Home விளையாட்டு கிரிக்கெட் பேர்ஸ்டோ அதிரிடியில் சரிந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப்!

பேர்ஸ்டோ அதிரிடியில் சரிந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப்!

துபாயில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 22ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தியது.

நடப்பு ஐபிஎல் தொடரில் புள்ளிகள் பட்டியலில் ஆறாவது இடத்தில் இருந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, கடைசி இடத்தில் உள்ள பஞ்சாப் அணியை எதிர்கொண்டது. இவ்விரு அணிகளுக்குமே இப்போட்டி முக்கியமான போட்டியாகவே கருதப்பட்டது. துபாயில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் வார்னர் முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தார்.

அதைத்தொடர்ந்து, ஹைதராபாத் அணியின் ஓப்பனிங் வீரர்களாக வார்னர் பேர்ஸ்டோ களமிறங்கி பஞ்சாப் பவுலர்களை பவுண்டரிகளும், சிக்சர் களவுமாக சிதறடித்தனர். இதனிடையே 19 ரன்கள் எடுத்திருந்த போது பேர்ஸ்டோ தந்த கேட்சை பஞ்சாப் கேப்டன் கே.எல். ராகுல் தவறவிட்டார். இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பேர்ஸ்டோ வானவேடிக்கை காட்டினார்.

இந்த ஜோடி 16 ஓவரில் 160 ரன்களை சேர்த்த நிலையில் வார்னர் 50 ரன்களில் ஆட்டமிழந்தார். பஞ்சாப்புக்கு எதிராக அவர் அடிக்கும் தொடர் ஒன்பதாவது அரைசதம் இதுவாகும். வார்னரை அடுத்து ரவி பிஷ்னாய் ஓவரில் பேர்ஸ்டோவும் 97 ரன்களில் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை நூலளவில் மிஸ் செய்தார். இதில் ஏழு பவுண்டரி, ஆறு சிக்சர் அடங்கும்.

இறுதியில் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 201 ரன்களை குவித்தது. பஞ்சாப் அணி தரப்பில் ரவி பிஷ்னாய் மூன்று,. அர்ஷ்தீப் சிங் இரண்டு, முகமது ஷமி ஒரு விக்கெட்டுகள் எடுத்தார்.

இதைத்தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணியில் நிக்கோலஸ் பூரன் மட்டுமே அணியின் வெற்றிக்காக போராடினார். ஆனால் அவருக்கு துணையாக யாரும் நிலைத்து ஆடவில்லை. 37 பந்துகளில் ஐந்து பவுண்டரி, ஏழு சிக்சர்‌ உட்பட 77 ரன்களில் மூன்றும் ஆட்டமிழந்தார். இறுதியில் பஞ்சாப் அணி 16.5 ஓவர்களில் 132 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதனால் ஹைதராபாத் அணி இப்போட்டியில் 69 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஹைதராபாத் அணி சார்பில் ரஷீத் கான் மூன்று விக்கெட்டுகளும், நடராஜன், கலீல் அஹமத் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளும், அபிஷேக் ஷர்மா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

சசிகலா விஷயத்தில் மௌனம்: தனி ரூட்டில் பயணிக்கும் ஓபிஎஸ்!

பெங்களூரு சிறையிலிருந்து விடுதலையான சசிகலா குறித்து இதுவரை எவ்வித கருத்தும் தெரிவிக்காமல், துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளரும் ஓ.பன்னீர்செல்வம் மௌனம் காத்து வருகிறார். சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த...

பொதுநலன் கருதி “தூது”- தேர்தல் நேரத்தில் இதெல்லாம் சந்திக்கனும்- உஷார் மக்களே!

தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவித்த நாளில் இருந்தே தேர்தல் நடத்தை விதிகள் அமல் படுத்தப்பட்டது. தங்களது பகுதிகளில் திடீரென சாலைகள் முளைக்கும். முளைக்கும் சாலைகள் பாதியோடு அறுபட்ட நிலையில் இருக்கலாம் காரணம்...

குலை நடுங்குகிறது: வெங்கட்பிரபுவின் “லைவ் டெலிகாஸ்ட்” எப்படி இருக்கு?

வெங்கட்பிரபு இயக்குனராக அறிமுகமாக நினைத்ததும் அவரது முதல் கதை லைவ் டெலிகாஸ்ட் கதைதானாம். இந்த சீரிஸ் ராகவா லாரன்ஸ் நடித்த காஞ்சனா-2-வின் தழுவலாக இருக்கிறது. லைவ் டெலிகாஸ்ட்டில் பேய்யை நேரடியாக மக்களுக்கு காட்ட...

கொரோனா தடுப்பூசி போடும் போதும் ஒரு அரசியல்: மோடி உடனிருந்த நாலு பேர்?

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள, கொரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், இந்தியாவில், சீரம்...

Related News

சர்கார் வியூகம் அமைக்கும் கமல்ஹாசன்: வேறலெவலில் இருக்கப்போகும் தமிழக சட்டப்பேரவை தேர்தல்!

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்படத் தொடங்கியுள்ளன. ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் ஐபேக் பிரசாந்த் கிஷோர் ஆலோசனையில் திமுக செயல்பட்டு வருகிறது. ஆட்சியை தக்கவைக்கும் நோக்கில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here