Home விளையாட்டு கிரிக்கெட் ஓப்பனிங்லா நல்லா இருக்கு ஆனா ஃபினிஷிங் சரியில்லையே

ஓப்பனிங்லா நல்லா இருக்கு ஆனா ஃபினிஷிங் சரியில்லையே

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்துள்ளது.

துபாயில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 21 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட் செய்ய முடிவெடுத்தது. கிட்டத்தட்ட 69 போட்டிகளுக்கு பிறகு அந்த அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வது இது முதல் முறையாகும்.

இதைத்தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த கேகேஆர்‌ அணி சிறப்பாக ஆடியது. ஒருகட்டத்தில் 11 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 98 ரன்களை எடுத்திருந்த கொல்கத்தா அணி 167 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக ராகுல் திரிபாதி 51 பந்துகளில் எட்டு பவுண்டரி, மூன்று சிக்சர் என 81 ரன்களில் ஆட்டமிழந்தார். சென்னை அணியில் பிராவோ மூன்று, கரன் ஷர்மா, ஷர்துல் தாகூர், சாம் கரன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதையடுத்து களமிறங்கிய சென்னை அணியில் தொடக்க வீரர் டூப்ளசிஸ் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். இதைத்தொடர்ந்து ராயுடுவுடன் ஜோடி சேர்ந்த வாட்சன் பொறுப்பாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இந்த ஜோடி 69 ரன்களை சேர்த்த நிலையில் ராயுடு 30 ரன்களில் கம்லேஷ் நாகர்கோட்டியிடம் வீழ்ந்தார். இதனால் சிஎஸ்கே 12.1 ஓவர்களில் 99 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. இந்த தருணத்தில் தல தோனி நான்காவது வரிசையில் களமிறங்கினார். அணியின் வெற்றிக்கு 47 பந்துகளில் 69 ரன்கள் தான் தேவை. வாட்சன்- தோனி களத்தில் இருப்பதால் சென்னை வெற்றிபெறும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால் நடந்தது அனைத்தும் தலைகீழ்.

சிறப்பாக ஆடி அரைசதம் விளாசிய வாட்சன் சுனில் நரைன் பந்துவீச்சில் அவுட்டாகினார். அவரைத் தொடர்ந்து தோனி, சாம் கரன் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க சென்னை அணியின் வெற்றிக்கு ஓவரில் 26 ரன்கள் தேவைப்பட்டன. ஆனால் சிஎஸ்கே அணி 16 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதுவும் கடைசி மூன்று பந்துகளில் ஜடேஜா அடித்த இரண்டு பவுண்டரி, ஒரு சிக்சரால் சிஎஸ்கே 20 ஓவர்களில் 157 ரன்கள் மட்டுமே எடுத்து வெற்றி பெற வேண்டிய இப்போட்டியில் 10 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

கொல்கத்தா அணி தரப்பில் ரசல், சிவம் மாவி, கம்லேஷ் நாகர்கோட்டி, வருண் சக்கரவர்த்தி, சுனில் நரைன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.‌ இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி 6 புள்ளிகள் எடுத்து புள்ளிகள் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

அவுங்க மேட்டரில்ல., ஒரே எதிரி இவுங்கதான்., பொறுத்திருந்த பாருங்கள்: டிடிவி அதிரடி

அமமுக ஆட்டம் ஆரம்பம் என்றே கூறலாம். தமிழகம் கர்நாடகா எல்லையில் தொடங்கி சென்னைவரை சசிகலா வந்துகொண்டிருந்த வழியெல்லாம் அவருக்கு கோலகல வரவேற்பு அளிக்கப்பட்டது. அமைதியாக செய்தி பேட்டியில் மட்டும் பார்த்து வந்த அமமுக...

சென்னையில் 10ல் 4 பேருக்கு கொரோனா: ஆய்வில் தகவல்!

சென்னையில் 10ல் 4 பேருக்கு கடந்த காலத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக, ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் கோரத்தாண்டவம் ஆடி வந்த கொரோனா தொற்று பாதிப்பு, தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. மகாராஷ்டிரா மற்றும் கேரளாவை...

லைசென்ஸ்ச புதுப்பிக்கனுமா? இனி ஆர்டிஓ அலுவலகம் செல்ல வேண்டியதில்லை!

வட்டார போக்குவரத்து அலுவலகம் செல்லாமலேயே, 18 சேவைகளை பெற ஆன்லைன் மூலம் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மக்கள் எளிதில் சேவைகளை பெற அனைத்து துறைகளும் டிஜிட்டல் மயமாகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வட்டார போக்குவரத்து...

தீதி Vs மோடிஜீ: மேற்கு வங்கம் யாருக்கு?

மேற்கு வங்கத்தில் வரும் மார்ச் 27ம் தேதி முதல் 8 கட்டங்களாக 294 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மே மாதம் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு...

Related News

வாக்காளர்கள் இப்படி வந்தால்தான் வாக்களிக்க முடியும்: தேர்தல் ஆணையம் உத்தரவு!

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டு. அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மறுபுறம் அரசியல் கட்சிகள் தேர்தல் வேலைகளை தொடங்கிவிட்டன. தேர்தலில் வெற்றிப்பெற்று ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என அதிமுகவும், ஆட்சியை கைப்பற்ற...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here