Home விளையாட்டு கிரிக்கெட் ஆறாவது ஃபைனில் எண்ட்ரி தந்த ஐபிஎல் டான் மும்பை இந்தியன்ஸ்

ஆறாவது ஃபைனில் எண்ட்ரி தந்த ஐபிஎல் டான் மும்பை இந்தியன்ஸ்

ஐபிஎல் தொடரின் முதல் குவாலிஃபையர் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸை தோற்கடித்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முதல் குவாலிஃபையர் போட்டியில் நடப்பு சாம்பியன்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் டெல்லி கேபிட்டல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது. துபாயில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்றவுடன் டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் சேஸிங்கை விரும்பினார்.

முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியில் கேப்டன் ரோகித் ஷர்மா டக் அவுட் ஆனாலும் டி காக் – சூர்யகுமார் யாதவ் இணை பொறுப்பாக ஆடியது. பின் டி காக்கும் 40 ரன்களில் அஸ்வினிடம் வீழ்ந்தார். ஒருபக்கம் சிறப்பாக ஆடிய சூர்யகுமார் யாதவும் அரைசதம் அடித்த கையோடு பெவிலியன் திரும்பினார். பின் பொல்லார்ட் டக் அவுட்டாக, குருனல் பாண்டியா 13 ரன்களில் வெளியேறினார்.

பின் கடைசி ஐந்து ஓவர்களில் இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா சிக்சர் பவுண்டரி என வெளுத்து கட்டினர். இதனால் 15 ஓவர்களில் ‌122 ரன்களில் இருந்த மும்பை 200 ரன்களை குவித்தது. இஷான் கிஷன் 30 பந்துகளில் நான்கு பவுண்டரி மூன்று சிக்சர் என அரைசதம் அடித்தார். ஹர்திக் பாண்டியா 14 பந்துகளில் ஐந்து சிக்சர் என 37 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். டெல்லி அணியில் அஸ்வின் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். நார்க்யா,ஸ்டாய்னிஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

பின் 201 ரன்கள் என்னும் கடின இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க வீரர் பிரித்வி ஷாவை முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி வந்த வழியில் அனுப்பினார் போல்ட். மூன்றாவது வரிசையில் வந்த ரஹானேவையும் டக் அவுட் ஆக்கினார் போல்ட். இதனால் முதல் ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து ஸ்கோர் போர்டில் ரன் அடிக்காமல் இருந்தது. இரண்டாவது ஓவரில் வந்த பும்ரா தன் துல்லியமான யார்க்கரால் ஷிகர் தவானையும் தன் பங்கிற்கு டக் அவுட் ஆக்கினார். இதனால் டெல்லி ரன் ஏதும் அடிக்காமல் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

ஐபிஎல் வரலாற்றில் பூஜ்ஜியத்தில் மூன்று விக்கெட்டுகளை இழந்தது இதுவே முதல் முறையாகும். கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 12 ரன்களில் பும்ராவிடம் சிக்கினார். இம்முறையாவது சிறப்பாக ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட் மூன்று ரன்களில் நடையைக் கட்ட டெல்லி அணியின் ஸ்கோர் 41-5. இந்த சூழலில் ஸ்டாய்னிஸ் – அக்ஷர் படேல் ஜோடி சிறப்பாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. ஒருபக்கம் அபாரமாக ஆடி அரைசதம் விளாசிய ஸ்டாய்னிஸை 65 ரன்களில் வெளியேற்றினார் பும்ரா.

பின் அக்ஷர் படேல் 42 பந்துகளில் கடைசி ஓவரில் ஆட்டமிழக்க டெல்லி அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட்களை இழந்து 143 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியிடம் அபார வெற்றி பெற்று ஆறாவது முறையாக ஃபைனிலில் எண்ட்ரி தந்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி தரப்பில் பும்ரா நான்கு, போல்ட் இரண்டு, குருனல் பாண்டியா, பொல்லார்ட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

அபுதாபியில் இன்று ஹைதராபாத் – பெங்களூரு அணிகளுக்கு இடையிலான எலிமினேட்டர் போட்டியில் வெற்றிபெறும் அணி டெல்லியுடன் இரண்டாவது குவாலிஃபையர் போட்டியில் மோதும். அதில் வெல்லும் அணி வரும் 10ம் தேதி துபாயில் நடைபெறவுள்ள ஃபைனலில் மும்பை இந்தியன்ஸை எதிர்கொள்ளும்.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

அவுங்க மேட்டரில்ல., ஒரே எதிரி இவுங்கதான்., பொறுத்திருந்த பாருங்கள்: டிடிவி அதிரடி

அமமுக ஆட்டம் ஆரம்பம் என்றே கூறலாம். தமிழகம் கர்நாடகா எல்லையில் தொடங்கி சென்னைவரை சசிகலா வந்துகொண்டிருந்த வழியெல்லாம் அவருக்கு கோலகல வரவேற்பு அளிக்கப்பட்டது. அமைதியாக செய்தி பேட்டியில் மட்டும் பார்த்து வந்த அமமுக...

சென்னையில் 10ல் 4 பேருக்கு கொரோனா: ஆய்வில் தகவல்!

சென்னையில் 10ல் 4 பேருக்கு கடந்த காலத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக, ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் கோரத்தாண்டவம் ஆடி வந்த கொரோனா தொற்று பாதிப்பு, தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. மகாராஷ்டிரா மற்றும் கேரளாவை...

லைசென்ஸ்ச புதுப்பிக்கனுமா? இனி ஆர்டிஓ அலுவலகம் செல்ல வேண்டியதில்லை!

வட்டார போக்குவரத்து அலுவலகம் செல்லாமலேயே, 18 சேவைகளை பெற ஆன்லைன் மூலம் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மக்கள் எளிதில் சேவைகளை பெற அனைத்து துறைகளும் டிஜிட்டல் மயமாகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வட்டார போக்குவரத்து...

தீதி Vs மோடிஜீ: மேற்கு வங்கம் யாருக்கு?

மேற்கு வங்கத்தில் வரும் மார்ச் 27ம் தேதி முதல் 8 கட்டங்களாக 294 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மே மாதம் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு...

Related News

வாக்காளர்கள் இப்படி வந்தால்தான் வாக்களிக்க முடியும்: தேர்தல் ஆணையம் உத்தரவு!

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டு. அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மறுபுறம் அரசியல் கட்சிகள் தேர்தல் வேலைகளை தொடங்கிவிட்டன. தேர்தலில் வெற்றிப்பெற்று ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என அதிமுகவும், ஆட்சியை கைப்பற்ற...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here