சீனாவின் வூஹான் நகரில் உருவான கரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை ஆட்க்கொண்டுள்ளது. இது இந்தியாவை விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் தற்போதுவரை கரோனா வைரஸ் பரவல் அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. இருந்தபோதிலும், இதனைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இதனால் பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கால் திறக்கமாலும், விளையாட்டு போட்டிகள் நடக்கமாலும் உள்ளன. இதில் டொக்கியோவில் இந்த ஆண்டு நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டியும் அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சர்வதேச செஸ் கூட்டமைப்பின் சார்பில் ஆன்லைனில் ஜுலை 22ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 30ஆம் தேதி வரையிய் செஸ் போட்டிகள் நடத்தப்பட்டுவருகிறது. இதில்,9ஆவது மற்றும் இறுதிச் சுற்றில் இந்திய அணி, சீன அணியுடன் மோதியது. இதில் 4-2 என வென்று இந்திய அணி காலிறுதிச் சுற்றுக்கு நுழைந்துள்ளது. ஏ பிரிவில் முதல் இடம் பிடித்துள்ள இந்திய அணி தனது காலிறுதி ஆட்டத்தை ஆகஸ்ட் 28 அன்று விளையாடவுள்ளது.
இதில் சென்னையைச் சேர்ந்த 15 வயது பிரக்ஞானந்தா, சீனாவின் லியூ யானைத் தோற்கடித்துள்ளார். இதன்மூலம் இப்போட்டியில் பங்கேற்ற ஐந்து ஆட்டங்களிலும் அவர் வெற்றி பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி, தரவரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ள சீனாவை ஏழாம் இடத்தில் உள்ள இந்தியா தோற்கடித்து ஆச்சர்யப்படுத்தியுள்ளது. லீக் சுற்றில் விளையாடிய ஒன்பது ஆட்டங்களில் எட்டு ஆட்டத்தில் இந்திய அணி வென்றுள்ளது.
காலிறுதியில் கலந்து கொண்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த சிறுவன் பிரக்னா நந்தா, வெற்றி பெற்று முன்னேறியுள்ளது, தமிழ்நாட்டிற்கு மட்டுமின்றி இந்தியாவிற்கே பெருமை சேர்த்துள்ளது எனலாம்.
பிரக்னா நந்தா இறுதிப் போட்டியிலும் வென்று வாகைச் சூட வாழ்த்துகள்.