Home விளையாட்டு கிரிக்கெட் லாஸ்ட் பால் சிக்சர்; ஃபினிஷர் ஜடு! சிஎஸ்கேவுக்கு பெரிய விசில் அடிங்க!

லாஸ்ட் பால் சிக்சர்; ஃபினிஷர் ஜடு! சிஎஸ்கேவுக்கு பெரிய விசில் அடிங்க!

கடைசி இரண்டு பந்துகளில் ஜடேஜா அடுத்தடுத்து இரண்டு சிக்சர்களை அடித்ததால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது.

சென்னை – கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று துபாயில் நடைபெற்றது. இதில் சென்னை கொல்கத்தாவை வீழ்த்தினால் மும்பை இந்தியன்ஸ் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். அதுமட்டுமில்லாமல் ஹைதராபாத், ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய அணிகள் பிளே ஆஃப் செல்லவும் வாய்ப்பு இருக்கும். ஆனால் கொல்கத்தாவுக்கு பிளே ஆஃப் கனவு சிக்கலாகிவிடும்.

இப்படியான சூழலில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். அணியில் மூன்று மாற்றங்கள். வாட்சன், கரன் ஷர்மா, லுங்கி எங்கிடி மீண்டும் அணியில் திரும்பினர். கொல்கத்தா அணியில் ருங்கு சிங் இடம்பிடித்தார்.

முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி தொடக்க வீரர் நிதிஷ் ரானாவின் அதிரடியால் 20 ஓவர்களில் ஐந்து விக்கெட்கள் இழப்புக்கு 172 ரன்களை குவித்தது. ரானா 61 பந்துகளில் 87 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அதில் 10 பவுண்டரி நான்கு சிக்சர் அடங்கும். சென்னை அணியில் எங்கிடி இரண்டு விக்கெட்டுகளும், சான்ட்னர், சாம் கரன், ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் எடுத்தனர்.

இதைத்தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணியில் கெயிக்வாட் வாட்சன் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 50 ரன்கள்‌ சேர்த்தது. அப்போது வாட்சன் 14 ரன்களில் வருண் சக்கரவர்த்தி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின் ராயுடுவுடன் ஜோடி சேர்ந்த கெயிக்வாட் அற்புதமாக ஆடி தொடர்ந்து தனது இரண்டாவது அரை சதத்தை அடித்தார். மறுமுனையில் ஐந்து பவுண்டரி ஒரு சிக்சர் என 20 பந்துகளில் அதிரடியாக 39 ரன்கள் அடித்த ராயுடு கம்மின்ஸ் பவுலிங்கில் வீழ்ந்தார். பின் நான்காவது வரிசையில் இறங்கிய தோனி ஒரு ரன்னில் வருண் சக்கரவர்த்தி பந்துவீச்சில் க்ளின் போல்ட்டானார்.

தோனி அவுட்டானாலும்‌ ஜடேஜாவுடன் இணைந்து சிறப்பாக ஆடிய கெயிக்வாட் 18ஆவது ஓவரில் 72 ரன்களில் ஆட்டமிழந்தார். 53 பந்துகள் மட்டுமே எதிர்கொண்ட அவர் ஆறு பவுண்டரி, இரண்டு சிக்சர்களை விளாசினார். சென்னை அணிக்கு ஒன்பது பந்துகளில் 23 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது ஃபெர்குசன் வீசிய ஒரு நோபால்தான் ஒட்டுமொத்த ஆடட்மொத்த ஆட்டத்தையும் மாற்றியது. அந்த நோபாலில் இரண்டு ரன்களும் அடுத்து ஃப்ரிஹிட்டில் சிக்சரும் கடைசி பந்தில் பவுண்டரியும் அடித்து ஃபெர்குசன் ஓவரை கிழித்தார் ஜடேஜா.

இதனால் கடைசி ஓவரில் 10 ரன்கள் மட்டுமே தேவை. அதை டிஃபெண்ட் செய்ய கம்லேஷ் நாகர்கோட்டியிடம் பொறுப்பு வழங்கப்பட்டது. முதல் மூன்று பந்துகளில் மூன்று ரன்களை மட்டுமே கொடுத்தார். பின் ஜடேஜா நான்காவது பந்தை வீணடிக்க கடைசி இரண்டு பந்தில் ஏழு ரன்கள் எடுக்க வேண்டும். இந்த பதற்றமான சூழலில் ஜடேஜா பேக் டூ பேக் இரண்டு சிக்சர்களை அடித்து மேட்சை ஃபினிஷ் செய்தார். இதனால் சென்னை அணி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது.

ஜடேஜா 11 பந்துகளில் இரண்டு பவுண்டரி, மூன்று சிக்சர் என 31 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். கொல்கத்தா அணி தரப்பில் வருண் சக்கரவர்த்தி, கம்மின்ஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர். சென்னை அணியின் இந்த வெற்றியால் மும்பை இந்தியன்ஸ் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அதேசமயம் பஞ்சாப், ராஜஸ்தான், ஹைதராபாத் ஆகிய அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பும் பிரகாசமாகியுள்ளது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

‘ஈகோ’ என்று கமல் கூறியது இதுதானா? ரஜினியுடன் கூட்டணி சாத்தியமா?

ஈகோ பார்க்காமல் ரஜினியின் சேர்ந்து பணியாற்றுவேன் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்துக் கட்சிகளும் பரப்புரையில் ஈடுபடத் தொடங்கி விட்டன. அதன்படி,...

குடியரசு தின விழா: போரிஸ் ஜான்சன் சிறப்பு விருந்தினராக பங்கேற்பு!

பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். நாட்டின் 72வது குடியரசு தின விழா, வரும் ஜனவரி மாதம்...

மக்கள் சேவை கட்சி., ஆட்டோ சின்னம்: ரஜினி கட்சியின் பெயர், சின்னம்?

தேர்தல் ஆணையத்தில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட பழைய கட்சியை, நடிகர் ரஜினிகாந்த் பயன்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. “ஜனவரியில் கட்சித் துவக்கம். டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு” என நடிகர் ரஜினிகாந்த் தனது...

ஜோ பைடன் வெற்றி– உறுதி செய்த பிரதிநிதிகள் குழு!

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றதை பிரதிநிதிகள் குழு உறுதிப்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கடந்த நவம்பர் 3ம் தேதி அதிபர் தேர்தல் நடந்து முடிந்தது. தேர்தலில் ஜனநாயக கட்சி...

Related News

மீண்டும் ஊரடங்கு அறிவித்த நாடு: இந்த முறை ரொம்ப கடுமையாக இருக்கும்!

சீனாவின் வுகான் மாகாணத்தில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளையே ஒரு உலுக்கு உலுக்கியது என்றே கூறலாம். கொரோனா வைரஸ் எப்போது முடிவுக்கும் வரும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்ப்பு இருக்கிறது....

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here