் பண்ட் 37 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இருப்பினும் கடைசி ஓவரிலும் அதிரடி காட்டி ஸ்டாய்னிஸ் அரைசதம் விளாசியதால் டெல்லி 20 ஓவர்களில் 196 ரன்களை குவித்தது. ஸ்டாய்னிஸ் 26 பந்துகளில் ஆறு பவுண்டரி, இரண்டு சிக்சர் என 53 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். பெங்களூரு அணி தரப்பில் முகமது சிராஜ் இரண்டு விக்கெட்டும், உதானா, மொயின் அலி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
இதைத்தொடர்ந்து 197 எனும் இமாலய இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணியில் கேப்டன் கோலியை தவிர மற்ற வீரர்கள் வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினர். ஒருகட்டத்தில் தனிஒருவராக போராடிய கோலியும் 43 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் பெங்களூரு அணி 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட்களை இழந்து 137 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதனால் இப்போட்டியில் டெல்லி அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் எட்டு புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. டெல்லி அணியில் அபாரமாக பந்து வீசிய ரபாடா நான்கு விக்கெட்டுகளும், அன்ரிச் நார்க்யா, அக்ஷர் படேல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுளும் கைப்பற்றினர். இப்போட்டியில் டாஸ் தவிர வேறு எதுவும் கோலி அணிக்கு சாதமாக அமையவில்லை.
அணியின் ஸ்கோர் 6.4 ஓவர்களில் 68 ரன்கள் இருந்து போது, பிரித்வி ஷா 43