ஷெல்டான் காட்ரல் வீசிய 18-வது ஓவரில் ராகுல் தேவாட்டியா 5 சிக்சர்கள் அடித்ததால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஐபிஎல்லில் சேஸிங்கில் புதிய சாதனை படைத்துள்ளது.
மீண்டும் ஷார்ஜாவில் ஒரு சிக்சர் மழை; ரசிகர்கள் மிக
நடப்பு ஐபிஎல் சீசன் இன் ஒன்பதாவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. ஷார்ஜாவில் இப்போட்டி நடைபெற்றதால் மீண்டும் சிக்சர் மழை பொழியும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
இதைத்தொடர்ந்து இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய மயங்க் அகர்வால், கே .எல் .ராகுல் ஆகியோர் அணிக்கு சிறப்பான ஓபனிங் தந்தனர். ஒரு பக்கம் கே.எல் ராகுல் நிதானமாகவும் மறுபக்கம் அதிரடியாகவும் விளையாடி வந்த மயங்க் அகர்வால் 45வது பந்தில் சதம் விளாசினார். ஐபிஎல் தொடரில் அவர் விளக்கும் முதல் சதம் இதுவாகும்.
தொடர்ந்து ஆடிய அவர் 50 பந்துகளில் 106 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அதில் 10 பவுண்டரி 6 சிக்சர்கள் அடங்கும். இதனால் பஞ்சாப் அணி 16.3 ஓவர்களில் 183 ரன்களை எடுத்தது. பின் கே.எல்.ராகுல் 69 ரன்களில் ஆட்டமிழந்ததையடுத்து, கடைசி ஓவரில் நிக்கோலஸ் பூரன் அதிரடி காட்ட பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 223 ரன்களை குவித்தது.
224 ரன்கள் எனும் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய ஜோஸ் பட்லர் 4 ரன்களில் ஆட்டமிழந்து அணிக்கு அதிர்ச்சி தந்தார். இருப்பினும் ஸ்டீவ் ஸ்மித், சஞ்சு சாம்சன் ஜோடி ஓவருக்கு ஒரு பவுண்டரி அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தியது.
இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 81 ரன்கள் சேர்த்த நிலையில் ஸ்டீவ் ஸ்மித் 50 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் நான்காவது வரிசையில் ராபின் உத்தப்பா களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆல்ரவுண்டர் ராகுல் தேவாட்டியா களமிறக்கப்பட்டார்.
ஒரு பக்கம் ராகுல் தேவாட்டியா சுழற்பந்து வீச்சாளர்களில் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணற, மறுபக்கம் சஞ்சு சம்சன் சிக்சர் அடித்து கொண்டு இருந்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வெற்றிக்கு கடைசி 4 ஓவரில் 63 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் சஞ்சு சாம்சன் 85 ரன்களில் முகமது ஷமியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இப் போட்டியில் தோல்வி அடையும் என அனைவரும் எதிர்பார்த்தனர்.
இதையடுத்து கடைசி மூன்று வரிகளில் 53 ரன்கள் தேவை என்ற நிலையில் ஷெல்டான் காட்ரல் அந்த ஓவரை வீசினார். அவரது ஓவரை எதிர் கொண்ட ராகுல் தேவாட்டியா ஐந்து சிக்சர்களை அடித்து ஆட்டத்தின் போக்கை மாற்றினார். இதனால் ராஜஸ்தான் அணிக்கு 12 பந்துகளில் 23 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டன. அடுத்து முகமது ஷமி வீசிய 19வது ஓவரில் இரண்டு சிக்சர் அடித்து 32 பந்துகளில் 53 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். பின் கடைசி ஓவரில் இரண்டு ரன்கள் தேவைப்பட்ட நிலையில் மூன்றாவது பந்தில் பவுண்டரி அடித்து மேட்ச்சை ஃபினிஷ் செய்தார் டாம் கரன்.
இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19.3 ஓவர்களில் 224 ரன்களை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் வரலாற்றில் ஜெய் சிங்கின் அதிகாரங்களை படைத்த அணி என்ற சாதனையையும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை படைத்துள்ளது. முன்னதாக 2008 இல் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 215 ரன்கள் எடுக்கப்பட்டதே அதிகபட்ச சேசிங் ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.