Home விளையாட்டு கிரிக்கெட் சூப்பர் ஓவரில் மும்பையை வீழ்த்திய ஆர்.சி .பி; வெற்றி களிப்பில் செவ்வாய் கிரகத்திற்கே சென்ற ரசிகர்கள்!

சூப்பர் ஓவரில் மும்பையை வீழ்த்திய ஆர்.சி .பி; வெற்றி களிப்பில் செவ்வாய் கிரகத்திற்கே சென்ற ரசிகர்கள்!

மும்பை இந்தியன்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கிடையேயான போட்டி டிரா ஆனது அடுத்து ஆர்சிபி அணி சூப்பர் ஓவர் முறையில் மும்பையை வீழ்த்தியது.

ஷார்ஜாவில் நடைபெற்ற போட்டியை போலவே நேற்றும் துபாயில் ஆர்சிபி – மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையிலான நடைபெற்ற போட்டியும் ரசிகர்களுக்கு பிரேஷர், பிபி எகிற வைத்துள்ளது.

இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா முதலில் பந்து வீச தீர்மானித்தார். இதையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களான ஆரோன் பின்ச் 52‌ ரன்னிலும் , தேவ்தத் படிக்கல் 54 ரன்னிலும் அவுட்டாகினர். மூன்றாவது போட்டியில் தேவ்தத் படிக்கல் அடிக்கும் இரண்டாவது அரைசதம் இதுவாகும்.

இதையடுத்து ஆட்டத்தின் கடைசி நான்கு ஓவர்களில் டி வில்லியர்ஸ் அதிரடி காட்ட ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்களை குவித்தது. டி வில்லியர்ஸ் 24 பந்துகளில் தலா நான்கு சிக்சர் நான்கு பவுண்டரி என 54 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

பின்னர் 203 எனும் இமாலய இலக்கை சேஸ் செய்த மும்பை அணி ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சியளித்தது. அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா, வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் நடையைக் கட்ட அவரைத் தொடர்ந்து டி காக், சூர்யா குமார் யாதவ், ஹர்திக் பாண்டியா ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

ஒரு கட்டத்தில் அந்த அணி 11.2 ஓவர்களில் 78 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த தடுமாறிக்கொண்டிருந்தது போது இஷான் கிஷனுடன் ஜோடி சேர்ந்தார் பொல்லார்டு. கடைசி ஐந்து ஓவரில் 90 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் இஷான் கிஷன், பொல்லார்டு இருவரும் பெங்களூர் பந்துவீச்சை பவுண்டரியும், சிக்சர்களுமாக பொளந்துகட்டினர்.

ஆட்டத்தின் இறுதி ஓவரில் மும்பை அணியின் வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அந்த ஓவரில் 1,1,6,6 விளாசிய இஷான் கிஷன் ஐந்தாவது பந்தில் மிட் விக்கெட் சிக்சர் அடிக்க முயற்சித்து படிக்கல்லிடம் பிடிப்பட்டதால் அவர் 99 ரன்களில் ஆட்டமிழந்தார். அதில் இரண்டு பவுண்டரி, ஒன்பது சிக்சர்களும் அடங்கும்.

பின் கடைசி பந்தில் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் பொல்லார்டு பவுண்டரி அடித்ததால் ஆட்டம் சமனில் முடிவடைந்தது.
இதனால் சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது.

இதில் முதலில் பேட் செய்த மும்பை அணி நவ்தீப் சைனியின் அபாரமான பந்துவீச்சால் 1 விக்கெட் இழப்பிற்கு 7 ரன்களை எடுத்தது. இதைத்தொடர்ந்து களமிறங்கிய பெங்களூர் அணி கடைசி பந்தில் வெற்றி இலக்கை எட்டி, நடப்பு சீசனில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.

இதனால் பெங்களூரு ரசிகர்கள் மகிழ்ச்சியில் செவ்வாய் கிரகத்துக்கு சென்றுவிட்டனர். இதன் மூலம் ஆர்சிபி அணி நான்கு புள்ளிகளுடன் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.‌ மறுமுனையில் மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டு புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
Attachments area

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

‘ஈகோ’ என்று கமல் கூறியது இதுதானா? ரஜினியுடன் கூட்டணி சாத்தியமா?

ஈகோ பார்க்காமல் ரஜினியின் சேர்ந்து பணியாற்றுவேன் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்துக் கட்சிகளும் பரப்புரையில் ஈடுபடத் தொடங்கி விட்டன. அதன்படி,...

குடியரசு தின விழா: போரிஸ் ஜான்சன் சிறப்பு விருந்தினராக பங்கேற்பு!

பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். நாட்டின் 72வது குடியரசு தின விழா, வரும் ஜனவரி மாதம்...

மக்கள் சேவை கட்சி., ஆட்டோ சின்னம்: ரஜினி கட்சியின் பெயர், சின்னம்?

தேர்தல் ஆணையத்தில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட பழைய கட்சியை, நடிகர் ரஜினிகாந்த் பயன்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. “ஜனவரியில் கட்சித் துவக்கம். டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு” என நடிகர் ரஜினிகாந்த் தனது...

ஜோ பைடன் வெற்றி– உறுதி செய்த பிரதிநிதிகள் குழு!

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றதை பிரதிநிதிகள் குழு உறுதிப்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கடந்த நவம்பர் 3ம் தேதி அதிபர் தேர்தல் நடந்து முடிந்தது. தேர்தலில் ஜனநாயக கட்சி...

Related News

மீண்டும் ஊரடங்கு அறிவித்த நாடு: இந்த முறை ரொம்ப கடுமையாக இருக்கும்!

சீனாவின் வுகான் மாகாணத்தில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளையே ஒரு உலுக்கு உலுக்கியது என்றே கூறலாம். கொரோனா வைரஸ் எப்போது முடிவுக்கும் வரும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்ப்பு இருக்கிறது....

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here