Home விளையாட்டு கிரிக்கெட் வெற்றிகரமான தோல்வியடைந்த ஆர்சிபி!

வெற்றிகரமான தோல்வியடைந்த ஆர்சிபி!

டெல்லி கேபிட்டல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் டெல்லி அணி வெற்றிபெற்றதையடுத்து இரு அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு நுழைந்துள்ளது.

ஐபிஎல் தொடரின் குரூப் சுற்றின் கடைசிக்கு முந்தைய போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஆர்சிபியை எதிர்கொண்டது. பிளே ஆஃப்க்கு மும்பை இந்தியன்ஸ் அணி மட்டுமே முன்னேறிய நிலையில் கொல்கத்தா அணியும் 14 புள்ளிகள் எடுத்திருந்தது.

இதனால் இப்போட்டியில் வெல்லும் அணி இரண்டாவது அணியாக முன்னேறும். தோல்வி அடையும் அணியின் நேட் ரன்ரேட் கொல்கத்தாவை விட அதிகமாக இருக்கும் பட்சத்தில் அவர்களும் பிளே ஆஃப்க்கு உள்ளே போகும். இல்லையெனில் கொல்கத்தா அணி பிளே ஆஃப் சுற்றுக்கு நுழையும் அதேசமயம் நாளைய போட்டியில் ஹைதராபாத் அணி மும்பையிடம் வென்றால் அவர்களும் முன்னேறுவர்.

இப்படியான ஒரு இடியாப்ப சிக்கலில் பிளே ஆஃப் உள்ளே நிலையில் டாஸ் வென்ற டெல்லி அணி சேஸிங்கை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணியில் அணியில் தேவ்தத் படிக்கல் 50 ரன்களிலும், டி வில்லியர்ஸ் 35 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் ஆர்சிபி அணி 20 ஓவர்களில் ஏழு விக்கெட்களை இழந்து 152 ரன்களை மட்டுமே எடுத்தது. டெல்லி தரப்பில் அன்ரிச் நார்க்யா மூன்று விக்கெட்டுகளும், ரபாடா இரண்டு, அஸ்வின் ஒரு விக்கெட்டையும் எடுத்தனர்.

தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணியில் தொடக்க வீரர் பிரித்வி ஷா ஒன்பது ரன்களில் ஆட்டமிந்தாலும் தவான் – ரஹானே ஜோடி சிறப்பாக ஆடி ஆட்டத்தை டெல்லி கட்டுக்குள் வைத்தது. பொறுப்பாக ஆடிய தவான் அரைசதம் அடித்த கையோடு பெவிலியன் திரும்பினார். இதனால் 81 ரன்கள் பார்ட்னர்ஷிப் முடிவுக்கு வந்ததது. பின் ஸ்ரேயாஸ் ஐயர் ஏழு ரன்களில் ஆட்டமிழக்க அணியின் வெற்றிக்கு 17 பந்துகளில் 17 ரன்கள் தேவைபட்ட போது சிறப்பாக ஆடிய ரஹானேவும் 60 ரன்களில் ஆட்டமிழந்தார்.

46 பந்துகளை எதிர்கொண்ட அவர் ஐந்து பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார். இறுதியில் டெல்லி அணி 19 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 154 ரன்களை எட்டியது. இதனால் டெல்லி கேபிட்டல்ஸ் அணி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இரண்டாவது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

அதேசமயம் பெங்களூரு அணிக்கு இது வெற்றிகரமாக தோல்வியாகும். 19ஆவது ஓவரில் தோல்வி அடைந்ததால் நேட் ரன்ரேட் அடிப்படையில் மூன்றாவது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது. தற்போது மும்பை – ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ‌ஹைதராபாத் அணி தோற்கும் பட்சத்தில் கொல்கத்தா பிளே ஆஃப்க்கு நுழையும். இல்லையெனில் ஹைதராபாத் அணி தங்களது பாசிட்டிவ் பேட் ரன்ரேட்டால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

சர்கார் வியூகம் அமைக்கும் கமல்ஹாசன்: வேறலெவலில் இருக்கப்போகும் தமிழக சட்டப்பேரவை தேர்தல்!

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்படத் தொடங்கியுள்ளன. ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் ஐபேக் பிரசாந்த் கிஷோர் ஆலோசனையில் திமுக செயல்பட்டு வருகிறது. ஆட்சியை தக்கவைக்கும் நோக்கில்...

அன்றே தொடங்கிய பனிப்போர்: ஊசலாடும் புதுச்சேரி காங்கிரஸ் அரசு!

புதுச்சேரியில் அடுத்தடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து வருவதால், முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசுக்கு பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணி தலைமையிலான அட்சி கடந்த 2016ம் ஆண்டில் இருந்து நடைபெற்று...

இவரை CSK ஏலம் எடுத்ததும் அரங்கமே கைதட்டல் குவிந்தது: அட அர்ஜுன் டெண்டுல்கரும் லிஸ்ட்ல இருக்காரு!

ஐபிஎல் 2021-க்கான ஏலம் விறுவிறுப்பாக சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் டெஸ்ட் போட்டியில் ஆதிக்கம் செலுத்தும் புஜாரா ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்கு ஆர்வம் காட்டினார். ஆனால் அவரை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை....

சிங்க பெண்ணே எழுந்து வா மொமெண்ட்: சவுதியில் பெண்கள் ராணுவத்தில் சேர அனுமதி!

சவுதி அரேபியாவில் பெண்கள் ராணுவத்தில் சேர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், அந்நாட்டில் தொடர்ச்சியாக பல அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். முகமது பின் சல்மானின் முயற்சியால்,...

Related News

நடுக்கடலில் குதித்த ராகுல்காந்தி: அதிர்ந்து போன பாதுகாப்பு அதிகாரிகள்!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வயநாடு தொகுதி மக்களவை உறுப்பினராவர். இவர் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக கேரளா சென்றிருந்தார். கேரளா சென்ற ராகுல்காந்தி அங்குள்ள மீனவர்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். ராகுல்காந்தி மீனவர்களுடன்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here