Home விளையாட்டு கிரிக்கெட் ஐபிஎல்லில் வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் மும்பை வீரர் தற்கொலை!

ஐபிஎல்லில் வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் மும்பை வீரர் தற்கொலை!

ஐபிஎல் தொடரில் விளையாட வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் மும்பையைச் சேர்ந்த 27 வயது கிரிக்கெட் வீரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் மதம் போல பார்க்கப்படும் கிரிக்கெட்டில் எதாவது ஒரு அணிக்காக விளையாட வேண்டும் என்ற கனவோடு ஏராளாமான வீரர்கள் உள்ளனர்.

குறிப்பாக போதிய வசதிகளும் வாய்ப்புகளும் இல்லாத திறமையுள்ள வீரர்களை ஐபிஎல் உலகிற்கே வெளிச்சம் போட்டு காட்டியது. இதனால் ஐபிஎல்லில் விளையாட வேண்டும் என்ற ஏக்கத்துடன் பலர் காத்துக்கொண்டு இருக்கின்றனர்.

சில பல காரணங்களால் வெகு சிலருக்கு மட்டுமே இந்த வாய்ப்பு கிடைத்தாலும் பலர் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்துக் கொண்டிருந்து ஏமாந்தது ஏராளம்.

அதிலும் கிரிக்கெட்டை யே உயிராக நினைக்கும் ஒரு சிலர் இந்த ஏமாற்றத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் விபரீதமான முடிவுகளை எடுத்து தங்களது வாழ்வையே முடித்துக் கொள்கின்றனர். இந்த அவலநிலை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இந்நிலையில், ஐபிஎல் தொடரில் விளையாட வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் மும்பையைச் சேர்ந்த 27 வயது கிரிக்கெட் வீரர் தற்கொலை செய்து கொண்டார். மும்பை கோகுல்தம் பகுதியைச் சேர்ந்தவர் கிரிக்கெட் வீரர் கரண் திவாரி(27). தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயினைப் போலவே பந்துவீசும் சாயலைப் பெற்றதால், கரணை அப்பகுதி மக்கள் ‘ஜூனியர் டேல் ஸ்டெயின்’ என்றே அழைத்துவந்தனர்.

இந்த நிலையில், கடந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் கரண் திவாரியை வாங்க எந்த அணியும் முன் வராததால், கடந்த சில மாதங்களாக மனவுளைச்சலில் இருந்தார். இதன் விளைவாக அவர், கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி தனது அறையிலிருந்த மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.தனக்கு ஐபிஎல்லில் வாய்ப்பு கிடைக்காத மன உளைச்சலில் தான் தற்கொலை செய்து கொள்ள போவதாக தனது நண்பரிடம் தொலைபேசியில் தெரிவித்துள்ளார்.

அதேசமயம் அவரது பயிற்சியாளர், உள்ளூர் கிளப் அணிகளில் அவருக்கு வாய்ப்பை ஏற்படுத்துவதற்காக முயற்சிகளை மேற்கொண்டு வந்த நிலையில் கரண்ணின் இந்த விபரீத முடிவு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

‘ஈகோ’ என்று கமல் கூறியது இதுதானா? ரஜினியுடன் கூட்டணி சாத்தியமா?

ஈகோ பார்க்காமல் ரஜினியின் சேர்ந்து பணியாற்றுவேன் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்துக் கட்சிகளும் பரப்புரையில் ஈடுபடத் தொடங்கி விட்டன. அதன்படி,...

குடியரசு தின விழா: போரிஸ் ஜான்சன் சிறப்பு விருந்தினராக பங்கேற்பு!

பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். நாட்டின் 72வது குடியரசு தின விழா, வரும் ஜனவரி மாதம்...

மக்கள் சேவை கட்சி., ஆட்டோ சின்னம்: ரஜினி கட்சியின் பெயர், சின்னம்?

தேர்தல் ஆணையத்தில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட பழைய கட்சியை, நடிகர் ரஜினிகாந்த் பயன்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. “ஜனவரியில் கட்சித் துவக்கம். டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு” என நடிகர் ரஜினிகாந்த் தனது...

ஜோ பைடன் வெற்றி– உறுதி செய்த பிரதிநிதிகள் குழு!

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றதை பிரதிநிதிகள் குழு உறுதிப்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கடந்த நவம்பர் 3ம் தேதி அதிபர் தேர்தல் நடந்து முடிந்தது. தேர்தலில் ஜனநாயக கட்சி...

Related News

மீண்டும் ஊரடங்கு அறிவித்த நாடு: இந்த முறை ரொம்ப கடுமையாக இருக்கும்!

சீனாவின் வுகான் மாகாணத்தில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளையே ஒரு உலுக்கு உலுக்கியது என்றே கூறலாம். கொரோனா வைரஸ் எப்போது முடிவுக்கும் வரும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்ப்பு இருக்கிறது....

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here