Home விளையாட்டு கிரிக்கெட் சிஎஸ்கே-விற்கு திரும்பு சின்ன தலை...ஈ சாலா கப் நம்தே...!

சிஎஸ்கே-விற்கு திரும்பு சின்ன தலை…ஈ சாலா கப் நம்தே…!

சிஎஸ்கே அணிக்காக நான் இன்னும் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகள் விளையாடுவேன் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

கரோனா தொற்றுப் பரவல் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன், இந்த மாதம் 19ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து அணி வீரர்களும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்று ஒரு வார காலம் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா, தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்து, கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி நாடு திரும்பினார்.

அணி நிர்வாகத்திற்கும் ரெய்னாவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டாலேயே அவர் தாயகம் திரும்பியதாகத் தகவல் வெளியானது. இந்தக் குற்றச்சாட்டை வலுப்படுத்தும் விதமாக சிஎஸ்கே உரிமையாளர் சீனிவாசன், “யார் வேண்டுமானாலும் அணியில் இருந்து விலகலாம், நான் யாரையும் கட்டாயப்படுத்தப்போவதில்லை” என்று தெரிவித்தது மேலும் சர்ச்சையைக் கிளப்பியது. இந்தச் சூழலில் பஞ்சாப்பில் தனது உறவினர்கள் கொலை செய்யப்பட்டதன் காரணமாகவே ஐபிஎல் தொடரிலிருந்து விலகியதாக ரெய்னா தெரிவித்தார். மேலும், சிஎஸ்கே உரிமையாளர் சீனிவாசன் தனது தந்தையைப் போன்றவர் என்றும், தன்னைத் திட்ட அவருக்கு முழு உரிமை உள்ளது என்றும் ரெய்னா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சிஎஸ்கே உரிமையாளர் சீனிவாசன் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், “நான் அவரை (ரெய்னா) எனது மகன் போலவே நடத்தினேன். பல ஆண்டுகளாக ஐ.பி.எல் தொடரில் சிஎஸ்கே வெற்றிகரமாக இருக்கக் காரணம், கிரிக்கெட் விஷயங்களில் ஒருபோதும் உரிமையாளர் தலையிடுவதில்லை என்பதே. இந்தியா சிமென்ட்ஸ் 60களில் இருந்து கிரிக்கெட்டுடன் தொடர்பில் இருந்து வருகிறது. நான் எப்போதும் அப்படியே (கிரிக்கெட் விஷயங்களில் தலையிடாமல்) இருப்பேன். அணிக்கு ரெய்னா மீண்டும் திரும்புவாரா என்பது குறித்து எனக்குத் தெரியாது.

நாங்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அணிகளில், ஒரு அணி (சிஎஸ்கே) எங்களுடையது. ஆனால் இங்கு விளையாடும் அனைத்து வீரர்களும் எங்களுக்குச் சொந்தமில்லை. அணி எங்களுடையதுதான், ஆனால் வீரர்கள் இல்லை. நான் ஒன்றும் கிரிக்கெட் கேப்டன் அல்ல. அணியில் யார் விளையாட வேண்டும், யாரை ஏலத்தில் எடுக்க வேண்டும் என்று நான் அவர்களிடம் (அணி நிர்வாகத்திடம்) ஒருபோதும் சொல்லியதில்லை. மிகச் சிறந்த கேப்டன் எங்களிடம் இருக்கிறார். எனவே, கிரிக்கெட் விஷயங்களில் நான் ஏன் தலையிட வேண்டும்?” எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய ரெய்னா, ‘சிஎஸ்கே அணி என்னுடைய குடும்பம். அதுமட்டுமில்லாமல் தோனி எனக்கு மிகவும் முக்கியமான நபர். மேலும் யாரும் ரூ.12.5 கோடியை திடமான காரணமின்றி விட்டுச்செல்ல மாட்டார்கள். நான் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றிருக்கலாம், ஆனால் இன்னும் நான் இளமையாகதான் உள்ளேன். அதனால் இன்னும் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகள் சிஎஸ்கே அணிகாக நான் விளையாடுவேன். மேலும் சிஎஸ்கே அணியின் உரிமையாளர் சீனிவாசன் எனக்கு ஒரு தந்தையைப் போன்றவர். அவர் எப்போது என்னை ஒரு மகனாக நினைத்து மட்டுமே பழகியுள்ளார். அதனால் அவர் என்னைப் பற்றி கூறியதை எனது தந்தை கூறியதாகவே நான் கருதுகிறேன். மேலும் இந்தாண்டு ஐபிஎல் தொடரிலும் நீங்கள் என்னை காணலாம்’ என்று தெரிவித்தார்.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

ஸ்ரீரெட்டிக்கு அடித்த ஜாக்பாட்: அந்த நடிகையின் வாழ்க்கை வரலாறு படத்துக்கு இவுங்கதான் சரி!

தெலுங்கு திரையுலகில் நடிக்க வாய்ப்புக்காக நடிகைகளை பலாத்காரம் செய்யும் பழக்கம் இருக்கிறது என்ற புகார்களோடு தமிழகத்துக்குள் நுழைந்த ஸ்ரீரெட்டி தமிழ் திரையுலகில் விஷால், ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தொடர்ந்து...

ஏன் 120/80 இருந்தால் நார்மல் ரத்த அழுத்தம்., இது ஒவ்வொருவருக்கும் வேறுபடுமா?

முன்பெல்லாம் 50 வயதுக்கு மேற்பட்ட சில நபர்களுக்கு மட்டுமே ரத்த அழுத்தம் இருப்பதாக கேள்விப்பட்டிருப்போம். தற்போது, 30 வயதுடையவர்கள் கூட பி.பி. இருப்பதாக சர்வ சாதாரணமாக கூறிவிட்டு செல்கின்றனர். இதனால், ரத்த அழுத்தம்...

சசிகலா விஷயத்தில் மௌனம்: தனி ரூட்டில் பயணிக்கும் ஓபிஎஸ்!

பெங்களூரு சிறையிலிருந்து விடுதலையான சசிகலா குறித்து இதுவரை எவ்வித கருத்தும் தெரிவிக்காமல், துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளரும் ஓ.பன்னீர்செல்வம் மௌனம் காத்து வருகிறார். சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த...

பொதுநலன் கருதி “தூது”- தேர்தல் நேரத்தில் இதெல்லாம் சந்திக்கனும்- உஷார் மக்களே!

தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவித்த நாளில் இருந்தே தேர்தல் நடத்தை விதிகள் அமல் படுத்தப்பட்டது. தங்களது பகுதிகளில் திடீரென சாலைகள் முளைக்கும். முளைக்கும் சாலைகள் பாதியோடு அறுபட்ட நிலையில் இருக்கலாம் காரணம்...

Related News

குலை நடுங்குகிறது: வெங்கட்பிரபுவின் “லைவ் டெலிகாஸ்ட்” எப்படி இருக்கு?

வெங்கட்பிரபு இயக்குனராக அறிமுகமாக நினைத்ததும் அவரது முதல் கதை லைவ் டெலிகாஸ்ட் கதைதானாம். இந்த சீரிஸ் ராகவா லாரன்ஸ் நடித்த காஞ்சனா-2-வின் தழுவலாக இருக்கிறது. லைவ் டெலிகாஸ்ட்டில் பேய்யை நேரடியாக மக்களுக்கு காட்ட...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here