Home விளையாட்டு கிரிக்கெட் நாலுக்கு நாலு. வெற்றி; பிளே ஆஃப் ரேஸில் கொடுக்கும் பஞ்சாப்

நாலுக்கு நாலு. வெற்றி; பிளே ஆஃப் ரேஸில் கொடுக்கும் பஞ்சாப்

126 ரன்கள் அடித்திருந்தாலும் அதை சிறப்பாக ஃடிபெண்ட் செய்து ஹைதராபாத் அணியை வீழ்த்தி தொடர் நான்காவது வெற்றியை பதிவு செய்துள்ளது கிங்ஸ் லெவன் பஞ்சாப்!

நடப்பு ஐபிஎல் சீசனில் டெல்லி, மும்பை, பெங்களூரு அணி கிட்டத்தட்ட பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது உறுதியாகிவிட்டது. மீதமுள்ள கடைசி இடத்துக்கு கொல்கத்தா, பஞ்சாப் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதில் கொல்கத்தா டெல்லியை வீழ்த்தி 12 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது. இதனால் துபாயில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் வெற்றி பெறும் அணி பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ளும்.

ஏனெனில் இரு அணிகளும் தலா 10 போட்டிகளில் எட்டு புள்ளிகளை மட்டுமே எடுத்திருந்தது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பஞ்சாப் அணியை பேட்டிங் செய்ய பணித்தது. இதைத்தொடர்ந்து பஞ்சாப் அணியில் மயங்க் அகர்வால், ஜிம்மி நீஷம் ஆகியோருக்கு பதிலாக கிறிஸ் ஜோர்டான், மன்தீப் சிங் இடம்பிடித்தனர்.

இதைத்தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகள் இழப்பிற்கு 126 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பூரன் 32 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹைதராபாத் அணி தரப்பில் சந்தீப் ஷர்மா, ஹோல்டர், ரஷீத் கான் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பின் 127 என்னும் எளிய இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணி 6.1 ஓவர்களில் 56 ரன்களை எடுத்தது வலுவான நிலையில் இருந்தது. வார்னர் பேர்ஸ்டோ இருவரும் செட் பேட்ஸ்மேனாக இருந்தனர். இந்த சூழலில், வார்னர் 35 ரன்களுடன் பிஷ்னாய் பந்துவீச்சில் காலியாக, அடுத்து முருகன் அஸ்வின் ஓவரில் ‌பேர்ஸ்டோவும் 19 ரன்களுக்கு வெளியேறினார். ஆட்டத்தின் திருப்புமுனையாக இந்த விக்கெட் அமைந்தது. அதன் பின் நான்காவது வரிசையில் இறங்கிய அபூல் சமாத் ‌ஏழு ரன்களில் நடையைக் கட்ட, மனீஷ் பாண்டே – விஜய் சங்கர் ஜோடி அணியை கரைசேர்க்கும் என எதிர்பார்க்கப்பட்டது.‌

இந்த ஜோடி 33 ரன்கள் சேர்த்த நிலையில் 29 பந்துகளில் 15 ரன்கள் எடுத்த மனீஷ் பாண்டே அவுட் ஆனார்.‌ மறுபக்கம் பொறுப்பாக ஆடி வந்த விஜய் சங்கர் 14 பந்துகளில் 17‌‌ ரன்கள் அடிக்க வேண்டிய நிலையில் விஜய் சங்கர் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒட்டுமொத்த போட்டியும் பஞ்சாப் அணியின் பவுலர்கள் கையில் செல்ல ஹைதராபாத் அணி 19.5 ஓவர்களில் 114 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

பஞ்சாப் அணி தரப்பில் ஜார்டான், ஹர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை எடுத்தனர்.கிட்டத்தட்ட கடைசி 13 பந்துகளில் ஆறு விக்கெட்டுகள் இழந்து மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் பஞ்சாப் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் தொடர் நான்காவது வெற்றியை பதிவு செய்துள்ளது. இதனால் பஞ்சாப் அணி 10 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

குலை நடுங்குகிறது: வெங்கட்பிரபுவின் “லைவ் டெலிகாஸ்ட்” எப்படி இருக்கு?

வெங்கட்பிரபு இயக்குனராக அறிமுகமாக நினைத்ததும் அவரது முதல் கதை லைவ் டெலிகாஸ்ட் கதைதானாம். இந்த சீரிஸ் ராகவா லாரன்ஸ் நடித்த காஞ்சனா-2-வின் தழுவலாக இருக்கிறது. லைவ் டெலிகாஸ்ட்டில் பேய்யை நேரடியாக மக்களுக்கு காட்ட...

கொரோனா தடுப்பூசி போடும் போதும் ஒரு அரசியல்: மோடி உடனிருந்த நாலு பேர்?

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள, கொரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், இந்தியாவில், சீரம்...

சர்கார் வியூகம் அமைக்கும் கமல்ஹாசன்: வேறலெவலில் இருக்கப்போகும் தமிழக சட்டப்பேரவை தேர்தல்!

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்படத் தொடங்கியுள்ளன. ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் ஐபேக் பிரசாந்த் கிஷோர் ஆலோசனையில் திமுக செயல்பட்டு வருகிறது. ஆட்சியை தக்கவைக்கும் நோக்கில்...

அன்றே தொடங்கிய பனிப்போர்: ஊசலாடும் புதுச்சேரி காங்கிரஸ் அரசு!

புதுச்சேரியில் அடுத்தடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து வருவதால், முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசுக்கு பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணி தலைமையிலான அட்சி கடந்த 2016ம் ஆண்டில் இருந்து நடைபெற்று...

Related News

இவரை CSK ஏலம் எடுத்ததும் அரங்கமே கைதட்டல் குவிந்தது: அட அர்ஜுன் டெண்டுல்கரும் லிஸ்ட்ல இருக்காரு!

ஐபிஎல் 2021-க்கான ஏலம் விறுவிறுப்பாக சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் டெஸ்ட் போட்டியில் ஆதிக்கம் செலுத்தும் புஜாரா ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்கு ஆர்வம் காட்டினார். ஆனால் அவரை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை....

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here