Home விளையாட்டு கிரிக்கெட் 1983 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் சம்பளம் இவ்வளவு தானா?!

1983 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் சம்பளம் இவ்வளவு தானா?!

1983 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியாவுக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கும் இடையே நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணி உலகக் கோப்பையைக் கைப்பற்றியது. கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி வெல்ல முடியாத வெஸ்ட் இண்டீஸையும் வீழ்த்திப் பல நாள் கனவை அன்று நினைவாக்கியது. அன்றிலிருந்து இந்திய அணி தனக்கான ஒரு புதிய பாதையை தொடங்கியது.

இந்நிலையில் சமீபத்தில் கிரிக்கெட் கண்காட்சி ஒன்று நடைபெற்றது. அதில் 1983 உலகக் கோப்பை வென்ற பின் இந்திய வீரர்களின் சம்பள விவரங்கள் குறித்த ஷீட் இருந்தது. இதன் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது.

அதில் 1983 உலகக் கோப்பைக்கு பிறகு இந்திய அணி வீரர்களுக்கு ஒரு நாள் சம்பளமாக 200 ரூபாயும், ஒரு போட்டிக்கான சம்பளமாக 1500 ரூபாய் என மொத்தம் ஒவ்வொரு வீரருக்கும் 2100 ரூபாய் சம்பளமே வழங்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

ஏனெனில் தற்போதைய கிரிக்கெட் வீரர்கள் இதை விட பன்மடங்கு சம்பளம் வாங்குகின்றனர். பிசிசிஐ தற்போது வீரர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆண்டு சம்பளம் வழங்கி வருகிறது. அதன்படி ஏ பிளஸ், ஏ, பி மற்றும் சி ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் சம்பளம் வழங்கப்படுகிறது. ஏ பிளஸ் பிரிவில் உள்ளவர்களுக்கு ஆண்டுக்கு 7 கோடி ரூபாய் சம்பளமும், ஏ பிரிவில் 5 கோடியும், பி பிரிவில் உள்ளவர்களுக்கு 3 கோடி என சம்பளம் வழங்கப்படுகிறது. ஏ + பிரிவில் விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ஜஸ்பிரீத் பும்ரா ஆகிய மூன்று வீரர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள்.

சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் ஒவ்வொரு இந்திய வீரருக்கும் ஒரு போட்டிக்கு 6 லட்சம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. டி 20க்கு 3 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது.

கிரிக்கெட் தரத்தை உயர்த்திய அன்றைய கபில் தேவ் தலைமையிலான அணி இல்லையென்றால் தற்போது இந்திய அணியின் நிலை வேறுபட்டிருக்கும் என்பதே நிதர்சனம்.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

குலை நடுங்குகிறது: வெங்கட்பிரபுவின் “லைவ் டெலிகாஸ்ட்” எப்படி இருக்கு?

வெங்கட்பிரபு இயக்குனராக அறிமுகமாக நினைத்ததும் அவரது முதல் கதை லைவ் டெலிகாஸ்ட் கதைதானாம். இந்த சீரிஸ் ராகவா லாரன்ஸ் நடித்த காஞ்சனா-2-வின் தழுவலாக இருக்கிறது. லைவ் டெலிகாஸ்ட்டில் பேய்யை நேரடியாக மக்களுக்கு காட்ட...

கொரோனா தடுப்பூசி போடும் போதும் ஒரு அரசியல்: மோடி உடனிருந்த நாலு பேர்?

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள, கொரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், இந்தியாவில், சீரம்...

சர்கார் வியூகம் அமைக்கும் கமல்ஹாசன்: வேறலெவலில் இருக்கப்போகும் தமிழக சட்டப்பேரவை தேர்தல்!

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்படத் தொடங்கியுள்ளன. ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் ஐபேக் பிரசாந்த் கிஷோர் ஆலோசனையில் திமுக செயல்பட்டு வருகிறது. ஆட்சியை தக்கவைக்கும் நோக்கில்...

அன்றே தொடங்கிய பனிப்போர்: ஊசலாடும் புதுச்சேரி காங்கிரஸ் அரசு!

புதுச்சேரியில் அடுத்தடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து வருவதால், முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசுக்கு பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணி தலைமையிலான அட்சி கடந்த 2016ம் ஆண்டில் இருந்து நடைபெற்று...

Related News

இவரை CSK ஏலம் எடுத்ததும் அரங்கமே கைதட்டல் குவிந்தது: அட அர்ஜுன் டெண்டுல்கரும் லிஸ்ட்ல இருக்காரு!

ஐபிஎல் 2021-க்கான ஏலம் விறுவிறுப்பாக சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் டெஸ்ட் போட்டியில் ஆதிக்கம் செலுத்தும் புஜாரா ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்கு ஆர்வம் காட்டினார். ஆனால் அவரை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை....

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here